உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளவளாவு 1 - தல்

அளவளாவு தல் 5 வி. கலந்து

கலந்து பேசுதல்,

கலத்தல். அவர்களோடு அளவளாவிக் கலந்து அருளினார் காழிநாடர் (பெரியபு. 28,523). இருக்கையும் இலை பாக்கும் கொடுத்து அளவளாவி இனிது இருந்த (பாரத வெண்.39 உரை).

அளவளாய் நட்டாலும்

நண்பல்லார் நண்பல்லர் (மூதுரை 4).

அளவளாவு ? பெ. மனக்கலப்பு. அளவளாவு இல்லா தான்வாழ்க்கை அற்று (குறள். 523).

...

அளவறு-தல் 4வி /6வி. அளவுகடத்தல். அளவறு கலவி யின் முழுகிய குறமகள் (திருவ. 20, 42).

அளவறு-த்தல் 11 வி. 1. அளந்தறிதல். அளவறுப்பதற் கரியவன் (திருவாச. 5,35). 2. வரம்பு நீக்குதல். (செ. சொ. பேரக.)

அளவன்1 பெ. தானியம் அளப்போன். (செ.ப.அக.) அளவன்' பெ. அளவீடு செய்யும் சிற்றூர் அலுவலர். (சென். இரா. சொற்பட்டி. ப. 352)

அளவன்' பெ. செயற்கைப்பாடாணம், சோரபாடாணம். (வைத். விரி. அக. ப. 24)

அளவன் பெ. உப்புக்காய்ச்சுவோன். (சாம்ப. அக ) அளவாக்கு-தல் 5 வி. சரிமட்டம் ஆக்குதல். நூற்பிடித்த பத்தியை அளவாக்கவேணும் (திருமங்கை. திருக்குறுந்.

10 வியாக்.).

அளவி (அளவு 1) பெ. எண்ணல், நீட்டல், முகத்தல் முதலியவற்றால் வரையறுக்கப்படும் அளவு. அளவியை யார்க்கும் அறிவரியோன் (திருக்கோ.10).

அளவி' பெ. இரயில் தண்டவாளங்களுக் கிடையேயுள்ள இடை வெளியளவு. (கலை. அக.1 ப. 21)

அளவிடு-தல் 6 வி. 1. அளத்தல். நிலமங்கை தன்னை அளவிட்ட சேவடி (இயற். பெரியதிருமடல் 9). மண் அளவிடும் நெடுவலத்தர் (கம்பரா. 3, 6, 40). மண் அளவிட்டிடுமால்கொல் என்றே 2.மதிப்பிடுதல். (செ. ப. அக.)

ணுற்ற எல்லை

(கந்தபு. 2,23,7).

3.ஆராய்ந்தறிதல். (வின்.)

அளவிடை பெ. மதிப்பிடுகை. சத்துருவை அளவிடை பார் (வின்.).

அளவிமானி பெ. பதிவளவைக்கருவி, மழையளவு வீதத் தையும் காற்றோட்ட நீரோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப்படிகள் குறித்த கருவிகளில் ஒன்று. (கலை. அக.3 ப.32)

473

அளவு1

அளவியல் பெ. (யாப்.) பாவின் அடிவரையறை. நோக்கே பாவே அளவியல் எனாஅ (தொல். பொ.310 இளம்.).

அளவியற்சந்தம் பெ. (யாப்.) ஓரடியில் நான்கு முதல் இருபத்தாறெழுத்து வரை அமைந்து அளவொத்து வரும் அடிகளுடைய செய்யுள் வகை. நாலெழுத்து முதலாக இருபத்தாறு எழுத்தின்காறும் உயர்ந்த இருபத்து மூன்று அடியாலும் வந்து தம்முள் ஒத் தும் குருவும் இலகும் ஒத்தும் வந்தன அளவியற் சந்தம் (யாப். வி. 95 ப. உரை).

அளவியற்றாண்டகம் பெ. (யாப்) ஓரடியில் இருபத் தேழெழுத்தும் அதற்கு மேலும் அமைந்து தம்முள் எழுத்தும் குருலகுவும் ஒத்துவருவன அளவியற்றாண்

டகம்.

(முன்.)

அளவில் வி. அ. 1. மட்டில், வரையில். என் அளவில் யாதொரு குறையும் நேராது (பே.வ.). 2. உடனே. அவன் சொன்ன அளவில் எல்லாரும் பணத்தைக் கொடுத்துவிட்டார்கள் (செ.சொ. பேரக.)

அளவில்லான் பெ. ஆற்றலும் அன்பும் மிக்க இறைவன். அருள்பெறுவதெளிதாமோ? அளவில்லானே (அந் தோனி. அண். 4).

அளவிற-த்தல் 12 வி. 1. எண்ணமுடியாதாதல். அள விறந்த செல்வத்தின் (குசே. 79). 2. அளவு கடத்தல். ஆவியும் ஒற்றும் அளவிறந்திசைத்தலும் (நன். 101).

அளவினார் பெ. நேர்வாளம். (சங். அக.)

அளவு1 (அளவி') பெ. 1. எண்ணல் நீட்டல் முகத் தல் முதலியவற்றால் வரையறுக்கப்படும் அளவு. பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே (தொல். பொ. 346 இளம்.). இளையள் என்று அவள் புனை அளவு அறியேன் (குறுந். 70). யாங்குப் பெரிதாயினும் நோய் அளவு எனைத்தே (புறநா. 245, 1). ஆற்றின் அளவும் அசையும் நற்புலமும் (மலைபடு. 67). ஆற் றின் அளவறிந்து ஈக (குறள். 477). கோல் அளவு இருபத்துநால் விரலாக (சிலப். 3, 100). அளவிறந்த பல தேவர்கள் (தேவா. 7, 67, 4). ஆக்கம் அளவு இறுதி இல்லாய் (திருவாச. 1, 41). ஆழியான்அள வின் நாமம் (கம்பரா. 5, 8,21). துறந்தார் பெரு மைக்கு அளவு கூறின் (குறள். 22 மணக்.). மேரு மால் வரை வியன் அளவு இற்றென விரிக்கின் (செ.பாகவத. 5,3,16). நொய்யில் பிளவு அளவேனும் பகிர்மின்கள் (கந்தரலங். 18). அளவிலாத் துன்பம் அடிமை செய்தது

(நாஞ். மரு. LOIT GIT. 9, 508).