444 ஆற்றல், நிலக்கரி
444 ஆற்றல், நிலக்கரி மேற்பரப்புச் சுரங்கமிடுதலின் புதிய முறைகளில் ஒருங்கிணைந்த சுரங்கமிடும் அமைப்பு வேலையாக முறையில் எடுக்கப்பட்ட நிலக்கரியை ஒன்றுசேர்த் தல், தோண்டப்பட்ட இடத்தை நிரப்புதல் அந்த இடத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக அமைத்தல் போன்ற செயல்களில் தோன்றும் பிரச் சினைகளைச் சரிசெய்யப் புதிய முறைகள் அப்ப லேசியச்சுரங்கத்தில் கையாளப்பட்டன. இரண்டாம் முறையாக நிலக்கரிச் சுரங்கத்தின் மேற்சுமையினை (overburden) ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத் திற்குக் கொண்டு செல்வதற்கு அதிகச்செலவாகும். இதனைத் தவிர்க்கச் சுரங்கப் பொறியாளர்கள் மேற்கூறப்பட்ட செயல்கள் யாவற்றையும் ஒரே நேரத்தில் செய்து முடிப்பதற்கான முயற்சியை மேற் கொள்ள வேண்டும். நிலத்தைச் சமப்படுத்துவதற்கான புதிய முறை களில் கீழ்க்காண்பவை அடங்கும். அவை எல்லாவித மான அமிலத்தன்மையும் நச்சுத்தன்மையும் வாய்ந்த பொருட்களைப் புதைத்தல், மேல்நிலத்தினைப் பிரித் தல், மாற்றியமைத்தல், அந்நிலத்தினைச் சற்றேறக் குறைய முன்பிருந்த உருவத்தைப் போன்றவாறே மீண்டும் உருவாக்குதல் என்பனவாகும். எல்லாவிதச் சுற்றுப்புறச் சூழ்நிலைக் கட்டுப் பாடுகளையும் சந்திப்பதற்கு ஏற்ற வடிவமைப் பினைக் கொண்ட உருவரை சார்ந்த நிலக்கரிச் சுரங்கமிடும் புதிய முறைகளில் (new contour mining methods) அடங்குவன, (1) கொண்டு செல்லுதல் (haul back), (2) பள்ளத்தாக்கினை நிரப்புதல் (valley fill), (3) மலைமீது சமன்படுத்தும் முறை (mountain top levelling method) என்பனவாகும். இம்முறை கள் யாவும் பல வகைகளில் குறிப்பிடத்தக்கவாறு வேறுபட்டிருந்தாலும், இவற்றில் பொருள்கள் பக்க வாட்டாகப் பலகை மீது நெடுகில் கொண்டுசெல்லப் படுகின்றன.இம்முறைகளில்வெளிப்புறச் சரிவுப் பகுதி கொட்டப்படும் யின் வழியாக இப்பொருட்கள் தில்லை. இம்முறைகள் எல்லாவற்றிலும் நிலக்கரிப் மேலமைந்த சுமையினையும் படுகையின் burden) கழிவுப் பொருள்களையும் (waste material ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவது குறைக்கப்படுகிறது அல்லது அறவே நீக்கப்படுகின்றது. ஒப்புமைக்காகப் படம் 5 இல் உரு வரை சார்ந்த நிலக்கரிச் சுரங்கம், அகழ்தலின் மரபு முறை காண்பிக்கப்பட்டுள்ளது. (over கொண்டுசெல்லும் முறையின் முதன்மையான இயக்கக் கோட்பாடு யாதெனில், தொடக்கக் காலத்தில் தோண்டி எடுத்ததைத் தவிர்த்து மற்ற தேவையற்ற பொருள்களும் வெளிப்புறச் சரிவுப் பகுதியின் வழியாக வெளியேற்றப்படுவதற்குப் பதி லாக பலகை மீது நீளப்போக்கில் பக்கவாட்டில் நகர்த்தப்படுவதாகும். இத்தகைய போக்குவரத்து முறையில் இரண்டு அடிப்படையான முறைகள் அமைகின்றன. அவை யாவன, நிலச் சமனிடும் எந்திரங்களைப் (scrapers) பயன் படுத்துதல் (காண்க, படம் 8), சுமை யேற்றிச்செல்லும் வண்டிகளைப் பயன்படுத்து தல் (காண்க,படம் 7) என்பனவாகும். இவ்விரண்டு முறையில் எம்முறையைப் பயன்படுத்திய போதிலும், அமிலத்தன்மை வாய்ந்த பொருள்களின் மீது, அமிலத்தன்மையற்ற மேற்சுமையாயமைந்த பாறை அல்லது களிமண் வைக்கப்படுகிறது. இவ்வாறு அமைப்பது மறுசீரமைத்த பின்னர் மரங்கள், பயறு இனச்செடிகள் முதலியவை வளர்வதற்கு ஏற்றதா கிறது. ஒரு நிலச்சமனிடும் எந்திரத்தின் மண்ணைக் கொண்டு செல்லும் இயக்கத்தினை அனுமதிக்க. நிலத்தின் தன்மையும் பளுப்பொருளின் இயல்பும் மேலமைய உகந்ததாய் அமையவேண்டும். நிலக்கரிப் பள்ளத்தின் முன்னேறும் முகப்பிலமைந்த (advancing face of the pit) மேலமைந்த சுமைப்பொருளைச் நிலச் சமனிடும் எந்திரம் பெற்றுக்கொண்டு நிரப்ப வேண்டிய பகுதியில் நிரப்புகின்றது. கருத்தியலான நிலச் சமனிடும் எந்திரம் குறைந்த தேய்மானத் தைக் கொண்டு வேகமான சுழற்சியுடைய சமயங் களில் சுமையேற்றிப் பின்னர் பள்ளத்தை நிரப்ப வேண்டும். இம்மண் வாரிச் சமனிடும் எந்திரம் நிலக்கரியின் மேலமைந்த அமிலத்தன்மை வாய்ந்த நற்பொருள்களைச் சுமையேற்றும்போது, இது அவ் வெந்திரம் சுமையேற்றிய பின்னர் வெறிதான சுரங்கப்பள்ளத்தின் அடியில் கொட்டிப் பின்னர்ப் பரப்பி விடுகின்றது. பின்னர் இதன் மேல்புறம் அமிலமற்ற பொருள்களைக் கொண்டு மூடப்படு கின்றது. இவ்வாறு கொட்டப்படும் மேலமைந்த சுமையினால் பழைய நிலைக்கு நிலப்பகுதி கொண்டு வரப்படும்போது உருள் தடத்தின் மீது ஊர்ந்து சரிவான செல்லும் எந்திரக்கலப்பை பகுதிகளைச் சமன்படுத்துகின்றன. வண்டிகள் சுமையேற்றிச் செல்லும் வண்டிகளைப் பயன் படுத்திக் கொண்டுசெல்லும் முறையில் உருள் தடத்தின் மீது ஊர்ந்து செல்லும் எந்திரக் கலப்பை வண்டிகளையும் சக்கரச் சுமையேற்றம் செய்யும் வண்டிகளையும் தூரத்திலமைந்த நெடுஞ் சாலைகட்குச் சுமையேற்றிச் செல்லும் வண்டிகளை யும் பயன்படும் மண்வாரிச் சமனிடும் எந்திரங்கள் வேலை செய்வதைப் போன்றவாறே நிரப்பவேண்டிய பகுதிகளில் அடிப்பகுதியில் அமிலத்தன்மை வாய்ந்த பொருள்கள் கொட்டப்படுகின்றன. இவ்வாறு அமைப்பதால் இதன் மீது அமிலத்தன்மையற்ற