உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 ஆல்ட்டோ, ஆல்வார்‌

176 ஆல்ட்டோ, ஆல்வார் 1930 களின் இடையில் உலகத்திலேயே மிகச் சிறந்த புதுமையான கட்டிடக் கலையியல் வல்லுநர் என்று ஏற்கப்பட்டார். மற்றவர்களைப் போலல்லா மல் இவருக்கென்று தனிப் பாணி இருந்தது. உலகத் தில் பெருமைவாய்ந்தபின்லாந்து வகை அரங்குகளை வடிவமைத்ததால் (பாரிசில் 1937 இலும், நியூயார்க் கில் 1939 இலும்) கட்டிடக்கலையியலில் மேலும் இவருக்குப் புகழ் கிடைத்தது. இந்த வடிவமைப்பு களில் கட்டுமானத்திற்கும், மேற்பரப்பிற்கும் (Surface ) அவர் மரத்தைப் பயன்படுத்தினார். 1938 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள அவரு டைய படைப்புகளைப் புதுமைக்கலைப் பொருட்காட் சியில் (Museum of Modern Art) வைத்ததால் அவர் புகழ் மேலும் பரவியது. அப்பொருட்காட்சியில் அவ ருடைய கட்டிடங்களின் ஒளிப்படங்களும் இருக்கை களும் காட்சிக்கு வைக்கப்பட்டன. இருக்கைகளைப் பற்றி ஆராய்வதை (experiment) அவர் 1930 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் பைமி யோவில் புற்றுநோய் மருநதகம் தொடங்கியபோதே தொடங்கினார். மரப்பட்டையடுக்கால் செய்யப் பட்ட நாடா போன்ற அமைப்பினால் ஆன இருக் கைகள் மிகவும் பெயர் பெற்றவை. நீண்ட உழைப் பிற்கும், கட்டுமானத்திற்கும் ஏற்ப, அவை வடி வமைக்கப்பட்டன. கலைச்சுவைஞரும், தொழிலது பரின் மனைவியுமான மரியா குல்லிசென்னும் Mairea Gullichsen) ஆல்ட்டோவும் சேர்ந்து 1935 ஆம் ஆண்டு ஆர்டெக் குழுமத்தைத் (Artek Com - pany) தோற்றுவித்தனர். இருக்கைகளைச் செய்வதும் அவற்றை விற்பனை செய்வதும் இந்தக் குழுமத்தின் பணிகளாகும். ஆல்ட்டோவின் கைவண்ணங்கள் பின் லாந்தில் நூர்மார்க்கூவுக்கு அருகில் குல்லி சென்னுக் காகக் கட்டப்பட்ட மரியாவில்லா என்னும் வீட்டில் காணப்படுகின்றன. முதிர்ச்சி அடைந்த கலைப் பாணி. ஆல்ட்டோ விற்கு 1940 இல் அவ்வளவு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. அக்காலக் கட்டத்தில் போராலும் மனைவியின் இறப்பாலும் அவரது வாழ்க்கையில் ஆம் ஆண்டு எல்லிசா சிதறல் ஏற்பட்டது. 1952 மாகிரீமி ( Ellissa Makiniemi) என்ற கட்டிடக் கலை யியல் பயிற்சியாளரை மணந்தார். ஆல்ட்டோவுக்குக் கிடைத்த ஆணைகள் 1950 ஆம் ஆண்டிற்குப் பின், எண்ணிக்கையில் அதிகரித் ததால் அவருடைய புகழ் மேலும் பரவியது. 1958 இல் பிரெமனில் (Bremen) உருவாக்கிய உயரமான பல அடுக்குக் கட்டிடமும், 1966 இல் பொலோனா வில் (Bologna) கட்டிய ஒரு மாதாக்கோயிலும் (church), 1970 இல் இரானில் (Iran) அமைந்த கலை அருங்காட்சியகமும் (art museum) ஆல்ட்டோவின் உயரிய படைப்புக்களாகும். ஆல்ட்டோவின் பல செயல்முறைத் திட்டங்கள் கட்டிடங்களுக்கு அமைப் புப் படங்கள் (site plan) வரைவதே ஆகும். ஒதநீமி. ஜிவாஸ்கைலா (Jyvaskyla) ஆகிய இரு கல்லூரி களுக்கு முக்கியமான அமைவுப் படங்கள் (master- plan) வரைவதே இவரது செயல்முறைத் திட்டங்க ளில் ஒன்றாகும். அமைவுப்படம் வரைவதில் ஆல்ட் டோவின் திறமை முன்னாளில் சுனிலா செல்லு லோஸ் தொழற்சாலையை (Sunila cellulose factory) வடிவமைக்கத் தொடங்கியபோதே தோன்றி வளர்ந்து வந்ததாகும். ஆல்ட்டோவின் முதிர்ச்சியடைந்த கலைப் பாணியை விளக்கும் ஒரே வேலை சேநாட்சலோ (Saynatsalo ) ஆகும். இது சிவப்புச் செங்கல், மரம், செம்பு (copper) ஆகிய மரபுவழிப் பொருட்களாலான (traditional materials) எளிமையான அமைப்பு கொண்டுள்ளது. இதைப் பார்க்கும்போது முழுமை யான கட்டிடம் ஒன்றைக் காணும் உணர்ச்சி ஒரு வருக்கு ஏற்படுகிறது. கேம்பிரிட்ஜில் உள்ள மசாகுசெட் தொழில் நுட்ப நிறுவனத்தில் கட்டிடக் கலையியல் துறையில் 1945 முதல் 1949 வரை ஆல்ட்டோ பேராசிரியரா கப் பணிபுரிந்து வந்தார். அப்போது இவர் இரண்டு கட்டிடங்களை வடிவமைத்தார். அவற்றில் ஒன்று ஓரிகானில் (Oregan) உள்ள மவுண்ட் ஏஞ்சல் அபே (Mount Angel Abbey) என்னும் நூலக மாகும். மற்றொன்று சார்லஸ் நதிக்கரையில் உள்ள பேக்கர் ஹவுஸ் கூடம் (Baker House Dormitary) என்னும் கட்டிடமாகும். பேக்கர் ஹவுஸ் முருடான சிவப்புச் செங்கல்லாலான (rough red brick) ஆறு அடுக்குகள் கொண்ட பாம்பு போல் வளைந்த வடிவமைப்புடையது. இதில் உள்ள ஒவ்வொரு விடுதி முற்றமும் (dormitary room) பார்வைக்கு ஆற் றிலிருந்து சற்று மேலாகவோ, கீழாகவோ ஆப்பு வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது. பேக்கர் ஹவு சைப் போலவே மவுண்ட் ஏஞ்சல் அபெ நூலகமும் (Mount Angel Abbey Library) ஆல்ட்டோவின் சூழ லைச் சார்ந்து கட்டிடக்கலையை வடிவமைக்கும் திற மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இது கல்லூரியாகவும், கருத்தரங்கக் கட்டிடமாகவும் இயங்கியது. இது கீழ்நோக்கிச் சரிந்த பல மட்டம் கொண்ட தரையுடன் அமைந்துள்ளது. இதில் புத்தக அலமாரிகள் ஆரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆல்ட்டோ பல முறை தம் தகுதிக்காகப் பல நிறுவனங்களால் பாராட்டப் பட் டார். இவர் தொடகக காலத்தில் இங்கிலாந்து கல் விக்கழகத்தின் (England Academy) உறுப்பினராக இருந்தார். மேலும், 1963 முதல் 1968ஆம் ஆண்டு வரை அக்கழகத்தின் தலைவராக இருந்தார். 1928 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை அனைத் துலகப் புதுக்கட்டிடக்கலைக் கழகத்தின் (Congress Internationale D' Architecture) உறுப்பினராக