உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவிருத்தி

ஆறு மூன்றும் அமைந்த நாலமிர்த மேந்த (சீவக. 1125). அறவியான் தானும் அறஅமிர்தம் ஈந்தான் (நீல. 127).

அறவிருத்தி பெ. நல்லனமேம்படுகை. தருமமிகுஞானம் வயிராகம் செல்வம் என நான்காய் ஏறும் அற விருத்தி (சிவப்பிர.விகா.209)

அறவிலை பெ. 1. பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறத்தைக் கொள்ளுகை. அறவிலை வணி கன் ஆய் அலன் (புறநா.134,2). 2. நிபந்தனை எதுவும் அற்ற விற்பனை. என் உயிரை அறவிலை செய்தனன் (திருவாய். 8, 1, 10).

அறவிலை வணிகன்

பெ.

(அறவிலைவாணிகன்) பொருளை விலையாகக் கொடுத்து அறத்தை வரங்கு பவன். இம்மைச் செய்தது மறுமைக்காமெனும் அறவிலை வணிகன் ஆய் அலன் (புறநா. 134, 1-2).

அறவிலைவாணிகன்

(அறவிலை வணிகன்)

பெ.

பொருளை விலையாகக் கொடுத்து அறத்தை வாங்கு பவன். (முன். 134 பா.பே.)

அற

அறவினை பெ. நற்செயல், புண்ணியச் செயல். வினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண் ணேவல் செய்வார்கண் இல் (குறள். 909).

அறவு பெ.

ஒழிகை, இல்லாமற் போகை. கலங்கி மொழிதல் கை அறவு உரைத்தல் (தொல். பொ. 262 இளம்.). நீரறவு அறியாக் கரகத்து (புறநா. 1,12). பயன் அறவு அறியா வளங்கெழு திருநகர் (மதுரைக். 216). அறவு ஆக்கிய இன்பம் (சீவக. 218). ஏயிடையோரறவு இன்றா இன்பம் மூர்த்தி (சூளா. 2065).

செய் திரு

அறவுபதை பெ. (மன இயல்பு அறியும்) ஒற்றுச் சோதனை நான்கனுள் ஒன்று.

அறவுபதையாவது புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒரு வனை வைத்தற்கு எண்ணினம் இதுதான் யாவர்க் கும் இயைந்தது நின்கருத்து என்னை எனச் சூளுற வோடு சொல்லுவித்தல் (குறள். 501 பரிமே.).

அறவுரை பெ. நன்னெறி கூறுகை, தருமோபதேசம். செவ்விய அறவுரை செவிவயின் உதவ (கம்பரா. 3, 2, 35). அறவுரை கேட்டல் நினைத்தல் (அருங்கலச்.124).

49

04

4

அறவோர்

அறவுளி' பெ. நோய் நீங்கி நலம்பெறச் செய்யும் மந்தி

ரம். (வின்.)

அறவுளி' பெ. முடிவு (முன்.)

அறவூது-தல் 5 வி. புடமிடுதல். (கதிரை. அக.)

அறவை 1-த்தல் 11 வி. புடமிடுதல்.

அறவைத்தோங் கும் பொன்னிறத்தர் (கூர்மபு. பூருவ. 44,5).

அறவை' பெ. 1. நன்னெறி, தருமநெறி. அறவை நெஞ்சத்து ஆயர் (புறநா. 390, 1). 2. முற்பிறப்பில் அறம் செய்த உயிர்கள். அறவை அல்லது பிறபுகப் பெறாஅ (பெருங். 1,46,287).

அறவை பெ. தீமை. அறவைத் தொழில் புரிந்து (தேவா. 4,110, 7).

அறவை * பெ. உதவியற்ற நிலை. அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு (திருவாச. 37, 6). அற வைப் பிணஞ்சுடுதல் (பிங்.109)

அறவைச்சோறு பெ. ஆதரவு அற்றோருக்கு அளிக்கும் உணவு. ஆதுலர்ச்சாலை அறவைச்சோறு இந் நான்கெட்டும் இறைவிசெய்தருமம் (முன்.).

...

அறவைத்தூரியம் பெ.ஆதரவு அற்றோருக்கு அளிக்கும் உடை. அறவைப் பிணஞ்சுடுதல் அறவைத்தூரி யம் இறைவிசெய் தருமம் (முன்.).

...

அறவைப்பிணஞ்சுடு-தல் 6 வி. ஆதரவு அற்று இறந்த வர் உடலைச் சுடுகாட்டில் எரித்தல். அறவைப்பிணம் சுடுதல்... இறைவிசெய் தருமம் (முன்.).

அறவைப்பு பெ. புடம் வைக்கை. (யாழ். அக.)

அறவோர் பெ. 1. அறத்திறமுடையவர். அறவோர் புகழ்ந்த ஆய் கோலனனே (புறநா. 221, 3).2. அந் தணர். அறவோர் உள்ளார் அருமறை காப்ப (பரிபா.திர. 3,1). அந்தணர் என்போர் அறவோர் (குறள்.30), 3. இல்லறத்திலிருந்து விரதம் காப்பவர், சாவக நோன்பிகள். அறவோர்க்கு அளித்தலும் அந் தணர் ஓம்பலும் (சிலப். 16, 71). 4. (சமண, பௌத்தத்) துறவியர், முனிவர். அறவோர் பள்ளியும் (சிலப். 5, 179). சிறையோர் கோட்டம் அறவோர்க்கு ஆக்கினன் (மணிமே. 19, 161-162).