உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 457

பிடும்போது) நிலக்கரி தேவைப்படும். நிலைத்த இயக்கத்தை அடைவதற்கும், குழாயினடியில் கூடுத லான தேய்வினைத் தவிர்க்கவும், ஒருமித்த பாய்வு (குழாய்விட்டக் குறுக்கில் திண்மப் பொருள்கள் சமமாகப் பகிர்ந்தமைவது) முதன்மையானதாகும். சரி இதே அளவிற்கு முதன்மை வாய்ந்ததாயும், கொண்டுசெல்லப்படும் நிலக்கரியின் அளவிற்கு நேர டித் தொடர்புடையதாயும் அமைவது கொண்டு செல்லப்படும் வேகத்தினைத் தகுந்தவாறு தேர்ந் தெடுப்பதே. அளவுக்கு மீறிய உயர் அழுத்தக் குறைவு தோன்றாதிருக்கவும், குழாய் வழியில் மிகுந்த அள வில் உராய்வு தோன்றாதிருக்கவும், வேகம் மிக அதி கமாக அமையக்கூடாது. இதற்கு நேர்மாறாகச் செலுத்தப்படும் வேகம் மிகக் குறைவாக இருக்கும் போது மிகுந்த அளவு தேய்வு குழாயினடியில் உண் டாகும். வழக்கமாக, செயல்முறை சார்ந்த இயக்க வேகங்கள் ஒரு நொடிக்கு 1.3 முதல் 2.3 மீ. வரைக் குள் அமையும். இறுதியாக முக்கிய அளபுருவான நிலக்கரி நீர்மக் கலவையின் செறிவூட்ட அளவைத் தீர்மானிக்கவேண்டும். ஒரு ஆய்வுக் கூடச் சோத னையிடும் கருவிகளைக் கொண்டு வழங்கப்பட்ட நிலக்கரி - நீர்மக் கலவையின் செறிவூட்டத்திற்கும், பிசுப்புத் தன்மைக்கும் உள்ள தொடர்பினைக் கண்ட றியலாம். வேறுபட்ட நிலக்கரி நீர்மக் கலவைகளுக் கான செறிவூட்டத்திற்கும் பிசுப்புத் தன்மைக்கும் உள்ள வேறுபாடு வேறுபட்டாலும், எல்லா அமைப் புகளும் பொதுவாக ஒரு விலகும் புள்ளியையே காட்டுகின்றன. இப்புள்ளியில் செறிவூட்டத்தைச் சிறிது உயர்த்துவதனால் பிசுப்புத்தன்மை மிகுந்த அளவில் உயர்வடைவதைக் காணலாம். மிகையான வேகங்களில் இயக்காமல் நல்லதொரு இயக்கத்தை வழங்க இவ்விலக்கப்புள்ளிக்கும் கீழேயமைந்த செறி வூட்ட எல்லையில் இயக்கப்படுவது முக்கியமானது. நிலக்கரிக்கான நடைமுறைசார்ந்த செறிவூட்ட எல்லை 45% முதல் 55% அளவுள்ள திண்மப்பொருள் களின் அளவாகும். குழாய் வழியாக நிலக்கரி நீர்மக்கலவையினை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லும் நல்வாய்ப்புகள் நன்றாக அமைகின்றன. அமெரிக்க ஒன்றிய நாடுகளின் மேற்குப் பகுதி பெரும்பாலும், மிகுந்த அளவு நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ளது. இவ்வளத்தைத் தக்கவாறு பயன் படுத்தினால் பல நூற்றாண்டுகள் வரையில், அந்நாட் டிற்குப் போதும். அமெரிக்க ஒன்றிய நாடுகளில் சுரங்கமிடப்படும் நிலக்கரியைக் காட்டிலும் மேற்கு நாடுகளினுடைய நிலக்கரி குறைந்த கந்தக அளவினைக் கொண்டதா யும், விலை குறைந்ததாயும் உள்ளது. குழாய் வழி யாக நிலக்கரி நீர்மக் கலவையினை மைய மேற்கு விற்பனை இடங்களுக்குக் கொண்டு செல்வது பொரு ஆற்றல், நிலக்கரி 457 ளாதார வகையில் விரும்பத் தக்கதாகும. குழாய்வழி யாக நிலக்கரி நீர்மக் கலவையைக் கொண்டு செல்வது சில சமயங்களில் விரும்பத்தக்கதே. அவை, நிலைத்த இடங்களுக்கு, நீண்ட நாளைக்குப் பெரும் அளவு நிலக்கரியைக் (ஓர் ஆண்டிற்கு 1 மில்லியன் டன் களுக்கும் மேலாக) கொண்டு செல்லும் போதும் சுரங்கம் அல்லது சுரங்கங்கள் இருப்பு வழிப் பாதையில் இணைக்கப்படாமல் நெடுதொலைவில் அமையும்போதும் நீர்மச் செலுத்தத்திற்குத் தேவை யான நுண்ணிய அரைப்பு இறுதிப் பயன்பாட் டிற்கு எதிராக அமையாத போதும் இருப்பு வழிப் பாதைகளில் மிகுந்த அளவில் சுமையேற்றம் செய் வதைத் தவிர்க்கக் குழாய் வழியாக உயர்ந்த அள வில் நிலக்கரி - நீர்மக் கலவையினைச் செலுத்தும் போதும் தேவையாகின்றன. குழாய் வழியை நிறு விய பின்னர், நிலக்கரியின் நேரடிவிலை உயர்வினால் குழாய்வழி பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. இதற் குக் காரணம் யாதெனில், இத்தகைய கொண்டு செல்லும் முறைக்கு மிகுந்த முதலீடு தேவை. 70/% கட்டண வீதம், முதலீட்டில் அடங்கும். 15.1 மின் திறனைச் சாரும் 15% அளவு மட்டுமே வேலையாட்க ளுக்கான செலவினையும் பராமரிப்பையும் சாரும். மற்ற வகையைச் சார்ந்த நிலக்கரி கொண்டு செல்லும்முறைகளைக் காட்டிலும், குழாய் வழியாக நிலக்கரி நீர்மக்கலவையைக் கொண்டு செல்லும் முறை சுற்றுப்புறச் சூழல் மாசுறாமையாலும், டன்- மைல் அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட திறன்அள வாலும் மற்ற கொண்டுசெல்லும் அமைப்புகளில் செலவிடப்படும் திறன் அளவைக் காட்டிலும் குறை வாய் இருப்பதாலும், விரும்பத்தக்கதாய் அமையும். குழாய் வழியில் நிலக்கரி நீர்மக் கலவையைக் கொண்டு செல்லும் முறையின் முதன்மையான இரு தேவைகள் பின்வருவனவாகும். அவை, தேவையான நம்பத்தக்க நீர் வழங்கீடு, (அமெரிக்க ஒன்றிய நாட் டின் மேற்கிலமைந்த நீர் குறைவான இடங்களில் பிரச்சினையை உண்டாக்குகின்றது) மின்திறன் நிலை யத்தில் பயன்படுத்து வதற்கேற்றவாறும், படகில் மீண்டும் வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்வ தாலும் நிலக்கரியை நீர்மக் கலவையிலிருந்து பிரித்து உலர வைத்தல் (இன்று வரை வேகச் சுழற்சியினால் பிரிக்கும் எந்திரத்தைக் கொண்டு பிரிப்பது முதன் மையான முறையாக அமைகின்றது) என்பனவாகும். மின் ஆக்க நிலையத்திற்குக் குழாய் வழியாகக் கொண்டு செல்வதற்கு மிகச் சிறிய அளவுகளில் நிலக்கரித் துகள்களின் அளவினைக் குறைப்பது தேவையாயினும், நுண்ணிய நிலக்கரித் துகள்களை உலர்த்துவது சிறிதளவு பிரச்சினையை உண்டாக்கும். நிலக்கரியைச் சோதித்தல், அண்மை ஆய்வு. இந்த ஆய்வில், நிலக்கரிக்கும் கோக்கிற்குமான, மொத்த