உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்துப் படலம்

83

உண்மையும் பொய்யும் ஒருங்கு கலந்து
காலம் போக்கும் காரணம் இன்னதென்று
அப்ப முத்து[1] நீ அறிவா யோடா?
கொட்டுக் குடவைப்[2] புட்டும் தின்று, மேல்
குறுணிக் காப்பியும் குடித்தால் போதுமா! 85
வீட்டுக் காரியம் விசாரித்து அறிய
மதியில் லாதவன் மனிதனா? மாடா?
சாளையும் சோறும் சண்ணும் சப்பா.[3]
களத்துச் சுவரைக் கடந்து போவது
எத்தனை வட்டி நெல் என்று அறி வாயோ? 90
கூடப் பிறந்தவள் கும்பி கொதித்து
வந்துநின் றாலும், மாபா தகன்நீ,
ஆழக்கு நெல்லும் அளித்திடு வாயோ!
அலர்தலை யுலகில் அறவழி நில்லா
அரசர் மகுடம் அனைத்தையும் ஒன்றாய் 95
அடித்து நொறுக்கி அழலிற் காய்ச்சி


  1. 83. அப்பமுத்து - கொஞ்ச காலத்துக்கு முன் நாகர்கோவிலில் இருந்த பேர்போன ஒரு மூடன்.
  2. 84. கொட்டுக் குடவை பாத்திரவகை,
  3. 88-89. சாளை - சாளை மீன்; இதில் துப்புவாளை என்னொரு
    வகையுண்டு: இம்மீன் முள் அதிகமுடையதாதலால், சாப்பிடும்போது, முள்ளைத் துப்பிக்கொண்டே யிருக்கவேண்டி
    யிருக்கும். இப்படி முள்ளை நிக்கி நீக்கிச் சாப்பிடுவதற்கு
    அதிக நேரமாகும். பெண்டிர், இந்த மீனைக் கறிசமைத்துக்
    கணவருக்குப் பரிமாறி, அவர் சாப்பிட்டு எழுவதற்கு முன்,
    களத்துச் சுவரின் மேலாக அவரறியாமல் நெல்லை அப்புறப்படுத்தி விற்றுப் பணம் சேர்த்துக் கொள்வதுண்டு; இந்தப் பழக்கமே இந்த வரிகளில் சுட்டப்படுகிறது. சண்ணும் - நிறையச் சாப்பிடும். சப்பா - பயனற்றவன் என்பது கருத்து.