உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நிலக்கரி 481

நிலக்கரி ஆராய்ச்சிக்கான அமெரிக்க நாட்டின் அலுவலகத்தினிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் பிட்ஸ்பர்கு, மிட்வே நிலக்கரிச் சுரங்கமிடும் நிறு வனம் இம்முறையை மேலும் வளப்படுத்தியது. கீழ்க்காணும் வரிசை முறைகளைக் கொண்டதாக இம்முறை அமைகின்றது. அவை, நுண்ணிய துகள் அளவிற்கு (200 சல்லடை) நிலக்கரியைத் தயாரித்துத் தூளாக்குதல், நுண்ணிய நிலக்கரியை அடிப்படை யாகக் கொண்ட ஹைடிரோக்கார்பன் கரைப்பா னைக் கொண்டு கலத்தல், இக்கரைப்பான் இம்முறை யினுள்ளேயே ஆக்கம் செய்யப்படுதல், ஹைடிரஜன் அல்லது ஹைடிரஜன் கார்பன் மோனாக்சைடு செயற்கை வளிமக் கலவையுடன் 482· செ. உயர் அழுத்தத்தில் அளவிடப்பட்ட நிலக்கரிக் கரைப் பான் கலப்புப் பொருளைக் கலக்கும்போது தோன் றும் வினை, வெப்ப, அழுத்த வடிகட்டுதல் வழியாகச் சாம்பலை நீக்கித் தாதுப் பொருள் பிரிக்கும் முறை (இதனைத் தொடர்ந்து கரைப்பானை மீட்பதற்கு உலர்த்துதல் தேவையாகின்றது), உயர் வெப்பநிலை வெற்றிட வேகப் பாய்வினைப் பயன்படுத்திக் கரைப் பானை மீட்பித்தல், மேலும் இம்முறைக்குத் திரும் பிப் பயன்படுத்தப்படும் அல்லது விற்பதற்கான வேறு பட்ட ஹைடிரோக்கார்பன் எண்ணெய்ப் பின்னப் பொருள்களைப் பிரிப்பதற்காகக் காய்ச்சி வடித்தல், வெளியேறும் கந்தகச் சேர்மங்களைக் கொண்ட வளி மத்தை நீக்குதல், விளைபொருளைத் திண்மப் பொரு ளாக, அடைகளாக மாற்றம் செய்தல் அல்லது குறைந்த சாம்பலையும், குறைந்த கந்தக அளவையும் கொண்ட விளைபொருளை வெப்ப நீர்மமாக முறையிலிருந்து நேரடியாகப் பயன்படுத்துதல் என் பனவாகும். இந்த முறையில் தூய்மையாக்கம் செய்வ தற்கு ஏற்ற ஆந்திரசைட்டு நிலக்கரியைத் தவிர்த்து எந்த இயல்பு நிலக்கரியையும் பயன்படுத்தலாம் எனச் சோதனைகளிலிருந்து அறியப்பட்டுள்ளது. வளிம் மாக்கம் செய்யும்முறை பொருளாதார வகையில் ஏற்றதாய் அமைவதற்கு முன்னரும் அதன் இயக்க முறை நன்கு நிலைநிறுத்தப்படுவதற்கும் முன்னரும் ஆன இடைப்பட்ட காலத்தில் விரும்பத்தக்க எரி பொருள் கரைப்பான் தூய்மையாக்கு முறையில் ஆக்கம் செய்யப்பட்டது. அம் மின்சாரத்தைப் பயன்படுத்தும் கருவிகளைக் கொண்ட தொழிற்சலைகளில் இம்முறை விரும்பத் தக்கது. ஏனெனில் அங்குள்ள நீராவி ஆக்கிகளைக் குறைந்த மாற்றங்களுடன் இப்பொருளைப் பயன் படுத்துவதற்கு ஏற்றதாக மாற்றியமைக்கலாம். நிலக் கரியைத் தூய்மையாக்குவதுடன் அதனைக் கொண்டு செல்லும் செலவுகளைக் குறைப்பதற்கும் அதன் ஆற்றல் மதிப்பினை ஒரு பவுண்டிற்கு 16000 பி.வெ.அ. அளவுக்குச் செறிவூட்டுவதற்கு ஏற்றதாய் மாற்றம் செய்ய வேண்டும். அ.க. 3-31 ஆற்றல், நிலக்கரி 481 நிலக்கரி ஆக்கம் செய்யும் இடத்திலேயே அமைந்த குறைந்த பி. வெ.அ. வளிமத்தை ஆக்கம் செய்யும் கருவிகளுடன் ஒப்பிடும்போது, கரைப்பான் தூய் மையாக்கப்பட்ட நிலக்கரியினை உச்சத் தேவைகளைச் சந்திப்பதற்கு ஏற்றவாறு தேக்கி வைக்கலாம். இம் முறைக்கு வினையூக்கி ஏதும் தேவையில்லை. ஹைடி ரஜனின் தேவையின் அளவும் குறைவு. அலபாமாவில் சில காலம் வரையில், ஒரு நாளைக்கு 6 டன்கள் அளவில் ஆக்கம் செய்யும் முன்னோடி நிலையம் இயக்கப்பட்டது. இதற்குப் பிறகு அமைக்கப்பட்ட ஒருநாளைக்கு 50 டன் அளவில் ஆக்கம் செய்யும் நிலையம், கரைப்பான் தூய்மையாக்கப்பட்ட நிலக்கரி முறைக்கான தொழில்நுட்பத்தினை மேலும் வளப் படுத்தும். நிலக்கரிப் படுகையினுலுள்ளேயே நிலக்கரியை வளிமமாக்கல், 1868 ஆம் ஆண்டில் சீமென்ஸ் என்ப வரால், நிலக்கரிப் படுகையினுள்ளேயே வளிம் மாக்கம் செய்தல் முதலில் எடுத்துக் கூறப்பட்டது. இதற்கான முதல் காப்புரிமை பெட்ஸ் என்பவருக்கு 1909 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. முதலாம் உலகப் போருக்கு முன்பே இங்கிலாந்தில் முதன் முறையாக வயற் பரிசோதனை செய்யப்பட்டது. சோவியத்துநாட்டில் 1933 ஆம் ஆண்டில், இதற் சான பகுதி வணிக நிலையங்கள் இயங்கின. இரண் டாம் உலகப் போருக்குப் பின்பு, பெரும் அளவில் நிலக்கரி வளத்தினைக் கொண்ட ஒவ்வொரு மேற்கு நாடும், படுகையினுள்ளேயே நிலக்கரியை வளிம மாக்கம் செய்யும் முறையைச் சோதித்தது. இருப் வெடி நுழைவாய் வளிமம் வெளியேறும் வழி மீதமை சுமை அடிச்சுமை நிலக்கரி படம் 32. நிலக்கரிப் படுகையில் நிலக்கரியை வளிம மாக்கலில் பயன்படும் அடுக்குக் கசிவு முறையின் அடிப் படைக் கூறுபாடுகள்.