உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 459

காட்டுமாறு அமையும். நிலக்கரியின் தாதுப் பொருள் அளவை மதிப்பிடுவதற்கு ஆய்வில் எஞ்சும் சாம்பல் அளவைக் கணக்கிடுவதும் அடங்கும். இதனால் முழு ஆக்சிஜன் அளவினைக் கணக்கிட முடிகிறது.மாதி ரியை ஆக்சிஜனில் வினையூக்க வைத்து எரித்து எளி தில் அளக்கத்தக்க கார்பன் டை ஆக்சைடு உருவாவ திலிருந்து மொத்தக் கரிமத்தின் அளவு தீர்மானிக்கப் படுகின்றது. மொத்தக் கார்பன் அளவில் கரித்தாது வின் கார்பன் அளவும் கார்பனேட்டுக் கார்பன் அளவும் அடங்கும். 1756 இல் கூறப்பட்டுள்ள வாறு, மொத்தக் கார்பன் அளவிலிருந்து, கார்ப னேட்டுக் கார்பன் அளவைக் கழிக்கும் போது மொத்தக் கரிமக் கார்பன் அளவினைத் தீர்மானிக்க லாம். வழங்கப்பட்ட மாதிரியில் மொத்தக் கார்பன் உட்பொருளின் அளவு அளவு நிலைத்த கார்பன் வினைக் காட்டிலும் எப்பொழுதும் அதிகமாக இருக்கும். அள மாதிரியை ஆக்சிஜனில் வினை யூக்க வைத்து எரித்து நீராக மாற்றம் செய்து மொத்த ஹைடிர ஜன் அளவு தீர்மானிக்கப்படுகின்றது. உலர்த்துவ தற்கு உதவும் உலர்த்தியினால் நீர் உறிஞ்சப்பட்ட பின்னர் நேரடியாக எடையிடப்படுகின்றது. மாதிரி யின் ஈரத்தில் அமைந்த ஹைடிர ஜனையும், நீர்ம மாக்கத்தின் வழியாகப் பெறப்பட்ட நீரில் அமைந்த ஹைடிரஜனையும் சேர்த்து ஹைடிரஜன் அளவு தீர் மானிக்கப் படுகின்றது. ஸ்டாய்க்கியோமெட்ரிக் முறையில், மாதிரியின் ஈரத்திலுள்ள ஹைடிரஜன் நீக்கம் செய்யலாம். 1756 இல் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பாடுகளைக் கொண்டு, மற்ற ஈர அடிப்படை யிலமைந்த மாதிரிகளின் மொத்த ஹைடிரஜன் அள வினைத் தீர்மானிக்கலாம். மொத்தக் கந்தகம். கந்தகம் பொதுவாக மூன்று வடிவங்களில் காணப்படுகின்றது. இம்மூன்றின் கூடுதல் மொத்தக் கந்தக அளவினைக் காட்டும். கந்தகத்தைப் பிரிக்க வேதியியல் முறைகளைப் பயன்படுத்தலாம். அவையாவன, எஷ்கா முறை, வெடிகலன் கழுவுதல் முறை, உயர் வெப்ப நிலை எரிப்பு முறை என்பனவாகும். எஷ்கா முறையில், மகனீசியம் ஆக்சைடு சோடியம் கார்ப னேட்டுக் கலவையில், தீப்பற்ற வைக்கப்படு கின்றது. கந்தகம் கரையக் கூடிய வடிவில் மாற்றம் செய்யப்பட்டு நீரைக் கொண்டு கழுவி வடித்தெடுத்த பின்னர் பேரியம் சல்பேட்டு என்னும் வீழ்படிவா கக் கிடைக்கின்றது. இவ்வீழ்படிவு வடித்தெடுக்கப் பட்டுப் பின்னர் தீப்பற்ற வைக்கப்பட்டதும் எடைபோடப்படுகின்றது. வெடிகலன் கழுவுதல் முறையில், ஆக்சிஜன், வெடிகலக் கலோரிமானிக் கழுவுதல் வழியாகப் பேரியம் சல்பேட்டாகக் கந்தசும் வீழ்படிவு உண்டாக்கப்படுகின்றது. உயர் வெப்ப நிலை எரிக்கும் முறையில் ஒரு குழாய் உலையில் ஆற்றல், நிலக்கரி 459 மாதிரி எரிக்கப்பட்ட பின்னர் கந்தக ஆக்சைடுகள் திரட்டப்பட்டு, அவற்றின் அளவு அமிலக் காரத் தரம் பார்த்தலின் வழியாகக் கண்டறியப்படுகின்றது. வேதியியல் முறையில் வடித்துப் பிரித்தெடுத்தல் முறைகளின் வழியாக மொத்த நைட்ரஜன் அளவு தீர்மானிக்கப்படுகின்றது. மொத்த நைட்ரஜன் அளவு வினையூக்கத்தால் அம்மோனியாவாக மாற்றம் செய்யப்படுகின்றது. அம்மோனியா வடிகட்டப் பட்டு, அமிலத்தினால் உட்கவரப்பெற்றுப் பிறகு அமிலக்காரத் தரம்பார்த்தலின் வழியாக அளவிடப் படுகின்றது. 100% இலிருந்து, மொத்தக்கார்பனையும், ஹைடி ரஜனையும், கந்தகத்தையும் நைட்ரஜனையும், சாம்ப லையும் கழித்து ஆக்சிஜன் உள்ளடக்கம் தீர்மானிக் கப்படுகின்றது. ஆக்சிஜனை நேரடியாகத் தீர்மானிப் பதற்கு, நீண்ட ஆனால் சரியான முறை உருவாக்கப் பட்டுள்ளது. இறுதி ஆய்வின் ஒரு பகுதியாகக் குளோரின் வழக்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நிலக்கரியின் பண்பினைத் தீர்மானிக்கக் கூடிய மற்ற முக்கியமான வேதியியல், இயற்பியல் சோத னைகளாவன, வெப்பப்படுத்தும் மதிப்பு (பி.வெ.அ. அளவு), கந்தக வடிவங்கள், சாம்பல் உருகக் கூடிய வெப்ப நிலைகள், சாம்பல் ஆய்வு,சுவடுத் தனிமங் கள், கட்டற்று விரியும் குறியீடு, ஹார்டுகுரோவின் அரைக்கும் தன்மை என்பனவாகும். வெப்பப்படுத்தும் மதிப்பு. ஆக்சிஜன் வெடிகலனில் நிலக்கரி மாதிரியினை அளவிட்டு வெப்பப்படுத் தும் மதிப்புத் தீர்மானிக்கப் படுகின்றது. வெடிகலன் வழியாகக் கிடைக்கும் எண் மொத்த வெப்பப் படுத்தும் மதிப்பினைக் குறிக்கும். எரிந்தபின் தோன் றும் விளைபொருளின் நீர் ஆவி முழுவதும் வடிக்கப் படுகின்றது. எரிந்தபின் தோன்றும் விளைபொருள் களின் நீர் முழுவதும் ஆவி நிலையில் உள்ளதால் மொத்த மதிப்பிலிருந்து, தொகு வெப்பப்படுத்தும் மதிப்பு கண்டறியப்படுகின்றது. இத்தொகு வெப் பப்படுத்தும் மதிப்பு, மொத்த வெப்பப்படுத்தும் மதிப்பைக் காட்டிலும் குறைவானது. ASTM D 2492 இல் கூறப்படும் மூன்று வகை யான கந்தக வடிவங்களாவன, சல்பேட்டுக் கந்தகம் (இது கால்சியம் சல்பேட்டு அல்லது இரும்பு சல்பேட்டு வடிவத்தில் இருக்கும்) பைரைட்டுக் கந்தகம், கரிமக் கந்தகம் (இந்தக் கந்தகம் கார்பன் கட்டமைப்புடைய தாகும்) என்பனவாகும். நிலக்கரியுடன் நீர்த்த ஹைடி ரோக் குளோரிக் அமிலத்தைச் சேர்த்து சல்பேட்டுக் கந்தகம் பிரித்தெடுக்கப்படுகின்றது. இது பேரியம் சல்பேட்டை வீழ்படிவாகச் செய்து, எரித்து எடை பார்க்கப்படுகின்றது. சல்பேட்டு நீக்கம் செய்த