உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணங்கு

ஆவியோடு அணங்கு பேய் முலை ஊறல் உண் டானரோ (கூர்மபு. பூருவ.29,51).

7

அணங்கு பெ. 1. வடிவு. அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் (சிறுபாண். 86). 2. அழகு. அணங்குடை நேமிமால் (பரிபா. 13,6). அணி .ஆம் யாதும் ஒளி திகழும் ஆர்அணங்கு திருமூர்த்தி (சூளா. 182). அணங்கமர் மாடக்கலைசைத் தியாகர் (கலைசைக். 302). 3. ஆசை. அணங்கு அற்றம் ஆதல் (திருமந்.705).

8

அணங்கு பெ. ஐயம். அணங்கு...ஐயம் (வட.நி.10).

அணங்கு' பெ. குட்டி. ஆளியின் அணங்கும் அரியின் குருளையும் (சிலப். 25, 48 அரும்.).

அணங்குடையாட்டி பெ. தெய்வ ஆவேசங் கொண்டு ஆடுபவள். வாழ்த்தும் அணங்குடையாட்டி (பெரியபு.

10, 67).

அணங்குடையான் பெ. (பெண்ணை இடப்பாகத்தில் உடைய) சிவன். அணங்குடையான் வேதப் புரவி யுடன் வீதிதனைக் கடந்தான் (மதுரைச் உலா

277).

அணங்குதாக்கு பெ. வருத்துந் தெய்வமகளால் தாக் கப்படுகை. அணங்கு தாக்கென்று சொல்வர் (குறள். 918 பரிமே.).

அணங்குறைவாள் பெ. தெய்வாவேசங் கொண்டு ஆடுப வள். ஊணும் உறக்கமும் இன்றி அணங்குறை வாள் (பெரியபு. 10, 153).

அணப்பு பெ. 1. நூற்றைந்து அடிக்கு மேற்பட்ட ஒரு நீட்டலளவை. (செ. ப. அக.) 2. அரை ஏக்கருக்குச் சிறிது மேற்பட்ட பரப்பளவு. இன்று அணப்பு உழவு முடிந்தது (கோவை வ.).

இரண்டு

அணம் பெ. மேல்வாய். மூக்குற்று இதழ் நா அணத்தொழிலின் (நன். 74).

பல்

அணர் 1-தல் 4 வி. 4 வி. 1. மேல்நோக்கி எழுதல். அணரி நுனிநா அண்ணம் ஒற்ற (தொல். எழுத். 94 நச்.). 2. கிளர்தல். ஆயிர அணர்தலை அரவு (பரிபா. 3, 59). 3. கவிந்திருத்தல். அரா அணர் கயந்தலை தம்முன் (பரிபா. 15,19).

அணர்--த்தல் 11 வி.

(படம்) விரித்து எழுதல். அணர்த்தெழு பாம்பின் தலைபோல் (கார்நாற். 11)

1

64

அணவா

அணர் பெ. பக்கம். இட அணரை இடத்தோ ளொடு சாய்த்து (பெரியாழ். தி. 3, 6, 2).

அணரி பெ. 1. மேல்வாய் ஓரம். அணரி அண்ணம் மேல்வாய்ப்புறமே (பிங். 1049). அணரியிலே கறை யையும் (ஞானா. 44 உரை), 2. கீழ்வாய்ப்புறம். அணரியில் தொடரில் பூண்டு முடக்கினை அழுத்தி (கச்சி. காஞ்சி. இருபத். 394),

அணரிடு-தல் 6 69. கொக்கரித்தல். சொக்கனுமங் கணரிட்டுத் துடைதட்டிச் சிரித்தருளி (திருவால. பு.

52, 8).

பாண்.205).

...

அணல் பெ1கழுத்து. கறையணற் குறும்பூழ் (பெரும் தகை வெள்ளேற்று அணல் தாழ்மணி யோசையும் (சீவக.1314). கறை அணல் கட்செவி (ஞானா. 44). கறை அணல் கட்செவி கொண்ட களிறு (உமா. சங்கற்ப நி. காப்பு). 2. கன்னம். மையணற் காளையொடு மடந்தை சென்றனள் (ஐங்.389). 3. தாடி. மையணற்காளை (புறநா. 83, 1). 4. அலைதாடி. நிலம் தூங்கு அணல் வீங்கு முலைச் செருத்தல் (குறுந்.344). தகை வெள் ளேற்றணல் தாழ்மணி ஓசையும் மொய்யணல் ஆனிரை (புற.வெண்.12). 5. மேல் வாய்ப்புறம். கறை அணல்...பாம்பு (கருவூர். திருவிசை. 1). கறை அணல் வாள் அரவம் (கூர்மபு. பூருவ. அணல்கறைப் பாந்தள் எருக்கு நீள்முடி (கருவூர்ப்பு. 8, 14). 6. கீழ்வாய்ப்புறம். அணல் கீழ் வாய்ப்புறம் (பிங். 1048). 7. உண்மிடறு. அணல் மிடறே (பிங். 1045).

1, 12).

(4)

(சீவக. 1314).

அணவல் பெ. பல். (சம். அக./செ.ப. அக. அனு.)

அணவன் பெ. பெ. அணுகியிருப்பவன். அணவன் காண் அன்பு செய்யும் அடியர்க்கே (தேவா. 5,63,4). அணவா (வரு)-தல் 13 வி. 1. (இரையைப் பெறும் ஆர்வத்தோடு) தலையை மேலே தூக்குதல். நாரை

அயிரை ஆர் இரைக்கு அணவந்தாங்கு (குறுந். 128). அருகெழு சிறகொடும் அணவரும் அணிமயில் (பெருந். 100).2. (குடை போன்று) கவிந்திருத்தல். தீயுமிழ் திறலொடு முடிமிசை அணவர (பரிபா.1, 2).3. மேலெடுக்கப்படுதல். நீர்வழிக்கு அணவரும் நெடுங்கைய வாகி (பெருங். 1,54, 42). 4. சேர்தல். அந்தண் மாலையும் அகடுதோ றணவர (முன். 3,14,68).5. அருகாதல், சமீபமாதல். ஆவண வீதி...அணவருமே (இறை. அக. 2 உரை).

அணவா

பெ.

ஒரு பூடுவகை. (சாம்ப. அக.)