உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தச்‌ சுற்றோட்டக்‌ குறைபாடுகள்‌ 581

இரத்தச் சர்க்கரைக் குறை காண்க: சர்க்கரைக் குறைவு. இரத்தச் சுற்றோட்டக் குறைபாடுகள் இரத்தச் சுற்றோட்டம் என்பது இரத்தம் இதயத் திலிருந்து இரத்தக் குழாய்கள் மூலம் உடல் முழுதும் பரவுதலாகும். இரத்தக் குழாய்கள் தூய இரத்தம் செல்வது, தூய்மையற்ற இரத்தம் செல்வது என இரு வகைப்படும். தூய்மையற்ற இரத்தம் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் அதனால் பெரிய தீங்குகள் உடலில் ஏற்படுவதில்லை, உயிருக்கும் கெடுதல் இல்லை. தூய இரத்தக் குழாய்கள் அடைப் பினால் உடலில் பல உறுப்புகள் வேலை செய்யா மல் போகின்றன. சில சமயம் உயிருக்கு ஆபத்து ஏற் பட்டு இறப்புக்கு வழி உண்டாகிறது. இந்த இரத்தக் குழாய்களை ஆறு விதமாகப் பிரிக்கலாம். மூளைக்குச் செல்லும் குழாய்கள்; நுரையீரலுக் குச் செல்லும் குழாய்கள், இதயக் குழாய்கள், சிறு நீரகக் குழாய்கள், வயிற்றின் உள்ளுறுப்புகளுக்குச் செல்லும் குழாய்கள், கை, கால உறுப்புகளுக்குச் செல்லும் குழாய்கள் என்பன. அவை குறைபாடுகள் ஏற்படக் காரணம். இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாகி இரத்தக்குழாயில் படிந்து, குழாய் தடித்து, இரத்த அணுக்களுடன் இணைந்து உறைந்து இக்குழாயை அடைத்து விடுதல்; ஓரிடத்தில் உறைந்த கொழுப்பு (அ) இரத்தம் இடம் பெயர்ந்து வேறோர் இடத்தின் இரத்தக் குழாயை அடைத்துவிடுதல்; திசுக்களின் கொல்லேஜன் என்னும் இணைமங்கள் தங்கள் தன்மையால் திரிந்து உண்டாக்கும் பாலி அர்ட்டிரைட்டிஸ் நோடோஸா போன்ற நோய்கள்: பிறவியிலேயே இரத்தக்குழாய் கள் வளராமல் இருப்பது; இரத்தக்குழாய்களில் நோய்க்கிருமிகளால் அழற்சிதோன்றக் குழாய்களின் தன்மை மாறுபட்டுச் சுருங்குதல் ஆகியன. இரத்த ஓட்டம், ஒரு பெரிய குழாயில் அடைப்பு ஏற்பட்டால் பக்கத்திலுள்ள சிறிய குழாய்கள் நன்றாக விரிந்து இரத்தத்தைப் பாதித்த இடங்களுக் குச் செலுத்த உதவுகின்றது. இதைப் பக்கவினை இரத்த ஓட்டம் என்பர். ஆனால் பக்கவினை இரத்த ஓட்டம் மூளை இரத்தக் குழாய்களிலும் இதய இரத்தக் குழாய்களிலும் தோன்றுவது இல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக, முதன்மைச் சாலையை அடைத்துவிட்டால் போக்குவரத்து, அருகிலுள்ள சுற்று வழிப்பாதையில் செல்வதும் சுற்று வழி இரத்தச் சுற்றோட்டக் குறைபாடுகள் 581 இல்லாதபோது முதன்மைச் சாலை முழுதும் அடைத்துப்போவதுமாகும். பல மூளைக் குழாய்கள் அடைப்பினால் வரும் நோய்கள். இரத்தக் குழாய் வெடிப்பு ஏற்பட்டு இறப்பு ஏற்படுதல்; ஒரு பக்கம் கை - கால் இயங்காமல் போதல் (பாரிசவாயு என்றும் கூறுவர்); குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு நாக்கு கை-கால்கள் இயங்காமல், சிறிது அறிவு நிலைதடுமாற்றம் ஏற்படுதல், இரண்டு கால்களும் இயங்காமல் போதல்; தற்காலத்தில் மேற்கண்ட மூளைக்குழாய் அடைப்பை அறுவை மருத்துவம் மூலம் குணமடையச் செய்ய முடியும். அடைப்பு ஏற்பட்டுச் சில நாள்கள் அல்லது மாதம் கழித்து வந்தால் ஒன்றும் செய்ய முடியாது. சில மருந்துகள் கொடுத்து மேலும் அடைப்புகள் வாராமல் தடுத்துக் கொள்ளலாம். நுரையீரல் குழாய் அடைப்புகளினால் உடனே உயிருக்கு எதுவும் ஏற்படாது. இதயத்தைப் பாதித்து இதயம் சரிவர இயங்காமல் சில மாதங்களில் இறப்பு ஏற்படும். மருத்துவ முறையில் நோயை முற்றிலும் குணப்படுத்தும் மருந்துக்கள் இன்னமும் சரிவரக் கண்டுபிடிக்கப்படவில்லை. இதயக் குழாய்கள் அடைப்பு. இதயம் சரிவர வேலை செய்ய இரண்டு முக்கிய தமனிகள் இருக்கின்றன. இத் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால் அவை குருதி யளிக்கும் இதயத்தின் பாகங்கள் இரத்த ஓட்டம் இல்லாமல் இறந்துவிடும். ஆகையால் இதயம் சரிவர வேலை செய்யாது. இரத்தக் குழாய் அடைப் பால் இரத்தம் செல்வது குறையும். ஆனால் தசை கள் பாதிக்கப்படுவதில்லை. குழாயில் அடைப்பு ஏற்பட்ட உடனே அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் ஏற்படும். இரத்தக் குழாயில் அடைப்பு ஏற் பட்டு மருத்துவ முறைகளினால் சிறிதளவு குண மடைந்து சில ஆண்டுகள் வாழலாம். இந்த இரத்தக் குழாய் அடைப்பினால் ஏற்படும் மரணம் சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இன்று ஓரளவு குறைந்துள்ளதற்கு மருத்துவ முன்னேற்றம், இதய அறுவை சிகிச்சை முறைகள், உணவுக் கட்டுப் பாடு ஆகியன காரணங்களாகும். இதய நோய் வந்தவர்கள் தற்சமயம் ஒவ்வொரு மருத்துவ மனை களிலும் மிகக்கடும் மருத்துவப் பிரிவில் சேர்ந்து நலமடைகிறார்கள். குழாய் அடைப்பினால் ஏற்படும் அறிகுறிகள். மார்பு வலி இடப்பக்கம் அதிகமாதல், வலியுடன் வியர்வை அதிகமாக வருதல், இரத்த அழுத்தம்-நாடித்துடிப்புக் குறைதல், அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் ஏற்படுதல், இதயத் துடிப்பு மிகவும் குறைந்து லய மாறுபாடு ஏற்படுதல் முதலியன. இரத்தக் குழாய் அடைப்பு களினால் மரணவீதம் நவீன மருத்துவ வசதி களினால் முன்னர் 100 விழுக்காடு இருந்தநிலை