உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 ஆற்றல்‌, நிலக்கரி

474 ஆற்றல், நிலக்கரி கரிப் பதப்படுத்தும் இயக்கங்களும் எந்திர வடிவமைப்பு களும் பிற்காலத்திலும் நிறுவப்படும் நிலையங்களுக் குப் பொருந்தும், கீழ்க்காணும் வரிசையில் நிலையத் தொகுதியின் முறை சார்ந்த இயக்கங்கள் அடங்கு கின்றன. வினைப்படும் அடுத்தடுத்த செயல்களுக்கு ஊட்டுவதற்கு ஏற்றாற்போன்ற, பொருளை வழங்க நிலக்கரியைக் கையாளுதலும் தயாரித்தலும், உயர் அழுத்த அமைப்பில் நிலக்கரியைச் செலுத்துவதற் காக நிலக்கரியை அழுத்தம் செய்தலும் கொண்டு செல்லுதலும், சில வகையான நிலக்கரிகள் ஒன்று திரளும் போக்கினைக் குறைப்பதற்காக நிலக்கரியை முன்னரே செயல்முறைப்படுத்துதல், பதப்படுத்தாத வளிமத்துடன் எஞ்சிய கரிப்பொருளை ஆக்கம் செய்ய நிலக்கரியை வளிமமாக்கம் செய்தல். உயர் வெப்ப நிலை உயர் அழுத்தச் குழ்நிலையிலிருந்து, பொருளைப் பிரித்தெடுப்பதற்குக் கரிப்பொருளை நீக்குதல், பதப்படுத்தாத வளிமத்திலிருந்து நுண்மை யான திண்மப் பொருட்களையும் கரிப்பொருளையும், நீராவியையும் நீக்க வளிமத்தைத் தூய்மையாக்குதல். தூய வளிமக்கார்பன் மோனாக்சைடு ஹைட்ரஜனின் விகிதத்தைச் சரிசெய்ய அடுத்தடுத்த மாற்றங் களைச் செய்தல், கார்பன் டை ஆக்சைடை நீக்கம் செய்வதற்கான அமில வளிமத்தை நீக்குதலும் மாற்றி யமைக்கப்பட்ட வளிமத்திலிருந்து ஹைட்ரஜன் சல் பைடை நீக்கம் செய்தலும், தூய வளிமத்திலிருந்து சிறிதளவே அமைந்த கந்தகச் சேர்மங்களை நீக்குதல் கார்பன் மோனாக்சைடையும், ஹைட்ரஜனையும் மீத் தேனாக மாற்றம் செய்வதன் வழியாக வளிமக் கலோரி மதிப்பை உயர்த்தும் மீத்தேனேற்றம் வளி மண்டலத்திற்கு வெளியேற்றுவதற்கு ஏற்றதாகச் செய்யும் அமில வளிம ஆக்கியின் வெளியேறும் வளி மத்திலிருந்து கந்தக நீக்கம் செய்தல் என்பனவாகும் முன்னரே பதப்படுத்தும் கருவிக்கு நிலக்கரியை அழுத்தத்தில் ஊட்டம் செய்விக்க, துடுப்பினைக் கொண்ட துள்ளும் அமைப்பு பயன்படுத்தப்படுகின் றது. வளிமண்டல அழுத்தத்தில் தூளாக்கப்பட்ட நிலக்கரித் தேக்கத் தொட்டியிலிருந்து நிலக்கரி சிறு சிறு தொகுதிகளாக அழுத்தம் தரும் துள்ளும் ஊட்ட அமைப்யிற்கு மாற்றப்படுகின்றது. இத்துள் ளும் ஊட்ட அமைப்பு தேவையான அழுத்தத்துடன் செயல்படுவதால் முன் செயல்முறைப்படுத்தும் கருவிக்குத் தொடர்ந்து ஊட்டம் அளிக்கின்றது. இத் தொகுதிகளை அளவிட, எடையைக் கொண்ட துள் ளும் அமைப்பு பயன்படுத்தப்படுகின்றது. நிலக்கரி யைக் கொண்ட ஒவ்வொரு தொகுதியும், துடுப் பினைக் கொண்ட துள்ளும் கருவியில் சென்று விழு கின்றது. காற்றுப் பாய்மவியலாக இயக்கப்படும் கட்டுப்பாட்டிதழ்களைக் கொண்டு, க்கொள்கலம் தனிமைப்படுத்தப்படுகின்றது. மேலும் கொள்கலத் தின் அழுத்தத்தை, அழுத்தம் கொண்ட ஊட்டத் துள்ளும் கருவியின் அழுத்தத்திற்கு இணையாக உயர்த்துவதற்கு அழுத்தங்கொண்ட வளிமம் இக் கொள்கலத்தினுள் செலுத்தப்படுகின்றது. தடுப்பி னைக் கொண்ட துள்ளும் கருவியின் கீழேயமைந்த இதழ்கள் திறக்கப்பட்டு, நிலக்கரியைக் கொண்ட சிறு தொகுதியானது, அழுத்தம் கொண்ட துள்ளும் கருவி யில் சென்று விழுகின்றது. தடுப்பினைக் கொண்ட துள்ளும் கருவி ஒருமுறை காலியாக்கப்பட்டவுடன் மறுபடியும் தனிமைப்படுத்தப்படுகின்றது. மீண்டும், அழுத்தங்கொண்ட வளிமத்தைச் செலுத்தி நிலக்கரி யைக் கொண்ட அழுத்தச்சிறு தொகுதி வளிமண்டில அழுத்தத்தில் செலுத்தப்பட்டு இச்சுழற்சி மீண்டும் மீண்டும் செய்யப்படுகின்றது. இத்தகைய அமைப்பின் முக்கிய தீமையாக அமைவது யாதெனில், இவ் வமைப்பு, மிக அதீத அளவில் திறனைப் பயன்படுத் துகின்றது என்பதே, ஏனெனில், அழுத்தங்கொண்ட வளிமத்தை வெளிச்செலுத்துவதுடன் திறன் இழப்பும் தோன்றுகின்றது. இத்திறன் பயன்பாட்டைக் குறைப் பதற்கு, இரட்டைத்தடுப்புகளைக் கொண்ட துள்ளும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு, ஒன்றின் வெளியேற் றம் மற்றொன்றைப் பகுதியளிவில் அழுத்தமடையச் செய்யும். இறுதியாக, வணிக முறையில் நிறுவப்பட்ட ஒருநிலையத்தில் பல இணையான பாய்வுகளைக் கொண்டுள்ளபோது, அழுத்தத்தைச் சமன்படுத்த பல அடுக்குகளுக்கு இக்கருத்தினைக் கொண்டு சென்று உயர்ந்த வெப்ப இயக்க திறமையைப் பெறலாம். நம்பத தகுந்த தன்மையை நிலைநாட்ட முன்னோடி நிலையத்தில் இத்தகைய இரட்டை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. மீத்தேனாக மாற்றம் செய்விப்பதற்கான கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனின் செறிவூட்டமும் உயர்ந்திருப்பதன் காரணமாய் இம்முறையின் மீத் தேனேற்றத்திற்கான செயல்முறை இடுக்கண் வாய்ந்ததாகும். இவ்விளைவானது உயர் அளவில் வெப்பம் வெளிவிடக் கூடியதாகும். எனவே அதிக அளவு வெப்பத்தை நீக்கம் செய்வது தேவையா கின்றது. கார்பன் மோனாக்சைடின் உயர்ந்த செறிவூட்டத்தின் காரணமாய், வினைப்படும் வெப்பநிலையை 700 371° முதல் 421 செ வரை குறுகிய எல்லைக்குள் கட்டுப்படுத்தினாலன்றி வினை யூக்கியின் மீது கார்பன் உருவாகும் நிகழ் தகவு உயர்ந்ததாகும். அமெரிக்க ஒன்றிய நாடுகளின் சுரங்கங்களுக்கான குழு இரு புதிய மீதேனேற்ற உலை கனை உருவாக்கியுள்ளது. அவையாவன, குழாய்ச் சுவரைக் கொண்ட உலை, வெப்ப வளிமத்தையும் மின் சுழற்சியையும் கொண்ட உலை என்பன வாகும். முதலில் கூறப்பட்ட வகையில், குழாய்களின் மீது வினையூக்கியின் பூச்சுப்பொருளாக 'ரானினி'நிக் கலை இரு உலைகளும் பயன்படுத்துகின்றன. இரண் டாவது வகையில் தகடுகளின் மீது இப்பூச்சுப்பொருள் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வினையூக்கி குறைந்த செலவினைக் கொண்டதாயும், உயர்ந்த செயல்படும்