உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 ஆல்கஹாலாற்‌ பகுப்பு

172 ஆல்கஹாலாற் பகுப்பு பொருள்கள், வண்ணங்கள், ஆகியவை கலந்துள்ளன. பீர்,சிதர், கிளாரெட், போர்ட் போன்ற காய்ச்சி வடிக்கப்படாத மதுபானங்களில் மூன்று முதல் இரு பது விழுக்காடு வரையிலும், பிராந்தி, ஜீன், ரம், விஸ்கி போன்ற காய்ச்சி வடிக்கப்பட்ட மதுபானங் களில் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு வரையி லும் எத்தனால் உள்ளது. மதுபானங்களைச் சிறி தளவு உட்கொள்ளும் போது உடலில் புதுத்திறன் உண்டாகிறது. ஆனால் தொடர்ந்து அருந்தி வந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு,நினைவாற்றல் குறைவதுடன், ஈரல், இரைப்பை முதலியவற்றில் நோயுண்டாகும். அருந்துவதற்குப் பயன்படும் ஆல்கஹால் மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றிற்குத் தேவையான ஆல்கஹால் வரியின்றிக் கிடைக்கிறது. ஆனால் இத் தகைய ஆல்கஹாலுடன் ஃபார்மலீன், மெத்தனால், பிரிடீன் போன்ற நச்சுப் பொருள்கள் சேர்க்கப்பட்டு அது அருந்தத் தகுதியற்றதாகச் செய்யப்படுகிறது. இத் தகைய ஆல்கஹாலுக்கு இயல்பு நீக்கப்பட்ட ஆல்க ஹால் (denatured spirit) என்று பெயர். தற்காலத்தில் பெட்ரோல் குறைவாக உள்ள நாடுகளில், ஆல்கஹாலுடன் ஈதர், பென்சீன் ஆகிய வற்றைக் கலந்து உள்கனல் பொறிகளில் (internal combustion engines) பயன்படுத்துகிறார்கள். இது திறன் ஆல்கஹால் (power alcohol) என்று அழைக்கப் படுகிறது. இரு ஹைட்ரிக் ஆல்கஹாலான எத்திலீன் கிளைக் கால் உந்து வண்டிகளில் உள்ள கதிர் வீசியில் (radiator) குளிர்விக்கும் நீர் உறைந்துவிடாமல் தடுக்கப் பயன்படுகிறது. நீருடன் 40% கிளைக்கால் சேர்க்கும்போது கலவையின் உறைநிலை -40°C ஆகக் குறைகிறது. மேலும் வானூர்திகளின் இறக் கையில் பனிக்கட்டி படியாமல் தடுக்கவும், வானூர் திகளின் பொறிகளைக் குளிர்விக்கவும் கிளைக்கால் பயன்படுகிறது. இவை தவிர, கரைப்பானாகவும், பாலியூரித்தேன் பல்லுறுப்பாக்கல் (polymerisation ) வினைகளிலும், டெரிலீன் (terrylene ) போன்ற செயற்கை இழை தயாரிப்பிற்கும் பயன்படுகிறது. மூஹைட்ரிக் ஆல்கஹாலான கிளிசரால் நீர்க்கும் தன்மையுடையதாகையால், அதனுடன் சேர்ந்திருக் கும் பொருள்களை உலராமல் தடுக்கிறது. எனவே, கிளிசரால் தோல்பதனிடவும், நூலிழைகளைத் தொய்யும் தன்மையுடையவையாக்கவும், மிருதுவாக்க வும், புகையிலையைப் பதப்படுத்தவும், சவரச் சவர்க்காரம், தோல், மெழுகு, அச்சடிக்கும் மை, முத்திரை மை, தட்டச்சு மை முதலியவற்றை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. வெடி மருந்துகள் தயாரிப்பிற்கும் கிளிசரால் பயன்படு கிறது.அழகு சாதனங்களிலும் ஒளிபுகும் சவர்க்காரம் தயாரிப்பிற்கும் பயன்படுகிறது. குளுக்கோஸ், ஃபுரொக்ட்டோஸ், ஸ்ட்டார்ச் போன்ற பல்ஹைட்ரிக் ஆல்கஹால்கள் உணவுப் பொருளாகவும், இனிப்புப் பண்டங்களாகவும் பெரிதும் பயன்படுகின்றன. செல்லுலோஸ் போன் றவை செயற்கை இழைகள், திரைப்பட ஃபிலிம்கள், வெடிமருந்துகள், தாள் ஆகியவை தயாரிக்கப் பயன் படுகின்றன. காண்க, ஃபீனால்கள். நூலோதி க. சேதுராமன் Finar, I.L., Organic Chemistry, Vol. I, Sixth Edition, ELBS, London, 1982. ஆல்கஹாலாற் பகுப்பு ஆல்கஹாலைப் பயன்படுத்தி ஒரு பொருளைப் பகுத் தல் ஆல்கஹாலாற் பகுப்பு (alcoholysis) எனப்படும். ஓர் ஆல்கஹால் அமிலக் குளோரைடு, அமில நீரிலி (acid anhydride) அல்லது எஸ்ட்டருடன் வினை புரிந்து மற்றோர் எஸ்ட்டரைக் கொடுக்கிறது. இவ் வினை ஆல்கஹாலாற் பகுப்பு என்று அழைக்கப் படுகிறது. எடுத்துக்காட்டாக, அசெட்டைல் குளோ ரைடு அல்லது அசெட்டிக் நீரிலி எத்தனாலுடன் (ethanol) வினைபுரிந்து எத்தில் அசெட்டேட்டைக் கொடுக்கிறது. ஓர் எஸ்ட்டர் மற்றோர் ஆல்கஹாலுடன் வினைபுரிந்து வேறோர் எஸ்ட்டர் தருவதற்கு எஸ்ட் டர் பரிமாற்றுவினை (transesterification) என்று பெயர். இந்த வினையில் ஓர் ஆல்கஹால் மற்றோர் ஆல்கஹாவை எஸ்ட்டரிலிருந்து வெளிப்படுத்துகின் றது. மேலே கூறப்பட்டுள்ள இந்த வினை அமிலம் அல்லது காரத்தை வினையூக்கியாகக் கொண்டது. எஸ்ட்டர் பரிமாற்றுவினை ஒரு சமநிலை வினை யாதலால் எந்த ஆல்கஹாலினுடைய எஸ்ட்டர் வேண்டுமோ அந்த ஆல்கஹாலை அதிகமாகப் பயன் படுத்த வேண்டும் அல்லது ஏதாவது ஒரு விளை பொருளை அகற்ற வேண்டும். மேலே கூறப்பட்ட எடுத்துக்காட்டுகளைத் தவிர சயனைடுகள், அமில அமைடுகள், எப்பாக்சைடுகள் (epoxides) ஆகியவையும் ஆல்கஹாலுடன் வினைபுரி கின்றன. ஓர் ஆல்கஹால் சயனைடு கலவையில் உலர் (ஈரமற்ற) ஹைட்ரஜன் குளோரைடு வளிமத்தைச் செலுத்தினால் இமினோ எஸ்ட்டரின் ஹைட்ரோ குளோரைடு உப்புக்கிடைக்கிறது. இது நீர்த்த அமி லத்துடன் சேர்ந்து ஒரு எஸ்ட்டரைக் கொடுக்கிறது. இது சயனைடுவகை ஆல்கஹாலாற் பகுப்பு எனப் படும்.