உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியமாறு-தல்

அழியமாறு-தல் 5வி. தன் நிலையை அழித்து வேறா தல். பூமிப்பிராட்டிக்காகத் தன்னையழிய மாறி யும் உதவினவனுடைய திருவடிகளில் திருத்துழா யை ஆசைப்படா நின்றாள் (திருவாய். 4, 2, 6 ஈடு).

அழியல் பெ. வருத்தம், சஞ்சலம். (செ. ப.அக.)

அழியாக்காசு (அழியாத காசு) பெ. செல்லாக் காசு.

(வட்.வ.)

அழியாதகாசு (அழியாக் காசு) பெ.

செல்லாக்காசு.

அழியாத காசு அழியுமோ (முக்கூடற். 94).

அழியாதபத்தினி பெ. (பஞ்சபாண்டவரின் மனைவி யான) திரௌபதி, ஐவர்க்குந்தேவி அழியாத பத் தினி (பழ.அக.2984).

அழியாமுதல் பெ. 1. நிலையான மூலநிதி. (நாட்,வ.) 2.கடவுள். (செ.ப.அக.)

அழியாவியல்பு பெ. அருகன் எண் குணத்துள் ஒன்றான நிலையான தன்மை. அநந்தஞானம் அநந்த தரிச அழியாவியல்பு என்று ஏயும் தகையவாம் (பிங்.429).

னம்

...

அருகன் எண் குணமே

அழியாவிளக்கு பெ. நந்தாவிளக்கு. (ரகசிய.1335)

அழிவது பெ. கெடுதி. அவனை யாம் கிழமை கொள்ள அழிவது உண்டோ (இறை. அக. 28 உரை).

அழிவழக்கு பெ. 1. நேர்முறையல்லாத வழக்கு. வழக்கை அழி வழக்குச் செய்தோன் (தனிப்பா.1, 109, 48). 2. வீண்வாதம். (வட்.வ.) 3. இழிந்தோர் வழக்கு. ஞழியிற்று என்றாற் போல்வன விலக்கி னவும் வருமாலெனின் அவை அழிவழக்கென்று மறுக்க (தொல். எழுத். 64 இளம்.).

அழிவாய் பெ. ஆறு கடலோடு கலக்கும் இடத்திலுள்ள மணல்மேடு. (நாட். வ.)

அழிவி-த்தல் 11 வி. 1. நெகிழச்செய்தல். அழிவித்த வாறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே (தேவா. 4, 91, 5). 2. கெடச்செய்தல். சீறாவரு காலன் சினத்தை அழிவித்தான் (தேவா, 1, 89,5). நின்ற நிலைமை அழிவித்துச் சைவநெறி பாரித்தன்றி (பெரியபு. 21,288).

56

அழிவுகாலம்

அழிவிலான் பெ. கடவுள். அழிவிலான் உரை ஆக மம் (திருவிளை. பு. திருநகரச்சி. 90).

அழிவுபெ. 1. கேடு. ஓரெயில் மன்னன்போல அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே (நற்.43,11). ஆடு எழில் அழிவு அஞ்சாது (கலித். 16, 3). அழி வினவை நீக்கி ஆறுய்த்து (குறள். 787). ஆக்கும் அழிவும் அமைவு நீ (தேவா. 7, 4, 7). அழிவின்றி நின்றதொர் ஆனந்தவெள்ளம் (திருவாச. 36,8). அழிவுஇல் வான்பதம் கொடுத்து (பெரியபு. 7, 47). ஆலோசனையின் அழிவு அகற்றி (அருங்கலச். 148). ஏர்வேந்தர் பெருஞ்செல்வம் அழிவு படாதிருத்தலி னால் (ஏரெழு. 58). அன்று தொட்டு நீயும் எங்கள் அழிவு நாடுகின்றாய் (பாரதி. பாஞ்சாலி. 208). மனஉறுதியின்மை.

2.

அழிவு தலைவந்த சிந்தைக்

அடுக்கி

030

கண்ணும் (தொல். பொ. 109,32 இளம்.). வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் (குறள்.625). ஆனவன் உரை செய அழிவில் சிந்தையாள் வருந்தல் நீ என்றாள் (கம்பரா. 2, 10, 44). 3. வருத்தம். ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் (தொல். பொ. 113, 5 இளம்.). அழிவு கொண்டு ஒரு சிறை இருந்தேன் (புறநா.399,17). அரும்படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும் (கலித். 130, 13). அயர்ந்து மெய் வாடிய அழிவினள் (மணிமே.2,11). ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன் (சீவக.476). 4. தீமை. உயர்ந்ததின் மேல் இரார் உள்ளழிவு செய்யார் (ஆசாரக். 40). அரக்கரோர் அழிவுசெய்து கழிவரேல் (கம்ப ரா. 4,7,87). பழம் இலை காயும் பசிய துறந் தான் அழிவு அகன்ற அச்சித்தன் ஆம் (அருங்கலச். 166). 5. தோல்வி. கறையடிக்கு அழிவு செய்த கண்டகன் (கம்பரா. 4, 7, 150). அரும்புறுகாலைக் கொங்கைக்கு அழிவுற்று சிதைந்தது கமலம் (கந்தபு. 2,1,59). 6. வறுமை. பழி அஞ்சான் வாழும் பசுவும் அழிவினாற் கொண்ட அருந்தவம் விட்டானும் (திரிகடு.79).

...

அழிவு பெ. கழிமுகம். அதோமுகம் புகாரோடு அழிவு கூடல் கழிமுகம் (பிங். 586).

அழிவு பெ. செலவு. வேண்டும் அழிவுக்குப் பொலிசை யூட்டுக்கு வைத்த (தெ.இ.க. 2, 69). கல்லியாண அழிவுக்கு இடுவதான பணம் இருநூறு (புது. கல்.

460).

அழிவுகாலம் பெ. 1. கெட்டகாலம். (நாட். வ.) 2. யாவும் மறையும் ஊழிக்காலம். அழிவு காலத்தில்