உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ஆல்காக்கள்‌

174 ஆல்காக்கள் இருந்து இணையும் இனச்செல்கள் ஒரே அளவாக பாலினப்பெருக்கம் ஏற்படுவதை ஐசோகேமி என்றும், வெவ்வேறு அளவினை உடைய இனச்செல்களினா லேற்படுவதை அனிசோகேமி என்றும், நகராத ஓர் இனச்செல் நகரக்கூடிய ஒரு சிறிய இனச்செல் இணை வதை இனச்செல் இணைவு என்றும் முறையே கூறப் படும். நகரும் இனச்செல்களிலும் சூஸ்போர்களி லும் கசையிழைகள் காணப்படுகின்றன. பசும்பாசி களின் சூஸ்போர்களின் இரு கசையிழைகள் முன்புற மாக இணைந்துள்ளன. இவற்றை முறையே விப்லாஷ் (Whiplash), டின்செல் (Tinsel) வகையின என்பர். விலங்கினங்களில் குறிப்பாக எலும்பு அற்றவை களின் உடலின் மீதோ அல்லது அவற்றின் உள்ளேயோ பல ஆல்காக்கள் காணப்படுகின்றன. இவற்றை ஜூசாந்தெல்லே (Zoozanthellae) என்பர். ஜூசாந் தல்லே கடல்நீரிலும், ஜூகுனோரல்லே (Zoochlorellae நன்னீரிலும் வாழ்கின்றன. எ.கா. குளோரெல்லா (Chlorelle), பிளாட்டி மொனாசு (Platymonas ) இவை மட்டுமின்றி தட்டைமீன்கள் ஆகிய (founeders) இவை முட்டைகள் பொரிப்பதற்கு மிலோசிரா (melosira) எனும் ஆல்கா உதவுகிறது. முட்டை கள் கருவுற்றவுடன் ஒரு புள்ளியில் கூட்டமாகச் சேருகின்றன. மையத்திலுள்ள முட்டைகள் உடன் டியாக இறந்துவிடுகின்றன. ஆனால் இந்நிலை யில் மிலோ சீரா எனும் டயாட்டம் (Diatom). மி மிதவை உயிரினத்தொகுதியில் (plankton) இருக்கு மாயின் முட்டைகள் கூட்டமாகச் சேருவது குறைக் கப்படுவதுடன் நிறைய அளவு ஆக்சிஜன் (oxygen) கிடைப்பதற்கும் காரணமாயிருக்கின்றது. இது நிறைய தட்டை மீன்கள் உயிர் வாழ்வதற்கு உதவி யாய் இருக்கின்றது. ஆல்காக்களில் பல் இனங்கள் தொல்லுயிர் எச்சங்களாகக் (fossil remains) காணக்கிடைக் கின்றன. பசுநீலப்பாசிகள், டையாட்டம்கள், கொகோலிதோஃபோர்கள் (coccolithophores) ஆகி யவை பெரும் எண்ணிக்கையில் தொல்லுயிர் எச்சங் களாகக் காணப்படுகின்றன. இவற்றுள் பசுநீலப் பாசிகளே மிகப் பழமையானவை. இவை இரு பில்லி யன் (billion) ஆண்டுகளுக்கு முற்பட்டவைகளாகக் கருதப்படுகின்றன. சுண்ணாம்புச்சத்து, சிலிக்கா (silica) அதிகமுள்ள உடலமைப்பைக் கொண்ட தொல்லுயிர் டயாட்டம்களால் நன்கு பாதுகாக்கப் பட்டுள்ளன. பொருளாதாரச் சிறப்பு. ஆல்காக்களிலிருந்து பல வாணிகப் பொருள்கள் பெறப்படுகின்றன. இவை செல்உறை பொருள்களிலிருந்து கிடைக்கும் அகார் (agar), அல்ஜினின் அமிலம் (algini acid), கெராஜீன் (carrageen), டயாட்டமண் (Diatomaous earth) ஆகியவைகளாகும். முதல் மூன்று பொருள் ஆல்காக்களான கள் கடல்வாழ் கிரேசிவேரியா (Gracilaria), கைகார்ட்டினா (Gigartina) மாக்ரோ சிஸ்ட்டிஸ் (Macrocystis), லேமினேரியா (Laminaria), காண்டிரஸ் (chondrus), யூசுமா (Euchuma) ஆகிய வற்றிலிருந்தும், நான்காவது சுவையான நன்னீர் நிலைகள் அல்லது கடல்களில் வாழும் டயாட்டம்களின் செல் உறை பொருள்களிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. பல்வேறு தொழில்துறைகளில் திடப்படுத்தும் பால்ம மாக்கியாகப் (emulsifer) பயன்படுகின்றன. பல உணவுப் பண்டங்களைத் தயாரிக்க உதவுகின்றன. ஐஸ்கீரிம், ஆகியவை செய்வதற்குப் பயன்படுகின்றன. அகார் பெரும் அளவில் அழகு மணப் பொருள்கள் (cosmetics), லோஷன் (lotion) ஆகியவற்றில் சேர்க்கப்படுகின்றது. அகார் கரைசல் திடப்படுத்தும் திறன் பெற்றது என்பதால் பல வகைகளில் பயன்படுத்தப் படுகிறது. டயாட்டமண் பொதுவாக வடிப்பானாகப் பயன்படுத்தப் படுகிறது. டயாட்டம் செல் உறையில் சிலிக்கான் (silicon) பெரு மளவில் இருப்பதால் அது கொதிகலன்களில் காப்புப் பொருளாகவும் (insulator) உலோகங்களுக்கு மெருகு கொடுக்கவும் உபயோகிக்கப் படுகிறது. இதைப் பயன்படுத்தி டைனமைட்டு (dynamite) தயாரிக்கின் றார்கள். ஒளிரும் வண்ணப்பொருள், பற்பசை ஆகியவற்றின் தயாரிப்பிலும் இது இடம் பெறு கின்றது. லேமினேரியா (lamineria) சர்காசும் (sargassum). மாக்ரோசிஸ்ட்டிஸ் (macrocystis) ஆகிய வற்றில் கனிமப் பொருள்கள் இருப்பதால் அவற்றை எருவாகப் பயன்படுத்துகின்றனர். பல பசுநீலப் பாசிகள் நெல்வயல்களில், காற்றிலுள்ள நைட்ர ஜனை (nitrogen) நிலைப்படுத்தி நைட்ரேட்டு (nitrate) வளத்தினை அதிகரிக்கின்றன. சில ஆல் காக்கள் நச்சுத்தன்மையுடையவை. மைக்ரோ சிஸ்ட்டிஸ், அன்பீனா (anabaena) போன்றவை நச்சு ஆல்காக்களாகும்.இவை அதிகம் வளர்ந்துள்ள நீரைக் குடிக்கும் விலங்கினங்களும் மனிதர்களும் இறக்க நேரிடும். அசிட்டபுளேரியா (Acetabularia) கோண் டிரசு போன்ற சில ஆல்காக்கள் மருந்துகளாகப் பயன்படுகின்றன. நூலோதி சீரே. தரண்யகுமார் 1. Fritach, F.E., The Structure and Reproduction of Algae, 2 Vols, The University Press, Cam- bridge, 1945. 2. Round, F., The Biology of the Algae, St. Mar- tins Press, New York, 1973. 3.Trainor, F.R.. Introductory Phycology, John Wiley & Sons, New York, 1978. 4. The Wealth of India, Vol 1, CSIR Publication. New Delhi, 1894.