ஆல்ஃபாக் கதிர்கள் 195
அயனியாக்கத் திறன் அதிகரிக்கிறது. பின்னர் திடீ ரென்று சுழியாகிறது. & துகள்கள் மெதுவாகச் செல்லும்போது அவற்றின் வழியில் உள்ள ஒரு குறிப்பிட்ட அணுவின் அருகில் அதிக நேரம் இருப் பதால் இவ்விளைவு ஏற்படுகிறது. மேலும் & துகளின் இயங்கெல்லை வளிமத்தின் அடர்த்தி எண்ணுக்கு அதாவது வளிமத்தின் அழுத் தத்துக்கு எதிர்விகிதத்தில் உள்ளது என ஆய்வுகள் வாயிலாக உறுதி செய்யப்படுகிறது. துகளின் டாதையில் ஓர் அலகு நீளத்தில் & துகளால் ஏற்படுத் தப்படும் அயனிகளின் எண்ணிக்கை அயனியாக்கம் என வரையறுக்கப்படுகிறது. ஒப்பு அயனியாக்கத் துக்கும் நீளத்துக்கும். உள்ள தொடர்பு படத்தி லுள்ள (படம் 5) வளைகோட்டினால் குறிக்கப்பட முடியும். இயங்கெல்லையின் உய்யகட்ட விரைவை அடையும்போது பிராக் எழுச்சியை வரைபடம் காட்டு கிறது. மேலும் வரைபடம் சிறிதான வால் அல்லது நெளியும் விளைவையும் காட்டுகிறது. காற்றில் 15°C முதல்76°C வெப்பநிலையில் வெளி யிடப்படும் கதிரியக்கப் பொருள்களில் இருந்து வெளி வரும் துகள்கள் யாவும் ஒரே தொடக்க வேகத்துடன் உமிழப் படுவன அல்ல என்பதால், அவை யாவும் ஒரே சமயத்தில் இயங்கெல்லையை அடைவதில்லை. இந்தக் காரணத்தால் வால் விளைவு ஏற்படுகிறது. படம் 6, வளிம அழுத்தத்துக்கும் & துகளால் ஏற் படுத்தப்படும் அயனியாக்க மின்னோட்டத்துக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கிறது. மின்னோட்ட மானது வளிம அழுத்தம் கூடும்போது முதலில் நேர்விகிதத்தில் அதிகமாகிறது. ஒரு அதிகமாகிறது. ஒரு குறிப்பிட்ட அழுத்தத்துக்குப் பிறகு மின்னோட்டம் தெவிட்டிய எல்லை (saturation) மதிப்பை அடைகிறது. துகள்களின் பொருண்மை எலக்ட்ரான் பொருண்மையை விட அதிகமாதலால், எலக்ட்ரான் அயனியாக்க மின்னோட்டம் அ.க. R வளிம அழுத்தம் படம் 6 வளிம அழுத்தமும் ஆயனியாக்க மின்னோட்டமும் 3-13அ ஆல்ஃபாக் கதிர்கள் 195 களை இடித்துத்தள்ளி அயனியாக்கம் செய்யும்போது, அவற்றின் பாதையிலிருந்து அதிகம் விலக்கப்படுவ தில்லை. ஆனால், அரிய சந்தர்ப்பங்களில் கனமான சிறிய அணுக்களுடன் மோதும்போதும், துகள்கள் அதிக அளவு விலக்கப்படுகின்றன. இப்பெருங் கோணச் சிதறல் அணுக்கருப் படிம அமைப்புக்கு வழிகாட்டியது என்பது உண்மை. மேற்கூறிய நிகழ்ச்சிகளை ஆக்சிஜன் கொண் டுள்ள முகிற்கலம் வழியே & துகள்கள் செல்லும் போது எடுக்கப்பட்ட முகிற்கல ஒளிப்படத்திலிருந்து தெளிவாகக் காணலாம் (படம் 7). சுவடுகளின் முடிவில் உள்ள திடீர் வளைவுகள் அலைந்து திரியும் பலனால் ஏற்படுத்தப்படுகின்றன. படம் 7 இல் கனச் சுவடுகள் தனியொரு பெருங்கோணச் சித றலைத் தருகின்ற & துகளுக்கும் ஆக்சிஜன் அணுக் கருவுக்கும் இடையே ஏற்படும் நெருக்கமான மோதலைக் குறிக்கின்றன. கவையின் குட்டையான தடித்த கிளை பீன் உதைப்பு ஆக்சிஜன் அணுக்கருவை யும், நீண்ட மெல்லிய கிளை சிதறிய a துகளையும் குறிக்கின்றன. படம் 7.ஆக்சிஜன் அடங்கிய முகில் கலத்தில் துகளின் சுவடுகள் மீண்டும் கவைச்சுவடுகளை வெளியிடத்தில் கட்டமைப்பதின் மூலம் அவற்றிற்கு இடையேயுள்ள கோணங்கள், இயங்கெல்லைகள் முதலியவற்றை அளவிட்டு மோதலின் தன்மை பற்றிச் சிறப்பான செய்திகளைப் பெறமுடிகிறது. கனமான தனிமங்களைப் பொறுத்தவரை அவற் றின் அணுக்கருவின் மிக அருகில் செல்ல & துக களுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், லேசான தனிமங்களிலோ தலைகீழ் விகித விதி பலனற்றுப் போகும் பகுதிக்குள் செல்லுமளவுக்கு அணுக்கரு மையத்தின் மிக அருகில் & துகள்கள் செல்ல முடி யும். ஆல்ஃபாக் கதிரியக்கம் ஒரு முழு அணுக்கரு நிகழ்ச்சியாகும். மேலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட அணு அமைப்பின்படி, அணுக்கருவுக்கு வெளியே எலக்ட்ரான்களைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதால், துகள்கள் அணுக்கருவிலிருந்தே வெளி வந்திருக்கவேண்டும் எனத் தெரிகிறது. அவை