உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 ஆற்றல்‌, நிலக்கரி

460 ஆற்றல், நிலக்கரி பின்னர், நைட்ரிக்அமிலத்துடன், சேர்த்து பைரைட்டுக் கந்தகம் பிரித்தெடுக்கப்பட்ட இரும்பு, ரெடாக்ஸ் (redox) தரம் பார்த்தலின் (titration) வழியாக அள விடப்படுகின்றது. மொத்தக் கந்தக அளவிலிருந்து. சல்பேட்டு அளவையும் பைரைட்டுக் கந்தக அளவை யும் கழித்துக் கரிமக் கந்தக அளவு கணக்கிடப்படு கின்றது. i கட்டற்ற பருத்தல் சுட்டெண் (free swelling index) கட்டுப்படுத்தாத உருகவைக்கும் மட் கலத்தில் நிலக் கரியை வேகமாக வெப்பப்படுத்தும் போது கட்டற்ற பருத்தல் சுட்டெண் அளவு தீர்மானிக்கப்படுகின்றது. க.ப.ச மதிப்பு 0 முதல் 9 வரையிலான இடைவெளி யைக் கொண்டுள்ளது. கெட்டியாகாத விரியாத நிலக் கரிகளின் சுட்டெண் 0 எனக் குறிப்பிடப்படுகின்றது. க.பசு. அதிகமாகும் போது, நிலக்கரியின் பருத்தல் பண்பும் அதிகமாகின்றது. இச்சோதனையின் முடிவுகள் நிலக்கரியினை எரி பொருளாக எரிக்கும் போது, அதன்கெட்டியாகும் பண்பினைக் குறிப்பதற் குப் பயன்படுகின்றன. உருகும் சாம்பலின் உருகும் வெப்ப நிலை சாம்பலின் உருகுந்தன்மை எனப் பரலலாக வரையறை செய்யப் பட்டுள்ளது. நிலக்கரி அல்லது நிலக்கரிச் சாம்பலி லிருந்து தயாரிக்கப்பட்ட சிறிய முக்கோணக் கூம்புப் பட்டசங்கள், சில வரையறுக்கப்பட்ட நிலைகளின் வழியாகச் சென்று ஒரு குறிப்பிட்ட வீதத்தில் வெப்பப்படுத்தும்போது பாய்கின்றது. கட்டுப்படுத்தப்பட்ட குறைக்கும் அல்லது ஆக்சிஜ னேற்றும் சூழ்நிலையும் தேவையாகின்றது. சோதனை முறை, பட்டறிவால் அறியப்படும். மின் உருவாக்கக்கூடிய உருகு வெப்ப நிலைகள் கிடைக்க அதற்கான தேவைகளும், சூழ்நிலை களும் சரியாக இருக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட வெப்பநிலைகளில் உருவாகக்கூடிய நிலைகளாவன தொடக்க மாறுபாடு(கூம்பின் முனை மாறுதலடையத் தொடங்குகின்றது, மென்மையாகுதல் (கூம்பின் உயரம்,கூம்பின் அகலத்தை போல் இருமடங்காக உள்ளபோது), அரைக் கோள வடிவம் (கூம்பின் உயரம் கூம்பின் அகலத்திற்குச்சமமாய் உள்ளபோது), நீர்மம் (உருகிய கூம்பானது தட்டையான அடுக்காகப் பரவிடும்போது) என்பனவாகும். சாம்பல் ஆய்வு. நிலக்கரிச் சாம்பலிலும் கோக் சாம்பலிலும் வழக்கமாகக காணப்பெறும் முதன்மைக் கூறுகளை ஆராய்வதற்காகக் குறிப்பிடும் சொற் றொடரே சாம்பல் ஆய்வு எனப்படும்(ASTMD 2795). Sio, ஆக்சைடுகளாகக் கூறப்படும் கூறுகளாவன ஆக Ac,O, Fe,Os, TiO21 CaO, MgO, Na,O, Kz0, P,0, S0, என்பனவாகும். பாஸ்பரச் சுவடு தனிமம் (trace element) தொன்று தொட்டுச் சேர்க்கப்பட்டு வரு கின்றது. ஏனெனில் இதனை அடுத்த கோக்கைப் பயன்படுத்தி எஃகினை உண்டாக்கும் முறையில் பாஸ்பரத்தனிமம் முதன்ன மை உடையதாய் அமை கிறது. சுற்றுப்புறச் சூழ்நிலை ஆர்வத்தின் காரணமாகச் சுவடுத் தனிம ஆய்வில் நாட்டம் சென்றது. இதற் குத் தேவையான செந்தரக் கருவிகள் இன்னும் உருவாக்க நிலையிலேயே உள்ளன. இத்தகைய ஆய் விற்குப் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களில் அடங்குவன. அணுஉட்கவர்ச்சி (atomic absorption ) தீப்பொறி மூலத்தினைக் கொண்ட, பொருண்மை அலைமாலை ஒளிப்பட அளவியல்( mass spectrophoto- metry) நியூட்ரான் செயற்படுத்துதல், (neutron activation), X-கதிர் உட்னொளிர்தல் (X-ray fluoresc- ence) ஆகியன. ஹார்டுகுரோவின் அரைமை முறை (Hardgrove grindability) நிலக்கரியின் ஒப்புத்தூளாக்கத்தை மற்றசெந்தர நிலக்கரி வரிசைகளுடன் ஒப்பிட்டுத் தீர்மானிப்பதற்கு இம்முறை பயன்படுத்தப்படு கின்றது. செந்தரக் கருவியில் உண்டாக்கப்பட்ட நுண்மையான எதிர்மை எண் 200 உள்ள சல்லடைத் துளைகளின் அளவு முதற்கொண்டு சுட்டெண்கள் கணக்கிடப் படுகின்றன. இம்முறையின் முடிவுகள், நொறுக்குவதற்கும் அரைப்பதற்குமான சாதனத்தின் தேய்மான வீதங்களைக் கண்டறியப் பயன்படுத்தப் படுகின்றன. கெய்சலரின் குழைமை (Gieseler plasticity). நிலக் கரியினை வெப்பப் படுத்தும் போது நிலக்கரி உருகி அல்லது மென்மையாகி, நீர்ம நிலையினை அடையும் போக்கிற்குக் குழைமை எனப்பெயர். நிலக்கரி மாதிரி யில் பொருத்தப்பட்ட குத்துநிலைக் கலக்கும் கருவிக்கு நிலையான திருக்கம் (constant torque) வழங்கப் படுகின்றது. ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட வெப்ப நிலைத் திட்டத்தில் (temperature programme) நிலக் கரியினை வெப்பப்படுத்தும் போது, அந்நிலக்கரி யானது கோக் ஆகக் கூடிய நிலையைக் கடக்கும் போது, கலக்கும் கருவியின் கழலும் வீதத்தினைக் கொண்டு,பாய்மை (fluidity) அளவிடப்படுகின்றது. ஆடிபர்ட் ஆர்னி பருத்தல் அளவி {Audiobert Arni dilatometer). நிலக்கரியின் கரியாக்கத்தின்போது நிலக்கரி சுருங்குதலையும் பருத்தலையும் இவ்வளவி காட்டும் நிலக்கரியின் அமுக்கப்பட்ட மாதிரியின் மீது அமைந்திருக்கும் உலோக உந்துத்தண்டு உயர்ந்து, தாழ்வதைப் பதிவுசெய்து காட்டும் சோதனைகளின் தேவை. முன்னர்க் கூறப்பட்ட வாறு இறுதி நுகர்வாளர்களுக்கு, நிலக்கரியின் வெப்பப்படுத்தும் மதிப்பு, சாம்பல், உருகுந்தன்மை பிற அளபுருக்கள் ஆகியன மிகவும் முதன்மை வாய்ந் தவையாகும். நிலக்கரியை உருவாக்கம் செய்யும் நிலையங்களை அமைக்கவும், இயக்கவும் நிலக்கரியை முன்னரே சோதிப்பது மிக முக்கியமானது. வனிம் மாக்க நீர்மமாக்க முறைகளில் பல்வேறு பட்ட நிலக் கரிகளைப் பயன்படுத்துவதன் காரணமாக அண்மை