உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறி2

...

எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில் (குறள். 582). அறியாப் பாலகன் (மணிமே. 6,146). மூவரும் அறிகிலர் (திருவாச. 20,8). அனையவன் யார் என அறிதியாதியேல் (கம்பரா. 5, 12, 75). நீ அறிந்து அருளிக் காப்பதல்லால் (கலிங். 213). 2.பொருள், கலை முதலியன) தெரிதல். பெயரே வினையென்று ஆயிரண்டென்ப அறிந்திசினோரே (தொல்.சொல். 158 சேனா.). இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய (புறநா.19,5). அன்னை யும் அறிந்தனள் அலரும் ஆயின்று (ஐங். 236). ஆடல் அறியா அரிவை போலவும் (பரிபா.7,17). அறிதோறு அறியாமை கண்டற்றால் (குறள்.1110). ஈசனே எனும் இத்தனை யல்லது பேசுமாறு அறி யாள் ஒரு பேதையே (தேவா. 5,81,3).3. நினைத் தல். என்றும் என்தோள் பிரிபு அறியலர் (நற்.1, 2). நன்றியறிதல் பொறையுடைமை (ஆசாரக்.1). செய்தநன்று அறிதல் (ஞானா. 24, 5). 4. காணு தல், பார்த்தல். மயில் அறிபு அறியாமன்னோ கிளியே (நற். 13,8-9). உரு அறி வாரா ஒன்றன் ஊழியும் (பரிபா. 2,6).நாடு அறியப் பூமாலை அப்பி (பரிபா.திர.2, 53). பொன்னகர் புக்கபின் அறிவல் போகென்றான் (சீவக. 1620). நாராய ணன் அறியா நாண்மலர்த்தாள் (திருவாச. 16, 1). தேடும் அயனும் திருமாலும் அறிதற்கரிய திருப் பாதம் (பெரியபு.29,205.5. மதித்தல். இனைத் தென எண் வரம்பு அறியா யாக்கையை (பரிபா. 3, 45). யாமறிவதில்லை மக்கட்பேறல்ல பிற (குறள். 61).6. உறுதிப்படுத்தல். அழிபடல் ஆற் றால் அறிமுறையேன்று (புற. வெண். 173). 7. பயிலு தல். களவறிந்தார் நெஞ்சிற் கரவு (குறள். 288). 8. துய்த்தல். கண்டுகேட்டு உண்டுயிர்த்துற்றறி யும் ஐம்புலனும் (முன். 1101). 9. கண்டுபிடித்தல். இக்காலத்தில் ஒவ்வொரு நாளும் புதுப்புது உண் மைகளை அறிந்து வெளியிடுகின்றனர் (பே.வ.). 10.செய்தல். அன்று அறிவாம் என்னாது அறம் செய்க (குறள். 36).

அறி2 பெ. அறிவு. அறிகொன்றுஅறியான் எனினும் (முன் 638)

அறிக்கை பெ. 1. செய்திகளைப் பலரும் அறியத் தெரியப்படுத்துகை. ராசாவுக்கு அறிக்கை பண்ணு கையில் (தெ. இ. க. 22, 66). தானறவுயர்ந்த துன் பந்தனை நினக்கறிக்கை செய்ய (வேதார. பு. மண வாள். 33). தேறும்படி அறிக்கை செய்து (முக் கூடற் 124). இந்தப் புவிக்கே இங்கோர் ஈசனுண் டாயின் அறிக்கையிட்டேன் (பாரதி. ஞானப். 15,7).

49

6

அறிகருவி

...

2. பற்றுவிக்கை. அறிக்கையே பற்றுவித்தலும் ... (அக.நி. அம்முதல். 105). 3. அறிவு. அறிக்கையே அறிவும் ... (முன்.). 4. குற்றத்தை ஒப்புக்கொள்கை. பாவ மன்னிப்பு அறிக்கை (கிறித். வ.). 5. புள்ளி விவரம். (ஆட்சி. அக.) 6. ஒரு பொருளைப் பலவகையாக ஆய்ந்தபின் வெளியிடும் கருத்துத் தொகுப்பு. ஆய்வுக் குழு அறிக்கையை வெளியிட்டது (செய்தி.வ.).

(செ.ப.

அறிக்கைப்பத்திரம் பெ. 1. எழுத்தாலான விளம்பரம். அக.) 2. நிகழ்ச்சி வரலாறு குறிக்கும் ஏடு. சங்கத்தின் மூன்றாம் ஆண்டின் அறிக்கைப்பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது (அருகிய வ.).

அறிக்கைபண்ணு-தல்

5 வி. 1. விளம்பரப்படுத்துதல். (செ.ப. அக.) 2. குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல். (கிறித்.வ.) 3. குற்றஞ் சுமத்துதல். மனுசர் முன் பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ அவனை நானும்... என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன் (விவிலி. மத்தேயு 10, 32).

அறிக்கையிடு-தல் 6 வி. அறிக்கை பண்ணுதல், வெளிப் படுத்தல். காரியத்தை அந்தரங்கமாக அறிக்கையிட் டோம் (தெய்வச். விறலி. தூது 606).

அறிக்கையோலை பெ. செய்தியறிவிக்கும் மடல். திருக்கல்யாண அறிக்கையோலை கொண்டு வந் திருந்த பந்துக்கள் (குருபரம். 277 பன்னீ.).

அறிக்கைவாசி-த்தல் 11 வி. 1. திருமண விளம்பரஞ் செய்தல். மகளுக்குத் திருமணமாதலால் நாளை மாதாகோயிலில் ஐயர் அறிக்கை வாசிப்பார் (கிறித். வ.). 2. நிறுவனங்களின் நடைமுறையை விளக்கி எழுதியதை ஆண்டுவிழாவின் போது படித்தல். ஆண்டுவிழாவில் மன்றச் செயலாளர் அறிக்கை வாசித்தார் (செய்தி.வ.).

அறிகண்ணி பெ. எருக்கங் கிழங்கு.(சங். அக.)

அறிகரி பெ. நிகழ்ச்சிகளைப் பார்த்தும் கேட்டும் அறிந்த சான்று/சாட்சி. அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை (குறுந். 184). அங்கியங் கடவுள் அறிகரி யாக மந்திரவகையாற் கற்பிக்கப்படுதலின் அத் தொழிலைக் கற்பென்றார் (தொல். பொ. 142 நச்.). அறிகரியே தாங்கொண்ட சூலறிவர் தத்தையர் (பெருந். 1768).

அறிகருவி

பெ. உணரும் உறுப்புகள். அறிகருவி

யணையா (சிவப்பிர. 33).