உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிவுப்பாட்டபாவம்

தோன்றி யடர்வன படர்வ வானே (சூடா. நி. 12,

76).

அழிவுபாட்டபாவம் பெ.

அழிந்ததனால் அஃதில்லை யென்னும் அபாவம், உள்ளது இல்லாமற் போகை. அழிவுப்பாட்டபாவமும் என ஐந்து அபாவம் (தண்டி. 62). கடம் உடைந்தால் அஃது இல்லை என்கை அழிவுப்பாட்டபாவம் (சி. சி. சுப. 6 மறைஞா.).

அழிவுபாடு பெ. இல்லாமற்போகை. (செ.ப.அக.)

அழிவுறு-தல் 6 வி. நிலை கலங்குதல். அழிவுறு நெஞ் சினன் அரற்றினான் (கம்பரா.3,4,20).

...

அழு1-தல் 1 வி. (உணர்ச்சி காரணமாகக்) கண்ணீர் வடித்தல். தாம்தம் கெழுதகைமையின் அழுதன .. குன்ற நாடற் கண்ட எம் கண்ணே (குறுந். 241). நாம் அழப் பன்னாள் பிரிந்த அறன்இலாளன் (ஐங். 229). வழுத்தினாள் தும்மினேனாக அழித் தழுதாள் (குறள். 1317). முலை கொடுத்துப் போயின தாயை வரவுகாணாது அழுது உறங்கும் (காரை. பதிகம் 1,5). ஆடிப்பாடி அழுது நெக்கு ... அன் புடையவர் (தேவா. 7, 5, 5). அழுத கண்ணினர் இந்தியம் அவித்தவர் என இருந்தனர் (கம்பரா. 4, 10, 110). முன்னுணர்வு மூள அழத் தொடங்கினார் (பெரியபு.28,61). முகிழ் நகையும் தோளும் தொழு தாள் அழுதாள் (குலோத். உலா 250). நெய்பால் அடைகலந்து ஆய் வைத்து வாய் நெரித்து ஊட்ட அழும் ஐயனே (திருவரங்.அந்.18). பசியடங்கிற் றில்லையென அழுமால் ஓர் சேய் (குசே. 71). 2. புலம் பிக் கதறுதல். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண் ணீரன்றே (குறள். 555). செவிலித்தாயார் அவ லித்து அழவும் (பெருங். 1, 46, 306). அழுது திரு வடிக்கே பூசை செய்ய (தேவா. 6, 25, 2). ஈற்றுத் 6,25,2). தாய் பின்தொடர எம்பிரான் என்று அழ (பெரி யாழ்.தி. 3, 9, 4). இன்னபல பன்னி இகல் அரக்கி அழுதிரங்கி (கம்பரா. 3, 5, 114). 3.சிணுங்குதல். (செ.ப.அக.) 4. வருந்துதல். அழக்கொண்ட எல் லாம் அழப்போம் (குறள். 659). இளவாளை ... வேறுவேறாய்க் குறைப்ப அங்காந்து அழுகின்றது (சீவக. 2781). குடல் கூழுக்கு அழக் கொண்டை பூவுக்கழுகிறதா (பழ.அக. 5875). அன்னை கிட்டப் போய் நின்று அழுதேன் (தெய்வச். விறலி. தூது 314). அழு 2 - தல் 1 வி. வீணாகச் செலவு செய்தல். உனக்கு எவ்வளவுதான் அழுகிறது (பே.வ.).

அழுக்ககற்றி பெ. ஆடைகளில் படிந்த அழுக்ககற்றும் காரநீர். (வின்.)

-57

அழுக்கு!

அழுக்ககற்றும்கல் பெ. சுக்காங்கல். (சித். பரி. அக.ப.

156)

அழுக்ககற்றும்பூ பெ. பூநீறு. (முன்.)

அழுக்கடி-த்தல் 11 வி. அழுக்குப்போக்குதல். அழுக் கடிக்கும் வண்ணார் போலாய் (தாயுமா.28,65).

அழுக்கடை-தல் 4 வி. மாசுபடுதல். (பே.வ.)

அழுக்கணவன் பெ. இலை தின்னும் புழு. (வின்.)

அழுக்கம் பெ. 1. கவலை.

அழுக்கமுற்றெழுந்து

இருள் வழிக் கொண்டான் (திருவிளை. பு. 41, 48). 2. பொறாமை. இவன் காண மனத்தழுக்கம் நண்ணி (பெருந்.பு.38,2). 3. (தத்துவம்) மலம். ஆணவம் எனும் உயிர் அழுக்கம் நீங்கிடும் (செவ் வந்திப்பு. 5, 26).

அழுக்கறு-தல் 6 வி. பொறாமை கொள்ளுதல். அழுக் கற்று அகன்றாருமில்லை (குறள். 170).

அழுக்கறு '-த்தல் 11 வி. பொறாமை கொள்ளுதல். கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் (முன். 166).

அழுக்கன் பெ. பொறாமைக்காரன். (பே. வ.)

அழுக்காமை (அழுக்கு', அழுங்காமை, அழுங்குs) பெ. கடல் ஆமை வகை. (oficir.)

அழுக்காறு பெ. பிறர் ஆக்கம் கண்டு பொறாத நிலை. நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு (குறள். 161). அழுக்காறு உரையாமை முன் இனிதே (இனி. நாற். 36). பொய், குறளை, வௌவல், அழுக்காறு இவை நான்கும் ... சிந்தியார் (ஆசாரக். 38). அழுக் காறு அகன்ற ஒழுக்காறோம்பி (பெருங்.2, 4, 45). வெகுளி அவா அழுக்காறு (சேரமான். பொன். 99). அழுக்காறும் மனத்தழுக்கும் அவ்வியமும் மனக் கோட்டம் (பிங். 1927). அழுக்கா றின்மையும் (ஞானா. 4, 4).

அழுக்கு1 பெ. 1. கழிவு, மாசு. அழுக்குடையாக்கை யில் (மணிமே. 3, 94.) அழுக்குப்பாயும் பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறியமாட்டேன் (தேவா. 4, 69, 1). அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன் (தேவா. 7, 54, 1). பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் (நம். திருவிருத். 1). புறத்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்குமூடி (திருவாச. 1,53).