உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நினைக்கவில்லை; உடனே ஏரியில் குதித்தேன்; அச்சிறுவனை எடுத்துக் கொண்டு கரையேறினேன். சிறுவனின் பெற்றோர்கள் என்னைப் பெரிதும் புகழ்ந்தார்கள். யான் செய்த செயல் மேன்மையானதல்லவா?’ என்றான்.

வணிகன் அவனை நோக்கி, ‘பிள்ளாய், உலகில் பிறந்தவர் அனைவரும் அருளோடு இருக்க வேண்டும். அருள் இல்லாதவர்களை மக்கள் என்று சொல்ல இடம் இல்லை. அருள் உடையவனாயிருந்ததால், நீ அச்சிறுவனைக் காப்பாற்றினாய். நீ செய்ததும் அரிய செயல் அன்று,’ என்றான்.

மூன்றாம் தனயன் தந்தையை நோக்கி, ‘அப்பா, நான் ஒரு நாள் இரவில் வெளியே போய்க் கொண்டிருந்தேன். காரிருள் எங்கும் கவிந்து கொண்டிருந்தது. எதிரில் மனிதர் நிற்பதும் தெரியவில்லை. அந்நள்ளிருளில், எனக்குச் சன்மப் பகையாளி ஒருவன் மலையின் உச்சியில் படுத்து, அயர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்தான். அவன் தூங்குவதைக் கண்டேன் யான். அவன் சிறிது அசைந்தால், உடனே பெரிய பள்ளத்தில் விழுந்து மடிவான். எவ்வாறாயினும், அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகியது. உடனே, யான் அம்மலையினுச்-

19