உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்ட்டோ, ஆல்வார்‌ 175

ஆல்ட்டோ, ஆல்வார் பின்லாந்து நாட்டுக் கட்டிடக் கலைஞரும், நகரத் திட்டமிடல் வல்லுநருமான ஆல்ட்டோ ஆல்வார் 1898 ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 3ஆம் நாளன்று உருசியப் பின்லாந்தில் உள்ள குவர்த்தேன் (Kuortane) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் இருக் கைகள் (furnitures) வடிவமைப்பதில் வல்லவர். இவரது வடிவமைப்புகளில் பொலிந்த புதுமை நயமும், மென்மையும், அழகியலும் (aesthetics), அறிவு முதிர்வும் (maturity) இவருக்கு அனைத் துலகப் புகழை ஈட்டித் தந்தன. ஆல்ட்டோ ஆல்வார் தொடக்க காலப் பணிகள். இவர் பின்லாந்து நாட்டில் உள்ள ஒதநீமியில் (Otaneimi) அமைந்த ஹெலின்ஸ்கி நகரிலுள்ள தொழில்நுட்ப நிறுவனத் தில் கட்டிடக்கலைப் படிப்பைத் தொடங்கினார். இவரது கல்வி பின்லாந்து நாட்டு விடுதலைப் போரால் தடைப்பட்டது. இப்போரில் இவர் தமது முழு ஈடுபாட்டையும் செலுத்தினார். 1921இல் பட்டம் பெற்றதும், ஆல்ட்டோ ஐரோப்பா முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். சுற்றுப் பயணத்திலிருந்து திரும்பியதும் நடுப் பின்லாந்தில் உள்ள ஸ்வாசுகிலா நகரில் இவர் தம் பணியைத் தொடங்கினார். 1925 இல் இவர் ஐனோமார்சியோ எனும் ஆய்வு மாண வியை மணந்து கொண்டார். இவரது மனைவியார் வாழ்நாள் முழுதும் இவரது தொழில் துணையாகத் திகழ்ந்தார். இவர்களுக்குக் குழந்தைகள் இருவர் பிறந்தனர். 1927 ஆம் ஆண்டு டர்க்கு (Turku) நகருக்குத் தமது அலுவலகத்தை மாற்றினார். 1933 ஆம் ஆண்டு வரை அங்கு இவர் எரிக் பிரிக் ஆல்ட்டோ, ஆல்வார் 175 மனுடன் (Erick Briggman) பணிபுரிந்தார். பின்னர் 1933 இல் ஹெலின்ஸ்கி நகரை அடைந்தார். இவரது வாழ்க்கையில் 1926, 1927 ஆம் ஆண்டு கள் மிக முக்கியமானவை ஆகும். ஏனெனில் இவ்விரு ஆண்டுகளும் இவருக்குப் பெரும்புகழைத் தேடித் தந்தன. இக்காலக் கட்டத்தில் தான் இவர் மூன்று பெருங்கட்டிடங்களைக் கட்டுவதற்கான ஆணை களைப் பெற்றார். அவற்றைக் கட்டி உலகப் புகழும் உற்றார். அக்கட்டிடங்கள், டர்க்கு நகரின் டருன் சனோமாக் கட்டிடம், பைமியோ (Paimio) நகரின் என்புருக்கி மருத்துவ அகம் (Tuberclosis sanatorium), வைப்புரி (Vaipuri) நகரின் நகராட்சி நூலகம் என்பனவாகும். ன் முன்னர்க் குறிப்பிட்ட இரு கட்டிடங்களும் பின் லாந்து நாட்டு வழக்கப்படி பொதுக் கட்டிடங்களைக் கட்டுவதற்கான வணிகப் போட்டியில் வென்றவை. இந்த இரு கட்டிடங்களுமே மரபுவழிக் கட்டிடக் கலைப் பாணி எதையும் பின்பற்றாது நேரடியாக உருவாக்கப்பட்ட புதுமைப் படைப்புகளாவதுடன் 1920 இல் நிலவிய பின்லாந்து நாட்டின் எளிய செந்நிலைத் தரத்தினை விஞ்சிய தலையாய கலைப் படைப்புகளுமாகும். இவை 1925-26 இல் ஜெர்மனி யில் தேசெ (Dessaie ) நகரில் வடிவமைப்புப் பள்ளிக் காக வால்டேர் குரோப்பியஸ் (Walter Gropius) என்பார் நிறுவிய கட்டிடத்தை நினைவூட்டின. குரோப்பியசைப் போலவே, ஆல்ட்டோவும் மென் மையான வெண்பரப்பு, நாடா அமைந்த சாளரங்கள் தட்டையான கரைகள், கூரைத் தளங்கள்,பலகணிகள் ஆகிய கட்டிட அமைப்புக் கூறுபாடுகளை இவற்றில் பயன்படுத்தினார். மூன்றாவது கட்டிடமான வைப்புரி நகராட்சி நூலகம் (Viipuri municipal library), ஐரோப்பிய முன்படிமங்களான குரோப்பியஸ் மற்றும் பிற கலை ஞர்களின் பண்களை ஒத்து அமைந்திருந்தாலும், இந் நூலகம் ஆல்ட்டோவின் கலையுணர்வின் தனித் தன்மையையும் வேறுபடுத்தி வெளிக்கொ ணர்ந்தது. உட்புறம் உள்ள அகலமான இடம் பல் வேறு மட்டத்தில் அமைக்கப்பட்டது. நகராட்சி நூல் கத்தில் உள்ள கலையரங்கிற்கு மரப்பட்டைகளால் நெளிவமைப்புடைய கூரையை வடிவமைத்தார். வியப்பூட்டும் வகையில் அவர் தாமே வடிவமைத்த வளைந்த மரப்பட்டையடுக்கால் செய்த இருக்கைகள் பொது மக்களையும், தொழில் வல்லுநர்களையும் கவர்வனவாக அமைந்தன. உலர்ந்த இழையாப்பு களால் ஆன மரக்கூரை வெண்மையான கட்டிடத் திற்கு மேலும் அமைந்தது. அழகூட்டுவதாக தளத்தின் மட்டத்தை வேறுபடுத்துதல் போன்ற வற்றைத் தொடர்ந்து, இயற்கைப் பொருள்களையும் கூரை விளக்குகளையும் ஒழுங்கற்ற வடிவத்தையும் (irregular form) பயன்படுத்தினார்.