உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 ஆற்றல்‌, நிலவெப்ப

490 ஆற்றல், நிலவெப்ப எடைக்கான படம் 4. இரட்டை வேகப்பாய்வுத் தொகுதியும் தனித்த இடைநில அழுத்தப் பிரிக்கும் அமைப்பும். குறைந்த அழுத்தங்களில் நீராவியினஓர் அலகு தன்பருமன் (specific volume) உயர்வதன் காரணமாக, இரண்டு இடைப்பட்ட குறைவழுத்தப் பிரிக்கும் அமைப்புகள் தேவை யாகின்றன. இவை இடப் புறத்தில் காணப்படும் இரண்டு உயர்ந்த கொள்கலங்கள் ஆகும். தரையை ஒட்டிய நிலையில் காணப்படும் கொள்கலங்கள் தீரைக் கொள்ளும் உருளை வடிவக் கலங்களாகும். கழிவாக, இறுதியாக வெளியேற்றப்படும் நீரின் அளவை ஏற்பதற்கு இரண்டு அமைப்புகள் அமைதியாக்க (silencers) தேவையாகின்றன. வயலிற்கு மற்றொரு வயல் வேறுபடுகின்றன. வைரகி வயலின் வெப்ப நிலை 260 செ. ஆகும். பிராடு லாந்து வயலில் இதுவரை அளக்கப்பட்ட உயர்ந்த வெப்ப நிலை 307° செ. ஆகும் (படம் 5). பொது வாக இவ்வயல்களுக்கான வேதியியல் ஒன்றேயாகும். எனினும், இவற்றிலிருந்து கிடைக்கும் விவரங்கள் வேறுபடுகின்றன, மொத்தம்கரைந்துள்ள திண்மப் பொருளில், குறைந்த அளவான ஒரு மில்லியன் பகுதி யில் 4000 பகுதிகள் எல்லா வயல்களிலும் பொது வாகக் காணப்படுகின்றன. பிற்கால வயல்களின் பயன்பாடு மின் திறன் ஆக்கத்தைக் கொண்டதாய் அமையலாம். எனினும் மற்ற வகைப் பயன்பாடுகளை ஒதுக்க இயலாது. வைரகி வயலுடன் ஒப்பிடும்போது, பிற்காலத்திற் கான உருவாக்கங்கள் முற்றிலும், வேறுபட்டு அமை யலாம். நியூசிலாந்திலும் மற்ற நாடுகளிலும் நில வெப்பத் திறனைப் பெறுவதற்காகத் தற்போது செய் யப்பட்டு வரும் வேலைகளில் மீள உட்செலுத்தம் (reinjection) வேதியியற் பொருள்களை மீட்பித்தல் படம் 5. பரந்த நிலத்திலமைந்த 20வது கிணறு. 300 கி.கலோரி/கிலோ கிராம் எந்தால்பியில் ஒரு மணிக்கு 400 மெட்ரிக் டன்கள் அளவில் வெளியேற்றம் செய்கின்றது. நீரின் போதிய கட்டுப்பாட்டிற்கு இரண்டு அமைதியாக்க அமைப்புகள் தேவையாகின்றன. நீராவி, நீர் போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட செலுத்தங்கள் (two phase transmission) இருமைச் சுழற்சி (binary cycle) ஆகியவற்றிற்கான தொழில் நுட்பங்கள், பிற்காலத் திட்டங்களின் திறமையிலும் தோற்றத்திலும் பெரும் விளைவுகளைக் கொண்டி ருக்கும். கலிபோர்னியாவிலுள்ள நீராவி, வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் நீரூற்றுக்கள். அமெரிக்க ஒன்றிய நாடு களில், இயற்கையில் கிடைக்கும் நீராவியைப் பயன் படுத்தி மின் பயன்பாடு கலிபோர்னியாவில் வட மையப் பகுதியலமைந்த ஒரு பகுதியில் மட்டுமே நிகழ் கின்றது. இதற்கான நீராவி, வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந்நீரூற்றுக்கள் சான்பிரான்சிஸ் கோவின் வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ளன. இங்குள்ள பல எண்ணிக்கையிலான கிணறுகளி லிருந்து பெறப்படும் நீராவி பசுபிக் வளிம, மின் நிறு வனத்தினரால் (Pacific Gas and Electric Company) இயக்கப்படும் மின் ஆக்க அமைப்புக்களுக்குக் குழாய் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றது. 1975 ஆம் ஆண்டு நடு வரையிலும், உலகிலேயே மாபெரும் நில வெப்ப அமைப்பாகக் கலிபோர்னியாவிலுள்ள நீராவி, வெப்ப நீர்த்தாரை வெளிப்படும் வெந்நீரூற் றுக்களால் இயங்கும் மின் ஆக்க நிலையம் அமைந்தது. (geysers power plant) உலர்ந்த நீராவித் தேக்கத்