உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அளம்+

அளம்' பெ. கூர்மை. அளமே கூர்மையும் (அக.நி.

அம்முதல். 159).

அளம்' பெ. செறிவு. அளமே செறிவும் (முன்.). அளம் பெறு செயவேல் கொண்ட அதிபன் (ஞானாதிக்க. ஞானா.உற். 7).

அளம்' பெ. துன்பம், வருத்தம். அளம்பட்டு (தேவா.

1, 13, 9).

அளம்" (அளமம்) பெ. பொன். (வாகட அக.)

அளம்படு-தல் 6 ai. வருந்துதல். அளம்பட்டு அறி வொண்ணாவகை (தேவா. 1,13,9).

அளம்பல் பெ. வெடங்குறுணி மரம். (செ. ப. அக.)

அளம்பற்று-தல் 5 வி. உப்புப்பூத்தல். உளுத்து அளம் பற்றின சுவர் (திருமங்கை. திருக்குறுந். 19 வியாக்.).

அளமதாம் பெ. வெண் தோன்றி (வாகட அக.)

அளமம் (அளம்ī) பெ. பொன். (சங். அக.)

அளமரல் (அலமரல்) பெ. கலக்கம். அளமரல் இலாத இன்பக் கடலகத்து அழுந்தினானே (சீவக. 841).

அளமரு-தல் 13 வி. அலமருதல், கலங்குதல். இளமழை அளமரு குயிலினம் அழுங்கி (சீவக. 49). அள மரும் ஆறுறுத்தகற்றினான் (கச்சி. காஞ்சி. தீர்த்த. 24). அளமரு தம் மனம்செல் அவ்வழி ஒழுகிநிற்பர் (குசே.

119).

அளர்1 பெ. நீர். (சங். அக.)

விரி.அக.ப.23)

அளர்' பெ. மஞ்சள். (வைத். விரி. அக. ப. 23)

அளர்3 பெ. உவர். சுவரில் அளர் தாக்கியிருக்கிறது

(Gu. a.).

அளர் + பெ.

1. சேறு. (சாம்ப. அக.) 2.

களிமண்.

(முன்.)

அளர்க்கம் (அளருக்கம்) பெ. தூதுவளை. (தைலவ.

16] செ. ப. அக.)

அளர்நிலம் பெ. களர்நிலம். (ராட். அக.)

அளர்ப்பூளை பெ. அளத்துப்பச்சை. (புதுவை வ.)

அளருக்கம் (அளர்க்கம்) பெ. தூதுவளை. (வாகட அக.)

41

72

அளவளப்பு

அளவஞ்சிமூலி பெ. தேட்கொடுக்கி. (சாம்ப. அக.) அளவடி பெ. 1. (யாப்.) பத்தெழுத்து முதல் பதினான்கெழுத்து வரையமைந்த அடி. அளவடி மிகுதி உளப்படத் தோன்றி (தொல். QUIT, 365 இளம்.). 2. (யாப்.) நாற்சீரால் அமையும் அடி. அளவடி நெடிலடி நாற்சீர் ஐஞ்சீர் (யாப். வி. 24). நாற்சீரான் வந்த அடி அளவடி (யாப். காரிகை 12

குணசா.).

அளவடிவிருத்தம் பெ. கலிவிருத்தம். (த.த. அக.) அளவநிலம் பெ. களர்நிலம். (ராட். அக.)

அளவப்பொட்டல் பெ. களர் நிலம். (முன்.)

அளவம் பெ. ஒருவனைப்போல் நடித்துப்பரிகசித்தல். (த. த. அக.)

அளவர்1 பெ. உப்பமைப்போர். ஆயபேரளத்து அள வர்கள் அளப்பன உப்பு (பெரியபு. 19, 34). வெள் ளுப்புப்பகர்நர் அளவருமாம் (சிலப். 5, 25 அடி யார்க்). அளவர் கணநிறையும் கழிநெய்தல் (திரு வால. பு. திருநாட்டுச். 13). வெள்ளாளர் அளவர் பள்ளிகள் பறம்பர் உட்பட உழுது இறுத்து ... (தெ. இ.க.7,759). பரதவர் அளவர் வாரிப் படுத்த மீன் உப்பின் குப்பை (கந்தபு. ஆற்றுப். 30). மருங் கினில் அளவர் குரம்பையும் (சீகாளத்திப்பு.2, 10).

அளவர்" பெ. நிலம் அளப்பவர். (தொ.வ.)

அளவர்' பெ. உழுதுபயிரிடுவோர். (த.த. அக.) அளவல் பெ.

அளவளாவுகை. நீயும் கண்டு நும ரொடும் எண்ணி அறிவு அறிந்து அளவல் வேண் டும் (நற்.32, 5-6).

அளவழிச்சந்தம் பெ. (யாப்.) ஒரு அடியில் நான்கு முதல் இருபத்தாறெழுத்து வரை அமைந்து தம்முள் அளவு ஒவ்வாத அடிகளையுடைய செய்யுள் வகை. எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வரு வன அளவழிச்சந்தம் (யாப். வி. 95 ப. உரை).

அளவழித்தாண்டகம் பெ. (யாப்.) ஓரடியில் இருபத்தே ழெழுத்தும் அதற்கு மேலும் அமைந்து தம்முள் அள வொவ்வாத அடிகளை உடைய செய்யுள் வகை. எழுத்து ஒவ்வாதும் எழுத்து அலகு ஒவ்வாதும் வருவன அளவழித்தாண்டகம் (முன்.).

அளவளப்பு (அளகளப்பு) பெ. அளவளாவுகை. (வின்.)