உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 ஆற்றல்‌, நிலக்கரி

458 ஆற்றல், நிலக்கரி ஈரம், எளிதில் ஆவியாகும் பொருள், சாம்பல், நிலைத்த கார்பன் அளவினைக் கணக்கிடுதல் ஆகி யன அடங்கும். அண்மை ஆய்வுச் சோதனைகள் குறிப்பிட்ட நிலைகளில் நடத்தப்படுகின்றன. அண்மை ஆய்வின் வழியாக, நிலக்கரியின் தரத் தினை நிலை நிறுத்தவும், எரிக்கத் தக்கதும், எரியாத கூறுகளுக்குமான விகிதத்தைக் காட்டவும், நிலக்கரியை வாங்வும் விற்பதற்குமான அடிப் படையை வழங்கவும், அதன் நன்மை பயக்கத்தக்கத் தன்மையை மதிப்பிடவும் அல்லது மற்ற காரணங் களுக்கும் பயன்படுகின்றன. நிலக்கரியின் ஈரம் மூன்று வடிவங்களைக் கொண்டுள்ளது. அவை கட்டற்ற அல்லது ஒட்டிக் கொண்டுள்ள ஈரம் (இந்த ஈரம் பெரும்பாலும் புறப் பரப்பு நீரினால் ஆக்கப் பெற்றதாகும்), கட்டமைப் பில் பிணைக்கப்பட்ட அல்லது உள்ளார்ந்த ஈரம் (ஆவி அழுத்தத்தின் காரணமாயும் மற்ற இயற்பியல் முறைகளின் காரணமாய் பெறப்பட்டுள்ள ஈரம்) வேதியியலாக பிணைக்கப்பட்ட நீர் (நீர்மாக்கத்தி னால் உண்டான நீர் அல்லது இணையப் பெற்ற நீர்) என்பனவாகும். சோதனைக்கானதும், பொருள் களுக்குமான அமெரிக்கக் குழு, மொத்த ஈரத்தைக் கீழ்க்கண்டவாறு வரையறை செய்கின்றது. வெப்ப நிலை,காலம், காற்றுப் பாய்வு போன்ற மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலைகளில், காற்று மண்டிலத் தில் நிலக்கரியின் எடை இழப்பு, மொத்த ஈர அள வைக் காட்டும். வேதியியல் முறையில் இணையாத மொத்த நீரின் அளவை மொத்த ஈரம் காட்டும். மொத்த ஈரம் இரு வழிகளில் தீர்மானிக்கப்படு கின்றது. அவையாவன, மொத்த மாதிரியிலிருந்து புறப்பரப்பு ஈரத்தை நீக்குவதற்குக் காற்றில் உலர வைத்தல், மொத்த மாதிரியைப் பிரித்துக் குறைத்து தயாரித்த மாதிரியில் இருந்து எஞ்சிய ஈரத்தைத் தீர் மானித்தல் என்பனவாகும். கூட்டல் கணக்கீட்டைப் பயன்படுத்தி மொத்த ஈரத்தின் அளவு கணக்கிடப்படு கின்றது. இத்தகைய சோதனை ASTM 3173 இல் விவரிக்கப்பட்டுள்ளது. அப்படியே பெறப்பட்ட ஈரமானது குறிப்பிட்ட ஒரு நேரத்திலமையும் மொத்த ஈரத்தைக் குறிக்கும். வாணிபத்தில் இச்சொற் றொடர், நிலக்கரியினை வழங்கி மாற்றம் செய்யும் இடத்தில் அமைந்த ஈரத்தைக் குறிக்கப் பயன்படுத் தப்படுகின்றது. தயாரிக்கப்பட்ட மாதிரியில் எஞ்சிய ஈரத்தைத் தீர்மானிக்கக் கரிமப் பின்னொழுக்கு ஈரச் சோதனைகள் செய்யப்படுகின்றன. வெப்ப நிலை, காலம், வளி மண்டலம் ஆகிய வற்றின் மிகவும் கட்டுப் படுத்தப்பட்ட நிலைகளில், நிலக்கரியை எரியவைக்கும்போது, இறுதியில் எரி யாத தாதுப் பொருளாகச் சாம்பல் கிடைக்கின்றது. இம்முறையில் பெற்ற சாம்பலானது, தொடக்கநிலை யில், நிலக்கரியில் அமைந்த கனிமக் கூறுகளின் கலப் பினின்றும் வேறுபடுகின்றது. எரித்தலினால், களி மண்ணிலிருந்தும், கால்சியம் சல்பேட்டிலிருந்தும் நீர் வெளியேற்றப்படுகின்றது. கார்பனேட்டுகளிலிருந்து கார்பன்-டை-ஆக்சைட் வெளியேற்றப்படுகின்றது. ஐரன்பைரைட்டுகள், பொரித் ஆக்சைடாக மாற்றப் படுகின்றன.இந்தவினைகள் ஒவ்வொன்றின் போதும், தொடக்கப் பொருளிலிருந்து எடைகுறைவு உண்டா கின்றது.ASTM388 இல், தொடக்கக் கனிமப் பொருள் அடிப்படைக்காகச் சரி செய்யும் சாம்பல் மதிப் பீடுகளுக்கான வாய்ப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. ASTM 3175 இல் குறிப்பிடப்பட்ட தரப்படுத்தப் பட்ட சோதனை நிலைகளின்போது, ஈர ஆவி நீங்க லாக உண்டாகும் வளிமப் பொருள்கள் எளிதில் ஆவியாகும் பொருள் என வரையறுக்கப்படுகின்றன. கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன், மீத்தேன், கரிம ஹைட்ரோக் கார்பன்கள் எரியத்தக்க வளிமங் களாகும். கார்பன் டை ஆக்சைடு, அம்மோனியா, ஹைட்ரஜன் சல்பைடு மற்றும் சில குளோரைடுகள் எரியாத வளிமங்கள் என வகைப்படுத்தப் படுகின் றன. எளிதில் ஆவியாகும் பொருள் செயலறிவால் தெரிந்து தீர்மானிக்கப்படும் நிலக்கரியின் பண்பா கும். எனவே, எளிதில் ஆவியாகும் பொருள் நிலக் கரியின் ஒரு இயற்கைக் கூறாக அமைவதில்லை. தர மான முறைகளைப்பயன்படுத்திப்பல தாழ்ந்த வரிசை சார்ந்த நிலக்கரிகளில் மீண்டும் அதன் விளைவு களைப் பெற இயலுவதில்லை. இப்பிரச்சினைகளைத் தீர்க்க, தாழ்ந்த வரிசை சார்ந்த நிலக்கரிகளுடன் குறிப்பிட்ட தாழ்ந்த எளிதில் ஆவியாகும் பண்பினையும், பிட்டுமன் பண் பினையும் கொண்ட நிலக்கரிகள் கலக்கப் பெற்று, பரிசோதனைக்கூடச் சோதனை மாதிரிகளாகப் பயன்படுத்தப்படும். நிலக்கரிகளின் வரிசைகளை நிலை நிறுத்தவும் கரியாக்கத்தின்போது உண்டாகும் கோக்கின் அளவைக் காட்டவும், எரியும் பண்பு களைத் தீர்மானிக்கவும், எளிதில் ஆவியாகும் பொருளைத் தீர்மானிப்பதற்கான சோதனைகள் பயன்படுத்தப்படுகின்றன. நிலைத்த கார்பன் அளவானது எளிதில் ஆவி யாகும் பொருளைத் தீர்மானிக்கும் சோதனையின் விளைவாகச் சாம்பல் நீங்கலாகத் தோன்றும் திண்ம எச்சப் பொருள் ஆகும். 100 / இலிருந்து, ஈரத்தையும், எளிதில் ஆவியாகும் பொருளையும், சாம்பலையும் கழித்தபின்னர் இதன் மதிப்பு, கணக்கிடப்படுகின் றது. மற்றொரு தொன்று தொட்டுப் பயன்படுத்தி வரும் சொற்றொடரான இறுதியான பகுப்பாய்வு என்பது சிக்கலான நிலக்கரியின் மூலக்கூற்றுக் கட்ட மைப்பில் இணைந்திருக்கும் தனித்தனித் தனிமங் களைக் குறிப்பிடும். இத் தனிமங்கள், நிலக்கரியில் உள்ள முழுக் கார்பன், முழு ஹைடிரஜன்,முழுக் கந் தகம், முழு நைட்ரஜன், ஆகியவற்றைப் பகுத்துக்