உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்காக்கள்‌ 173

எபாக்சைடுகளும் ஆல்கஹாலுடன் வினைபுரிந்து - ஹைட்ராக்சி ஈதர்களைத் தருகின்றது. இவ்வினை அமிலம் அல்லது காரங்களை வினையூக்கிகளாகக் கொண்டு நீ - ஹைட்ராக்சி ஈதர்களை விளைபொரு ளாகத் தருகிறது. B - ஹைட்ராக்சி ஈதர்கள் கரைப் பான்களாகப் (எ.கா. செலோசால்வ்) பயன் படுத்தப்படுகின்றன. ஆல்காக்கள் எஸ்.பி.சீனிவாசன் ஆல்கா (olga) என்பது இலத்தீன் மொழியில் கடற்பாசி எனும் பொருளுடையது. கடற்பாசி பச்சையம் ஏ (chlorophyll A) எனும் நிறமியி னைக் கொண்டு ஒளிச்சேர்க்கை நடத்திக்கொள்ளும் ஒருவகை உயிரினமாகும். எனவே ஏனைய தாவரங் களிலிருந்து பெரிதும் வேறுபட்டிருப்பினும் இது தாவரமே. நுண்ணோக்கி மூலம் அறியப்படு கின்ற மிகச் சிறியவை முதல் கண்ணுக்குப் புலனாகின்ற பெரியவை வரை ஆல்காக்கள் (olgae) காணப்படுகின்றன. இவற்றின் உடலைத் தாலசு (Thallus) என்பர். இவற்றில் காற்றுக் குழாய்த் திசுக் கள் காணப்படுவதில்லை. இனப்பெருக்க உறுப்புகள் மிக எளிய அமைப்புக் கொண்டவை. ஆல்காக்கள் வெவ்வேறு வகையான உடலமைப்பும், உருவும், அளவும் கொண்டவை. வை பெரும்பாலும் நீர் நிலைகள், மண்பரப்பு, சில சமயங்களில் மரப்பட் டைகளிலும் இலைகளின் பரப்புக்களிலும் மற்ற உயிரி னங்களின் உடல் மீதும் உடலினுள் கூட்டுயிராகவும் (symbiont) வாழ்கின்றன. பூஞ்சையுடன் (iungi) இணைந்து ஒருவகைக் கூட்டு உயிரினமாகவும் காணப் படுகின்றன. ஓர் ஆல்கா மற்றோர் ஆல்காவுடன் இணைந்து வாழ்வதுண்டு. எடுத்துக்காட்டாக ரைசோசொலினிபா (Rhizosolenia) என்னும் டயாட்ட ரிகிலியா (Rihelia) என்னும் பசும் நீலப்பாசி கூட்டுயிராக வாழ்கின்றது. மூன்று மைக்ரான்களிலிருந்து 1 மைக்ரான் (1/1000 மி.மீ) விட்டமுடைய ஒற்றைச் செல் உடலமும், 62 மீட்டர் நீளமுடைய கெல்ப் (Kelp) எனும் கடற் பாசிகளும் உள்ளன. ஆல்காக்களில் ஏறக்குறைய 25,000 சிற்றினங்கள் உள்ளன. மலை உச்சிப் பகுதி களிலுள்ள படர்ந்த பனிப் பகுதிகள் (0° செ.) நிவாலிஸ் பசுமை நிறமடைய கிளாமிடோமோனாஸ் (Chlamydomonas nivalis) காரணமாகின்றன. ஆசில்ல டோரியா (Oscillatoria) அக்காந்தஸ் (Achanthus) கூடு நீர் ஊற்றுகளில் வாழ்கின்றன. நகரும் (mobile) தனிச் செல்லும் (single cell), நகராச் செல்லே உடலாக உடையவையும், கூட்டமைவுத் (colony) தனிச்செல்களும், சவ்வினால் (mucilage) இணைக்கப் படுதல், இழை உடலம் (filamentous body), கிளைத்த மின் புரோட்டோபிளாசத்தில் ஆல்காக்கள் 173 இழைஉடலம்,வேர்,தண்டு, அமைப்புகளை உடை யனவும் கேரா (chara) நைடெல்லா (nitella) என்பன வும் உயர் வகைத் தாவரங்களைப் போன்று வேர், தண்டு, இலைகளைப் பெற்றுள்ளலையுமாகப் பல (caulerpa) உள்ளன. பச்சையம் ஏ, பி, பசுமைநிறத் தையும், ஃபைக்கோசயானின் (Physocyanium) பசும் நீல நிறத்தையும், சாந்தோஃபில் (Xanthophyll), பீட்டா கரோட்டின் (P carotene) செம்மை நிறத்தை யும், ஃபைக்கோ எரித்திரின் (Phyco erythrin) சிவப்பு நிறத்தையும், ஃப்கோசாந்தின் (Fucoxanthrin) இளஞ் சிவப்பு நிறத்தையும், டைஅடினோசாந்தின் (Diade- moxanthin) பசுமஞ்சள் நிறத்தையும் ஆல்காக்களுக்கு முறையே கொடுக்கின்றன. வண்ணக்கணிகங்கள் பலவாக இருப்பினும் அனைத்திலும் பச்சையம், ஏ.பி. உள்ளதால் அவை உணவைத் தயாரித்துக்கொள்கின்றன. உணவுப் பொருள்கள் ஆல்காக்களைப் பொறுத்துப் பல்வேறு வகைப் பொருள்களாகச் சேமிக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாகப் பசும் நீலப் பாசிகளில் (cyano- phyceae) கிளைக்கோஜன் (glycogen), பசும் பாசி களில் (chlorophyceae) மாவுச்சத்து, எண்ணெய்; சிவப்புநிறப் பாசிகளில் (rhodophyceae) புளோரிடி யன் மாவுச்சத்து (floridean starch) பழுப்பு நிறப் (Phaeophyceae) பாசிகளில் குளூக்கான வகையான லேமினாரின் (laminarin), மேனிட்டால் (mannitol கொழுப்புச்சத்து, பொன்னிறப் பாசிகளில் (chryso- phyceae) கிரைசோலே லேமினாரின் (chrysolamion arin) ஆகியவை செரிப்புப் பொருள்களாகக் காணப் படுகின்றன. ஆல்காக்களில் பலமுறைகளில் இனப்பெருக்கம் ஏற்படுகின்றது. செல் பிரிதல் ( cell division), இழை துண்டாதல் (fragmentation), தனிவகை இனப் பெருக்கச் செல்களை உருவாக்குதல், இனச்செல்கள் (gametes), ஸ்போர்கள் (spores) ஆகியவற்றின் உதவி யால் இவற்றில் இனப்பெருக்கம் ஏற்படுகின்றது. இந்த இனப்பெருக்கச் செல்கள் இருவகைப்படும். அவை நகராதவை {non-mobile), நகருபவை (mobile) என்பனவாகும். நகரும் செல்கள் கசையிழைகளைப் (cilia) பெற்றுள்ளன. பாலில்லா இனப்பெருக்கத்தின் (asexual reproduction) பொழுது தோற்றுவிக்கப் படும் செல்கள் சூஸ்போர்கள் (zoospores) எனப்படும். பாலினப்பெருக்கத்தின்(sexual reproduction)பொழுது உருவாகும் இனச்செல்கள் (gamete) அளவு, உருவம் ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன. இனச்செல்களின் வகைகளைப் பொறுத்து ஏற் படுகின்ற பாலினப் பெருக்கம் ஒத்த இனச்செல் இணைவு (isogamy), உருவேறுபட்ட இனச்செல் இணைவு (anisogamy) இனச்செல் இணைவு (Oogamy) என மூவகைப்படும். பாலினப் பெருக்கம் இரு இனச் செல்கள் இணைவதால் நடைபெறும் நிகழ்ச்சியாகும். வு