உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன்2

(வைகுந்த. பிள். தெய்வ. 2). திருக்குறுங்குடி அப்பனுக் கும் (தெ.இ. க. 17, 751). 6.திருநாவுக்கரசர். கயிலைமலை வீற்றிருந்த தன்கோலம் ஐயாற்றில் கண்டருள் என்ன அப்பனும் (திருப்பூவண. உலா 84- 85). 7. வயதில் இளையவரை முதியவர் அன்புடன் அழைக்கும் விளி. அப்ப எனக்கொருகால் ஆடுக செங்கீரை (பெரியாழ். தி. 1, 5, 7).

அப்பன்2 பெ. வள்ளல், புரப்பவர். அப்பனை என்று மறப்பன் சீர் கண்டே (திருவாய். 7, 9, 4).

அப்பன்காளை பெ. (தலையாட்டும்) பெருமாள் மாடு. (செ. ப. அக.)

அப்பனார் பெ. (தந்தை ஒத்த) இறைவன். சேறைச் செந்நெறி மேவிய அப்பனார் உளர் தேவா. 5.

77, 6).

அப்பா1

பெ. 1.தந்தை என்னும் உறவுமுறைப் பெயர். அம்மையே அப்பா ஒப்பிலா மணியே (திரு வாச. 37, 3). அப்பா வந்தடைந்தேன் (பெரியதி. 1,9,5). அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் (திருவருட்பா 4079). அப்பா வீட்டில் இருக்கிறார் (பே.வ.). 2. மூத்தோர் வயதில் இளையவரை அன்புடன் அழைக்கும் சொல். அப்பா அரசே உமைமடந்தைக்கு அருமைக் குருந்தே (திருமலைமுரு. பிள். 24).

அப்பா' இ. சொ. வியப்பு, துன்பம் முதலிய உணர்ச்சி களைத் தெரிவிக்கும் குறிப்புச் சொல். என்அப்பா, மற்று இவ்வெழுபது வெள்ளமும் ஒருவன் தின் னப் போதுமோ (கம்பரா. 6, 30, 40) அவன் வயிற்றுவலியால் அப்பா, அப்பா என்று கதறி னான் (நாட். வ).

அப்பாகம் பெ. மருந்தாகப் பயன்படும் வாலுளுவை. (பச்சிலை. அக.)

அப்பாச்சி பெ. தந்தையின் தாய். (திருநெல்.வ.)

அப்பாசி பெ. விசயநகர அரசரான கிருட்டிண தேவராய ரின் புகழ்பெற்ற அமைச்சர். அப்பாசி யூகி ... இவர் களினும் மெயப்பான புத்தி விதரணமும் (தெய்வச். விறலி. தூது 82). புத்தியில் அப்பாசி நிகர் பாம்ப ணேந்திரன் (பாம்பண. குற. ப. 73).

அப்பாட்டன் பெ. தந்தையின் பாட்டன், முப்பாட்டன். (கதிரை. அக,)

பெ.சொ.அ.1-15 அ

227

அப்பால்'

அப்பாடா இ.சொ. இளைப்பாறுகையை உணர்த்தும் குறிப்புச்சொல். வேலைசெய்து களைத்தபின் அப் பாடா என உட்கார்ந்தான் (நாட். வ.).

அப்பாடி இ. சொ.

அப்பாடா. (நாட்.வ.)

அப்பாத்தாள் பெ. தந்தையின் தாய். (தஞ். வ.)

அப்பாத்தை பெ. தமக்கை. (செ. ப. அக.)

அப்பாயி1 பெ. தந்தையின் தாய். (தஞ். வ.)

அப்பாயி2 பெ. பையன். (செ.ப.அக.)

அப்பாயி3 (அப்பாவி) பெ. பேதை. (முன்.)

அப்பாரு பெ. (அப்பா என்பதன் வடிவுதிரிந்த) தந்தை என்னும் உறவுப்பெயர். எங்க அப்பாரு சொத்து (பே.வ.).

வானைக்

அப்பால்' வி. அ. 1.(கூறப்பட்ட கால ட எல் லைக்கு) மேற்பட்டு, அதன்மேல், அதன்பிறகு. பெயரி னாகிய தொகையும்... உளவே அவ்வும் உரிய அப் பாலான (தொல். சொல். 67 சேனா.). கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன (தேவா. 4, 92,14). எப்பாலவர்க்கும் அப்பாலாம் என் ஆர முதே (திருவாச. 25, 2). அடுபோர் வன்மையால் அமர் ஆடி அப்பால் பாறு ஆர் களிற்று உயர் பல்லவன் (நந்திக்கலம். 40). ஆதி எனும் பொருளுக்கு அப்பால் உண்டாகிலும் நீ (கம்பரா.3,12, 43). அப்பால் அவற்றை உம் அருமைமக்கள்... எடுத்துக் கொள்ள (நாஞ். மரு.மான். 9, 112). 2. (கூறப் பட்டதை) விட. இனி அப்பால் உயர்ந்தது

உண்டோ (கம்பரா. 6, 11, 44). 3. அந்தப்பக்கம். அப்பால் இருந்த வனசரிதர் (பாரதம். 3, 8,16). அப்பால் எவனோ செல்வான் (பாரதி. தேசியம்.15, 3). 4. (அப்பக்கம் என்னும் சேய்மை இடம்) தூரம். இயேசு...போ அப்பாலே சாத்தானே என் றார் (விவிலி. மத்தேயு 4, 10). அப்பால் விலகி நில் லுங்கள் (பே.வ.). 5. மறுபக்கம். அப்பால், தலை மகனும்... மலைச்சாரல் வேட்டம் போய் விளை யாடுகின்றான் (இறை. அக. 2 உரை). ஒரு தானே ஏற்றினள் இனிது அப்பால் (கம்பரா. 2, 7, 36).

அப்பால்' பெ. (நூலில்) சுட்டப்பட்ட பகுதி. அ ஆ உ ஊ ஏ ஒள என்னும் அப்பால் ஆறன் நிலை மொழி முன்னர் (தொல்.எழுத். 174 இளம்.). அப்பால் நாற்கூற்றே மருந்து (குறள். 950).