உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுக்கு 2

இக்கந்தை அழுக்கேறி எடுக்கொணாது எனினும் (பெரியபு. 19,119). கனத்த அழுக்குடல் பேணி அறி விழந்து (திருவரங். அந். 33). இரண்டியக்கம் முத லான அழுக்காடை எய்தின் (தணிகைப்பு. அகத். 392). அழுக்கு எடுக்கும் வண்ணான் (மலைய. ப. 28). 2. மனத்திலுள்ள மாசு. புலன் அழுக்கற்ற அந்த ணாளன் (புறநா. 126,11). அழுக்கு அடையா நெஞ்சு உருக (திருவாச. 19, 7). ஒருவன்தன் மனத்தின்கண் குற்றமிலன் ஆதலே எல்லா அறமும் அழுக்குண் டாயின்...ஆரவார நீர்மைய (குறள். 40 மணக் ). உளத்து அருள்முற்ற அழுக்கறும் (செ. பாகவத. 1, 2, 13). அழுக்கார்ந்த நெஞ்சுடையேனுக்கு (தாயுமா. 27,34). உள்ளத்தழுக்கு அறாமையால் அமரர் கண் ணுறங்கார் (திருவிளை. பு. நகரப். 100). உள்ளத்தழுக் கும் உடலிற் குறைகளும் (பாரதி. ஞானப். 142). 3. உயிர்க்குரிய ஆணவம் முதலான மாசு. அமலன் உயிர்க்கு அழுக்கு அறுக்க அறைந்த வாய்மை (சிவ தரு. சிறப்புப்.7). 4. அழுக்குடைய உடல். அரத்தம் மடுத்து அழுக்கை எயிற்று அரைத்தே (தக்க. 480). 5. மாசுபடிந்த ஆடை. நாளும் வண்ணான் அழுக்கு மலர் இவைகள் எதிர் வரநன்மையாம் (அறப்பளீ சத. 64). நேற்றுத்தான் அழுக்குப் போட்டேன் 6. பிள்ளைப் பேற்றிற்குப் பின்வடியும் ஊன்

...

(பே.வ.).

நீர். (செ.ப. அக.)

...

அழுக்கு' (அழுக்காமை, அழுங்காமை, அழுங்கு) பெ. கடல் ஆமை வகை. (al air.)

அழுக்குத்தேமல் பெ. உடலில் அழுக்கினால் தோலில் தோன்றும் புள்ளிகள். (நாட்.வ.)

அழுக்குநீர் பெ. மூக்குநீர். தீர்த்தத்தில் அழுக்குநீர் ஒழுக்கினைப் பட வீழ்த்தோர் (கச்சி. காஞ்சி. இருபத்.

409).

அழுக்குமூட்டை பெ. 1. அழுக்குத் துணிகள்

கட்டப்

பட்ட மூட்டை. (நாட். வ.) 2. குளிக்காமலும் மாசுள்ள ஆடையுடனும் இருப்பவன். (பே.வ.)

அழுகண் பெ. நீர் ஒழுகும் கண் நோய். (செ. ப. அக.)

அழுகண்ணி பெ. பூடுவகை. (சங். அக.)

அழுகணிப்பால் பெ. முலைப்பால். (சித். பரி. அக.ப. 156)

மாசு. 1.தூய்மையின்மை,

குளவி

அழுகல் பெ.

மொய்த்த அழுகல் சின்னீர் பரந்த அழுகல் அளறு அவை

(குறுந். 56). ஆழப்

பீழைப்பதகர் பிறக்

45

58

கும் இடமே (சூளா.1928).

...

அழுகுசப்பாணி

கலகமே விளைத்தான்

வலம் அறும் அழுகல் வாயன் (சிவதரு. 9, 26). 2. பழம் காய் முதலிய உணவுப் பண்டங்கள் பக்குவம் கெடுகை, தனழிவு. அழுகல் பழம் (பே.வ.).

அழுகல்நாரி பெ. கெந்தகவுப்பு. (போகர் நி.20)

அழுகல்விடம் பெ. உடல்தசைகளைக் கெடுக்கும் நஞ்சு (மருத்.க சொ. ப.200)

அழுகலகற்றி பெ. (மருத்) உடல் தாதுக்களை அழுக வொட்டாமல் தடுக்கும் சரக்கு. (குண. 1 ப. 1)

அழுகள்ளன் (அழுங்கள்ளன்) பெ. (அழுவது போல்) பாசாங்கு செய்வோன். (பே.வ.)

அழுகற்சரக்கு பெ. 1. அழுகின காய்கனி முதலியவை. (பே.வ.) 2. விரைவில்அழுகும் தன்மையுள்ள பொருள். (முன்.) 3. அழுகும் சரக்குக்களுக்கு விதிக்கும் வரி. (தெ.இ.க. 2,22)

அழுகற்சிரங்கு பெ. நீர் கசியும் படை. (பே.வ.)

அழுகற்புண் பெ. அழுகின இரணம். (நாட். வ.)

அழுகற்றூற்றல் பெ. விடாத சிறுமழை. ஐப்பசி மாதம் அழுகற்றூற்றல் கார்த்திகைமாதம் மழை (சென். இரா. சொற்பட்டி. ப. 496).

கன

அழுகிச்சேதம் பெ. வெள்ளத்தாலுண்டாகும் பயிர்ச் சேதத்திற்குச் செய்யும் வரி நீக்கம். (நாஞ்.வ.)

அழுகு-தல் 5வி. 1. (நோயால்) உடல் அழிதல். அங்கமெலாம் குறைந்து அழகு தொழுநோயராய் (தேவா. 6, 95, 10). அழுகு திரி குரம்பை (ஐயடிகள். சேத். 9). 2. (நீரில்கிடந்து) பதனழிதல். பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கெட்ட பாசியை எற்றிவிடும் (பாரதி. கண்ணன். 1,5).

அழுகுகால் பெ. நீர்ப் பெருக்கால் அழுகிய நெற்பயிர். (செ.ப.அக. அனு.)

அழுகுசப்பாணி பெ. 1. நக்குதலால் நஞ்சூட்டும் ஒரு வகைப்பாம்பு. (வின்) 2. பாம்பு நக்குதலால் உண் டாகும் நோய். (முன்.)