உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்10

(கம்பரா. 1,7,2). அன்று சூதன் மதலை தன்னை அங்கராசனாக்கினான் (பாரதம். 1,3,70). 2. அங்க நாட்டு மொழி. சிங்களம், துளுவம், அங்கம், ஆரி யம், திகத்தம், சேதி (பாரதம்.5, 5, 19).

அங்கம் 10 பெ. இடம். வான்அங்கத்தவர்க்கும் அளப் பரிய வள்ளல் (தேவா. 7, 67, 1).

அங்கம் 11 பெ. போர். தாபதர் தம்மோடு எம்மோடு அங்கம் வந்துற்றதாக (கம்பரா. 6, 15, 15).

...

அங்கம் 12 பெ. நீர். புனல் அறல் நீர் அங்கம் காண்டமுமே (கயா. நி. 37).

அங்கம் 13 பெ.

வெட்டுகை. அங்கம்... வெட்டலு

மாகும் (பொதி. நி. 2, 14 1.

அங்கம் 14 பெ. அழகு. ஆள்

அங்கமாயுள்ளவன்

(நாட். வ.).

அங்கம் 15 பெ. அடையாளம். (செ.ப.அக.)

அங்கம் 1' பெ. கட்டில். அணை அங்கம் மீதே குல விய நல் கைத்தலங்கொடு துவண்டு (திருப்பு.

429).

அங்கம்மா பெ.

...

அங்காளம்மை. (செ. ப. அக.)

அங்கம்வகி -த்தல் 11வி. ஓர் அமைப்பில் உறுப்பாக / உறுப்பினராக இருத்தல். ஐ.நா.சபையில் இந்தியா அங்கம் வகிக்கிறது (செய்தி.வ.).

அங்கமணி பெ. சீதனம். இதுக்கு... அங்கமணி செய் யலாவது ஏது என்று விசாரித்துக்கொண்டு வருகி றாப்போலே ஆயித்து (தொண்டரடி. திருமாலை

வியாக்.).

37

அங்கமணிக்கூடை பெ. மணப் பெண்ணுக்குக் கூடை யில் வைத்துக் கொடுக்கும் வரிசை. (ராட். அக.)

அங்கமணிதிரவியம் பெ. சீதனப் பணம். பெ. சீதனப் பணம். (தெ. இ.க.

6, 152)

அங்கமந்திரம் பெ. இதயம், சிரம், சிகை, கவசம், நேத் திரம், அத்திரம் என்ற ஆறு இடங்களையும் குறித்துச் சொல்லும் மந்திரம். (சங். அக.)

அங்கமாலை பெ. 1. உடல் உறுப்புக்களைச் சிவனுக் குப் பணி செய்யுமாறு அப்பர் பாடிய தேவாரப் பதிகம். திரு அங்கமாலை (தேவா. 4, 9). 2. மனித அங்கங்

56

அங்கரங்கபோகம்

களை வெண்பாவால், வெளிவிருத்தத்தால், அந்தாதி யுறப் பாடும் பிரபந்தம். (இலக். வி. 835)3. எலும்பு மாலை. அங்கமாலையும் சூடும்.ஐயாறரே (தேவா.

5, 27, 7).

அங்கமூடி பெ. ஆமை. (போகர் நி.19)

அங்கயற்கண்ணம்மை பெ. மீனாட்சியம்மை. பங்கயக் கண்ணான் புகழ்ந்த அங்கயற்க(ண்)ணம்மை (மதுரைச். உலா 6). அங்கயற்க(ண்)ணம்மை இரு பாதப்போது எப்போதும் அகத்துள் வைப்பாம் (திருவிளை. பு. பாயி. 9).

அங்கயற்கண்ணி பெ. (அழகிய மீன்போன்ற கண் களையுடைய) மீனாட்சியம்மை. அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் (தேவா. 3,120,1).

அங்கயோகம்1 பெ. உதயம்,கேந்திரம், மூலத்திரி கோணம், உச்சம் என்ற நான்கு நிலைகளுள் ஒன்றில் வியாழன் நிற்கும் நிலை. (சங். அக.)

அங்கயோகம் 2 பெ.

இமயம் முதலான

எண்வகைப்

படிகளைக் கொண்ட அட்டாங்கயோகம். (செ. ப. அக. அனு.)

அங்கர்1 பெ. அங்க நாட்டார். அங்கர் மாகதர் ஆரி யர் (திருவிளை. பு. 5, 74).

அங்கர்' பெ. இயக்கர். சொல்லில் அங்கர் சதகோடி தொடர்ந்தோர். (கம்பரா. 6, 10, 11. பா. பே.).

அங்கர்கோமான் பெ. (காப்) அங்க நாட்டு மன்ன னான கன்னன், கானீனன் நீள் அங்கர்கோமான் கன்னன் (சூடா.நி.2,16).அடுவிறல் கோன் நெடு விற்கை அங்கர்கோமான் (பாரதம். 8, 2, 17).

அங்கர்கோன் பெ. (காப்) அங்க நாட்டு கன்னன். படிபுகழும் அங்கர்கோன்

மன்னன்

பார்த்து

(பாரத. வெண்.307). அங்கர்கோன் பாகம்தானும்

(பாரதம். 9, 1, 40).

அங்கர்யாரி பெ. நங்கூரத்தைத் தூக்கியெடுக்கும் கப்பிக் கயிறு. (செ.ப. அக.)

அங்கரக்கன் பெ. மெய்க்காவலன். அங்கரக்கர் சத கோடி அமைந்தோர் (கம்பரா. 6, 10, 10).

அங்கரங்கபோகம் பெ. சாமியின் அந்தரங்க வைபவம். அங்தரங்க போகத்துக்கு நடத்தக் ஆதாயமும் கடவதாகவும் (கார். கொங்கு. சத. 86 மேற்.).

600