உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர்பள்ளி

அறவோர்பள்ளி பெ. சமண பௌத்தர் தங்குமிடம். அறவோர்பள்ளியும் அறனோம்படையும் (சிலப். 5, 179 அறவோர் பள்ளி-அருகர் பள்ளி, புத்தர் பள்ளி. அரும்.).

அறவோலை பெ. கொடை ஆவணம். (செ. ப. அக.

அனு,)

அறவோள் பெ.

உமையம்மை. அறவோள் அமர்ந்த பாகன் (ஞானா. 1).

அறவோன் பெ. 1. சான்றோன், தருமவான். மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல (நற்.136,3). அறவோன் மகனே மறவோர் செம்மால் (புறநா. 366,6). அறவோர் அவைக்களம் (சிலப். 30,193). 2. புத்தன். அறவோன் ஆசனம் (மணிமே. 12,11).

அறளிகா பெ. சுமார் பதினொரு வயதான குதிரையி னுடைய பற்களின் பொன்னிறம்.(அசுவசா.6)

அறளை பெ. 1. நச்சுத் தொந்தரவு. (இலங்.வ.) 2. ஒரு நோய்.(வின்.)

அறன் (அறம் ) பெ. 1. நன்னெறி, தருமம். அறன்இல் காட்சியொடு (புறநா. 210,2). அந்தணர் அறன் அமர்ந்தோய் பரிபா. 14, 28). மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன் (குறள். 34). அறன் நிரம்பிய அருளுடை அருந்தவர் (கம்பரா.2, 2, 78). 2. வேள்வித் தலைவன். ஞாயிறும் திங்களும் அற னும் ஐவரும் (பரிபா. 3, 5). 3. கண்ணோட்டம். அறனில் அன்னை அருங்கடிப் படுப்ப (நற். 63,6).

அறன்கடை பெ. தீவினை, பாவம். அறன் கடைப் படா வாழ்க்கையும் (அகநா. 155, 1). அறன்கடை நின்றாருளெல்லாம் (குறள். 142). பண்டையீட்டும் அறன் கடை முழுதும் தேய்த்து (கச்சி. காஞ்சி. தீர்த்த. 70). அறன்கடை நயக்கும் (குசே.545).

அறன்மகன் பெ. (காப்.) பாண்டவருள் மூத்தவனாகிய தருமன். அறன்மகன் முதலோர் ஒழிவுறத் துயரம் (குசே.695).

அறனில்பால் பெ. தீவினை. கனலியர்மாதோ போக்கிய புணர்த்த அறனில்பாலே (ஐங்.376).

...

அறனிலாளன் பெ. நற்செயலில்லாதவன். அறனி லாளற் கண்டபொழுதில் சினவுவென் (ஐங்.118).

அறனையம் பெ. காட்டுக் கருணை. (செ. ப. அக. அனு.)

4

95

அறி -தல்

அறனோம்படை பெ. நன்னெறி/தருமம் பாதுகாக்கு மிடம், நன்னெறி/தருமம் கற்பிக்கும் இடம். அற னோம்படை - தருமம் பாதுகாக்கிற இடம் (சிலப். 5,179 அரும்.).

அறாக்கட்டை பெ. 1, மூடன். (செ.ப.அக.) 2. கருமி. (Loir.)

அறாட்டம் பெ. செண்பகப்பூ. (வாகட அக.)

ஆறாட்டுப்பறாட்டு பெ. போதியதும் போதாதுமானது. சம்சாரபோகம்...அறாட்டுப் பறாட்டாய் இருக்கை யாலே (நம். திருவிருத். 23 வியாக்.).

அறாம்பை பெ. தும்பை. (சங். அக.)

அறாமதி பெ. நாரை. (சாம்ப. அக.)

அறாமி பெ. 1. இடக்குப் பண்ணும் குதிரை. (அசுவசா.

139) 2.

குறும்புத்தனம் கொண்டது. (செ.ப.அக.)

அறாமை பெ. கவிழ்தும்பைச்செடி. (மலை அக.)

அறாயிரம் பெ. ஆறாயிரம். அறாயிரம் (தொல்.எழுத். 469 இளம்.).

எனவரும்

அறாவட்டி பெ. மிகுந்த வட்டி. அன்னியரை எல்லாம் அறாவட்டி வாங்கி (நெல்விடு. 368).

அறாவழக்கு பெ. 1. முடிவுக்கு வாராத வழக்கு. கொட்டை முந்தினதோ பனை முந்தினதோ என் கிற அறாவழக்கிலே (சிவப்பிர.35 உரை). 2.நியா யத்திற்குப் புறம்பான வழக்கு. (கோவை வ.)

அறாவிலை பெ. அளவுக்கு மேற்பட்ட விலை. நடந்து கொள்ளுநர்க்கு அறாவிலை பகர்ந்து (திருவிளை. பு.

41, 17).

அறாவு-தல் 5வி. அடித்தல். மத்திகையினால் அறாவி வந்து தோன்றினான்... அண்ணலே (சீவக. 703).

அறாவெட்டு பெ. இரண்டு துண்டு ஆகாத வெட்டு. இடையன் வெட்டு அறா வெட்டு (பழமொழி).

அறி -தல் 4 வி. 1. உணர்தல், தெரிந்து கொள்ளுதல். கடவது அறிந்த இன்குரல் விறலியர் (மலைபடு. 536). புலவரை அறியாத புகழ் (பரிபா. 19,2).