உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பாலிகை1

அம்பாலிகை' பெ. விசித்திரவீரியன் மனைவியர் இருவ ருள் ஒருத்தி. அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பதி (பாரதம். 1, 1, 128).

அம்பாலிகை' பெ. தரும தேவதை. அறத்தின் செல்வி தருமதேவதை அம்பாலிகை பெயரே (பிங்.190). அம்பாலிகை' பெ. தாய் போல்அன்புள்ளவள். (சங். அக.) அம்பாலிகை+ பெ. பார்வதியம்மை. அம்பாலிகை நீ என்னையும் தொண்டு கொண்ட புண்யசாலி (கோமதியந். 29).

அம்பாலிகை" பெ. பவளம். அம்பாலிகை வாயி புன்னைப்பதி முக்கண்ணியே (முன்.). அம்பாவனம் பெ. சரபப்புள். (வின்.)

அம்பாவாடல் பெ. தை மாதம் சிறுமியர் தாயுடன் சேர்ந்து ஆடும் நீராட்டம். அம்பாவாடலின் ஆய்தொடிக் கன் னியர் (பரிபா. 11, 81).

அம்பி 1 பெ. 1. தோணி,கலம். வெற்றியாற்று அம்பி யின் எற்று அற்றாக (புறநா. 261, 4). அம்பியிற் ÿ றோன்றும் மாமலை (அகநா. 187, 23). பௌவம் புணர் அம்பி போன்ற (கள. நாற். 37). ஆயிரம் அம்பிக்கு நாயகன் (கம்பரா. 2, 7, 1). அம்பி இழந்த பெருங்கடல்வாணர் (பாரதம்.9,1,99). 2. ஓடம். துறை அம்பி ஊர்வான் (கலித். 103, 38). அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் (பரிபா. 6, 75). பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் (சிலப். 13,176). அம்பி' பெ. நீரிறைக்கும் கயிறு. (சங். அக.)

அம்பி3 பெ. மிடா. (முன்.)

அம்பி பெ. நீர் இறைக்கும் கருவி, காராம்பி. காராம்பி அம்பி (பிங்.1692).

அம்பி" பெ. தாம்பு. (வின்.)

அம்பி பெ. விமானம். வான் ஊர்பு ஆடும் அம்பி

(பரிபா. 11, 71).

அம்பி' பெ. கள். ஆசவம் ஆம்பல் அம்பி (திவா.

1206).

அம்பி பெ. 1. தம்பி. (பே.வ.) 2. இளையவர் களைப் பெரியவர்கள் அழைக்கும் சொல். அம்பி இங்கே வா (பே.வ.).

அம்பி' பெ. அழிந்து போன விசயநகரப் பேரரசின் தலைநகர். அம்பி நகரும் கெடுக்க வந்த குலாமா (தமிழ்நா.226).

அம்பிகா பெ. அம்பளங்காய். (மரஇன. தொ.)

2