உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்புப்போடு-தல்

அப்புப்போடு-தல் 6 வி. கடனைத் திருப்பிக் கொடுக்காது ஏமாற்றுதல். · (செ. ப. அக. அனு.)

.

அப்புமேழி பெ. கைப்பிடியுள்ள மேழி வகை.

(கோவை

வ.)

அப்புராத்தூணி

பெ. சரகாண்ட பாடாணம்.

(செ.ப.

அக. அனு.)

அப்புலிங்கத்தலம் பெ. திருவானைக்கா என்னும் சிவத் தலம். (சங். அக.)

அப்புலிங்கம் பெ. (சைவம்) ஐம்பூதங்களுக்கு உரியன வாகிய பஞ்சலிங்கத் தலங்களில் அப்புக்கு (நீருக்கு) உரியதாகிய திருவானைக்காக் கோயிலிலுள்ள சிவலிங் கம். அப்புலிங்கத்தின் உள்ளே தோன்றினன் (தந்தி வனப்பு. 210).

அப்புவரி பெ. நீருக்கு விதிக்கப்பட்ட வரி. வேண்டு கோள் அப்புவரி கணக்கப்பேறு... (தெ. இ. க. 4,

648).

அப்புவின் கூறு பெ. (சைவசித்.) ஓடுநீர், உதிரம், சுக் கிலம், மூளை, மச்சை ஆகிய புறநிலைக் கருவிகள். (சிவப்.கட். தத்துவ. புறநிலை.)

அப்புள்ளண்டம் பெ. தகரைச் செடி. (வாகட அக.) அப்புளண்டம் பெ. தகரைச் செடி. (பச்சிலை. அக.)

அப்புறக்கடல் பெ. (அண்டத்திற்கு வெளியே யுள்ள) பெருங்கடல். அப்புறக் கடலும் சுவையற்றன (கம்பரா. 6, 7, 61).

அப்புறத்தான் பெ. பெ. அப்பாற்பட்டவன், கடந்து நிற்பவன். அப்பனை ஒப்பமரர் பாவிக்கும் பாவகத்து அப் புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (திருவிசை. திருப்பல். 6).

அப்புறப்படுத்து-தல் 5 வி, 1. ( கழிவுப் பொருளை ) எடுத்தெறிதல், நீக்குதல். குப்பைத் தாள்களை அப்புறப்படுத்து (பே.வ.). 2. வெளியேற்றுதல். ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் செய்தவர் களைக் காவலர் அப்புறப்படுத்தினர் (செய்தி.வ.).

அப்புறம்1 பெ. 1. அப்பால் உள்ள இடம், கடந்த இடம். அண்டங் கடந்து அப்புறத்தும் இருந்தீர் (தேவா. 7, 2, 2). மூவுலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும் (திருவாச. 42,6). ஆழிமால் வரைக்கு

2

33

அப்பை

அப்புறத்து இருளையும் அவித்த (கம்பரா. 6, 6, 20). 2.(நீங்கிச் சென்ற) தூரம். கண்ணினை அப் புறம் கரந்து போகினும் (கம்பரா. 6,5,6). 3. அந்தப்பக்கம். அப்புறத்து இருந்தான் ... மகோத ரன் (கம்பரா. 6, 15, 34). அவன் அப்புறமாகப் போனான் (நாட்.வ.).

அப்புறம்2 வி. அ. 1. (கூறப்பட்டது முடிந்து) அதன் பின். அப்புறம் உனைக்கண்ட பேர் எல்லாம் பழிக் கவோ (இராமநா. 2, 13). அப்புறம் என்ன நடந்தது (நாட்.வ.) 2. இப்போது அல்லாது சிறிது கழித்துப் பிறகு, பின்னர். கதையை அப்புறமாகச் சொல்கி றேன் (நாட். வ.).

அப்பூச்சி பெ. 1. கண்ணிதழை மடித்துக் கொள்ளுகை. அப்பூச்சியென்று கண்ணை யிறுத்துக் கொண்டு வருவதாய் அபிநயிக்க (பெரியாழ்.தி. 2, 1, 1 வியாக்.). அப்பூச்சி கண்டு ஆடுக (வரத. பாகவத. 6, 63).2. ஒளிந்து நின்று பின்னர்த் திடீரென்று வெளிப்பட்டு மகிழ்விக்கும் விளையாட்டு. (நாட்.வ.)

அப்பூச்சிகாட்டு-தல் 5 வி. கண்ணிதழை மடித்துக்

குழந்தைகளை அச்சுறுத்துதல். பாரதம் கை செய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் (பெரியாழ். தி.2,1,1).

அப்பூதி (அப்பூதியடிகள்) பெ. சைவ அடியார்கள் அறுபத்துமூவருள் ஒருவர். ஒரு நம்பி அப்பூதி அடி யார்க்கும் அடியேன் (தேவா. 7,39, 4).திருநாவுக் கரசின் சரணம் என்னா...வேதியன் அப்பூதியே (நம்பியாண். திருத்தொண்டர்.29).

அப்பூதியடிகள் (அப்பூதி) பெ. திருநாவுக்கரசரைக் காணாமலே அவருக்கு அடிமை பூண்டவரும் நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவருமான அடியார். சீலமுடை அப்பூதியடிகள் (பெரியபு. 21,211).

அப்பெண்டு பெ. பெண். அப்பெண்டு என்னும் சுட்டு, கடிசொல் இல்லை என்பதனால் பெண்டு என நின்றது (தொல். சொல். 165 நச்.).

அப்பை1

(அப்புக்கோவை, அப்பைக்கொவ்வை, அப்பைக்கோவை) பெ. ஒரு கொடி. (வைத். விரி. அக. ப. 19)

அப்பை பெ. கொன்றை. (பச்சிலை. அக.)

அப்பை பெ. சிறுமீன். (செ.ப. அக.)