உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அப்படிச் செய்வது நியாயம் அன்று என்பதை நான் அறிவேன்; ஆதலின், அவன் பணத்தைக் கேட்ட போது, கொடுத்து விட்டேன். அவன் எனது மேலான குணத்தை எண்ணிச் சந்தோஷம் அடைந்தான்; எனக்குச் சில பரிசுகள் தந்தான். அவற்றையும் யான் பெற மறுத்து விட்டேன். இது மேன்மையான அரிய செய்கையல்லவா?’ என்று கேட்டான்.

அதைக் கேட்ட தந்தை தன் மகனைப் புன்முறுவலோடு நோக்கி, ‘மைந்த, நீ செய்தது நியாயமான செய்கை. மக்கள் நல்ல வழியிலிருந்து, தீய வழியிற் புகுந்தால் பாவம் அடைவார்கள். பாவத்திற்கு அஞ்சி, நீ பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டாய். ஆகவே, நீ செய்தது அரிய செயல் அன்று,’ என்று கூறினன்.

இரண்டாம் மைந்தன் தந்தையை நோக்கி, ‘அப்பா, ஒரு நாள், நான் ஓர் ஏரிக்கரை மேல் நடந்து சென்று கொண்டிருந்தேன். அக்கரையின் மீது விளையாடிக் கொண்டிருந்த சிறுவருள் ஒருவன் தவறி, ஏரியில் விழுந்து விட்டான். அவன் விழுந்ததைப் பலர் பார்த்திருந்தனர். ஆயினும், ஒருவராவது ஏரியில் குதித்து அச்சிறுவனைக் காப்பாற்ற முற்படவில்லை; நான் என் உயிரைப் பொருளாக

18