உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ1

சுட்டிக் கவனிக்கச்

செய்தற்

அதோ' இ.சொ. குறிப்பு. அங்கதோ உள் கறுத்து அழகில் தேய்ந்தது (சீவக. 2679). அம்மைச்சி வந்தாள் அதோ (பெருந். 1685). அதோ மீனக் கொடி அதோ படைமுழக்கம் (பிசிராந். ப.125).

அதோ ப. (அதசு [adhas] என்னும் சொல் பிற சொல்லோடு புணரும்போது திரிந்த வடிவம்) கீழ். அதோ முகமும் தந்து (கந்தர்கலி. 76),

அதோகதி பெ.

1. எழுவகையான நரகங்களுள் ஒன்று. கூடசாலம்... அதோகதி ... செந்து... நரகப் பெயர் (பிங். 456). அருஞ்சிவத்துரோகமாய் அதோகதிக்கண் ஆழ்குவார் (பெருந். பு. 22, 22 பா. பே.). 2. தாழ்நிலை. வாருதியோ மேன்மைப்படும் என்று அதோகதியாய்ப்பண்ணி (கடம்பர்.உலா 179). அதோ கதியாய்ப் போனார்கள்... பாண்டவர்கள் (ஏணி யேற்றம் 24).

அதோங்கம் பெ. அரையின் கீழ்ப்பகுதி. (தைலவ. உரை/செ. ப. அக.)

54

அதோசாதி பெ. தாழ்ந்தகுலம். அதோசாதி அகத் தின் அருந்தினன் (சிவதரு.11, 31).

அதோதிருட்டி பெ. பிம்பங்களின் கீழ்நோக்கிய பார்வை. (சிற். செந். ப. 294)

அதோபாகம் (சிவதரு. 12,30).

அதோபாகம் பெ. அடிப்பக்கம்.

அதோமாயை பெ. அசுத்தப்

பிரமாண்டத்து

பிரபஞ்சத்துக்கு முதற்

காரணமான மாயை. (சி.சி. 2,51 சிவாக்.)

அதோமார்க்கம் பெ. தாழ்ந்த நெறி. (சி.சி. 2, 51

சிவாக்.)

அதோமுகசிரம் பெ.

நாட்டியத்தில்

பார்க்கும் அபிநயம். (பரத. 1,76 )

தலைகுனிந்து

அதோமுகம்1 பெ. 1.கீழ்நோக்கிய முகம். நடந்தது தேறல் அதோமுகம் (திருமந். 1146). ஐந்து முகத் தோடு அதோமுகம் (கந்தர்கலி. 76). 2. தலை கீழான நிலை. அதோமுகமாகி...கொம்பர் நாலும் ஒருவனை (இரகு. சம்புக. 41). பிறப்பு அதோமுகம் (வைராக். சத, 34 உரை). 3. தலைகுனிந்து பார்க்கை. (சங். அக.)

அதோமுகம்' பெ. (கடல்) கழிமுகம். அதோமுகம் புகாரோடு... கழிமுகம் (பிங். 586).

208

3

அதோமுகம்3 பெ.

பிரகிருதிமாயை.

அந்தக்கரணம்

எண் திசை

தாங்கும் அதோமுகம் (திருமந். 521).

அதோமுகி பெ. கவிழ்தும்பை. (வின்.)

அதோலம்பம் பெ. செங்குத்தான நிலை. (முன்.)

அதோலோகம் பெ. கீழுலகம். (சங். அக.)

அதோவதனம் பெ. கீழ்நோக்கிய முகம். (முன்.)

அதோவாயு பெ.

அபான வாயு. (முன்.)

அதோள் வி. அ. அவ்விடத்து. அதோள் கொண்டான் (தொல்.எழுத். 399 இளம்.).

அதோளி வி. அ. அவ்விடத்து. அதோளிக் கொண் டான் (தொல். எழுத். 160 இளம்.).

அந்த பெ.அ. சேய்மையிலுள்ள பொருளை அல்லது குறிப்பிட்ட பொருளைச் சுட்டும் பெயரடை, காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் (மணிமே. 17, 34). அந்த இடைமருதில் (திருவாச. 13, 2). அந்த நகரும் கடிகாவும் அழிவித்து (கம்பரா. 5, 12, 125). அந்தச் சிந்தை நினைவரிய செயல் (பெரியபு. 12, 35). சிந்தித்த இடத்து அந்த வடிவாகை திடமே (தத்து. பிர. 137). அந்த வேலையில் வள்ளி நாயகி... கந்த வேள்பதம் வணங்கி (கந்தபு. 6, 24, 215). அந்த எல்லையையும் வணக்கம் செய்வேன் பூரணமாய் (தாயுமா. 26,

...

10). அந்த உலகில் உள்ளார் பலரும் (திருவருட்பா 5006). வஞ்சனைப் பேய்கள் அந்தக் குளத்தில் என்பார் (பாரதி. தேசியம், 15, 1). அந்தச் சட்ட திட்டங்களை மூச்செனவே காக்க (பாரதிதாசன். 2,

60).

அந்த இ. சொ,

இரக்கக் குறிப்பு. அந்தொக்க அரற்ற

வோ (கம்பரா. 6, 28, 38).

அந்தக்கரணசாட்சி பெ.

மனச்சாட்சி. (வின்.)

அந்தக்கரணசைதன்னியர்

பெ.

அந்தக்கரணங்களே

ஆன்மா என்று கூறும் கொள்கையினர். (கதிரை. அக.)

அந்தக்கரணம் பெ. ஆன்ம தத்துவப் பகுதிக்குரியன வாய், அகத்தினின்று தொழில் செய்யும் மனம், புத்தி சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு உட்கருவிகள். அந்தக்கரணம் அவற்றின் ஒன்று அன்று (சி. போ. 4). அந்த மனம் அந்தக்கரணம் புத்தியுடன் ஆங்காரம் சிந்தை (உண்மை வி. 16). அந்தக்கரண அமைச்சரும் (ஞானா.16, 30). அந்தக்கரணம் கடந்த கருப்பொருளே (பட்டினத்துப். திருக்கழு.3).