உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பம்2

பெ. வட்டத்திருப்பி என்னும் கொடிவகை.

அப்பம்2 பெ. (மலை அக.)

அப்பம்' வி. அ. அப்போது என்னும் பொருள் தரும் சொல்லின் திரிபு வடிவம். அப்பம் என்ன நடந் தது? (திருநெல்.வ.)

அப்பம்மா பெ. (தந்தையைப் பெற்ற) பாட்டி. (இலங். வ.)

அப்பமுது பெ. கோயிலில் இறைவனுக்குப் படைக்கும் அப்பம். திருவாராதனை முடிஞ்சவாறே அப்ப முது செய்ய (தெ.இ.க. 5, 724).

...

அப்பர் 1 பெ. ஆண் ஆடு. மோத்தையும் தகரும் உத ளும் அப்பரும் யாட்டின் கண்ணே - அப்பர் என்பது இக்காலத்து வீழ்ந்தது போலும் (தொல். பொ. 602 பேரா.).

அப்பர்' பெ. ஆண் குரங்கு. குரங்கினை அப்பர் என் றலும் கொள்க (முன்.) அப்பர் போல் ஐவர் வந்து நலியலுற்றார் (தேவா. 4,54,3).

அப்பர்' பெ. 1. வயது முதிர்ந்தவர். பப்ப அப்பர் மூத்தவாறு (பெரியதி. 1, 3, 7). 2. மேலோர். அவனை அப்பராகச் சேமம் சாத்தி வைத்து வென்றான் (பெரியதி. 2,10,8 வியாக்.) 3. சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கர சருக்குத் திருஞானசம்பந்தரால் வழங்கப்பட்ட பெயர். திருஞான மாமுனிவர் எங்குற்றார் அப்பர் என (பெரியபு. 21.396).

...

அப்பவாணிகர் பெ. அப்பம் என்னும் பணிகாரம் விற் போர். கூவியர்-அப்பவாணிகர் (சிலப். 5, 24 அடி யார்க்.). அப்பவாணிகர் பாகுடனே வேண்டுவன கூட்டி (பெரும்பாண். 377 நச்.).

அப்பழுக்கு பெ. (அப்பு+அழுக்கு) 1. (படிந்துள்ள) மாசு. அப்பழுக்கு இல்லாத தூய ஆடை (நாட்.வ.). 2. (நடத்தையில்) குற்றம். அவன் அப்பழுக்கு இல்லாதவன் (நாட்.வ.).

அப்பளக்காரம் (அப்பளாக்காரம்) பெ. அப்பளம் ரொட்டி முதலியன செய்வதற்கு மாவில் சேர்க்கும் சோடா உப்பு. உயர்குன்ம நோயகற்றும் அப்பளக் காரமது (பதார்த்த. 1134).

அப்பளக்குழவி பெ. அப்பள மாவுருண்டையை வட்டத் தகடாக்கப் பயன்படும் மரக்குழவி. (நாட் வ.)

22

26

அப்பன்1

அப்பளப்பூ பெ. பூ வடிவமுடைய அச்சுக்கட்டையில் அப்பளமாவை மென்மையாகத் தடவி எடுத்த அப் பளம். (நாட். வ.)

அப்பளம் (அப்பளாம்) பெ. 1.உளுத்தமாவைப் பிசைந்து குழவியால் வட்டவடிவில் தட்டை ஆக்கிச் சுட்டும் பொரித் தும் உண்ணும் உணவுப்பண்டம். கபம் தீர்க்கும் ... உழுந்தப்பளம் (பதார்த்த. 1446). அப்பளம் போல் மீதிருக்கும் அரை மாவல்ல (தமிழ். விடுகதை.

...

108).

2. பயறு, சவ்வரிசி, அரிசிமாவு முதலியவற்றாலும் இவ்வாறு அமைக்கும் பண்டம். (நாட்.வ.)

அப்பளாக்காரம் பெ.

சொற்பட்டி.ப. 147)

அப்பளக்காரம். (சென். இரா.

அப்பளாக்குடுமி பெ. அப்பளம் போன்று வட்ட வடிவம் அமையத் தலைமயிரைச் சுற்றிலும் மழித்தும் கத்த ரித்தும் அமைக்கும் குடுமி. அப்பளாக்குடுமி இப் போது யாரும் வைத்துக்கொள்வதில்லை (நாட்.வ.).

அப்பளாச்சிட்டி பெ.

அப்பளம் வெண்மையாவதற்குப் பயன்படுத்தப்படும் சாறுள்ள ஒருவகைப்பூடு. (சாம்ப.

அக.)

அப்பளாம் பெ.

அப்பளம். (அந்.வ.)

அப்பளி-த்தல் 11 வி. (கரடுமுரடான) சுவர்களின் பள்ளங்களை நிரப்பிச் சாந்து அப்பிப் பூசுதல். (செ.

ப. அக.)

அப்பன்1 பெ. 1. தந்தை. அப்பன் நீ அம்மை நீ (தேவா. 6,95, 1). எங்கள் அப்பன் (திருவாச.9,13). அப்பனே அடல் ஆழியனே (திருவாய். 4, 7, 5). அப்பனை... அமிழ்தை, தன்னையே ஒப்பனை (கம்ப ரா.1,22,68). அப்பர்க்கு முத்திநெறி...உரைக்க வல தம்பிரானே (திருப்பு. 159). ஆதரவு இங்ஙனம் பிள்ளை மேல் வைக்கும் அப்பன் உலகினில் வேறுண்டோ (பாரதி. பாஞ்சாலி. 89). 2. பெரிய தந்தை. (செ. ப. அக. அனு ). 3. தலைவன். மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே (திருமாளி. திருவிசை.1,1). 4. சிவன். அண்ணிக்கும் பெண பிள்ளை அப்பனார் தோட்டத்தில்... முதல்வனைக் கண்ணுற்று (திருமந். 1523). அப்பன் ஆலவாயாதி அருளினால் (தேவா.3,51,11). அக்கனி தரச் சொலி முன் அப்பனை வலத்தில் வரும் (கூளப்ப. காதல் 1). 5. வேங்கடத்திலும் குறுங்குடியிலும் உள்ள திருமால் பெயர். அப்பன் வெளியிட்டபடி எங்ஙனேயென்னில் (குருபரம்.ஆறா.ப.282). அப் பன் வேங்கடவாணன் வைகுந்தை நாதனை