உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சியை அடைந்தேன்; வெகு சாக்கிரதையாக என் பகையாளியை எழுப்பினேன். அவன் வேறோர் இடத்திற் சென்று படுக்கும்படி ஏற்பாடு செய்தேன். யான் செய்தது அரிய செயல் அன்றோ?’ என்று வினவினன்.

தந்தை மிகுந்த களிப்புற்று, ‘என் அருமை மைந்தனே, நீ செய்ததுதான் அரிய செயல். பகைவனைக் காப்பாற்றிய நீயே என் இரத்தினத்தைப் பெறத் தகுந்தவன்!’ என்று கூறி, இரத்தினத்தை அவனுக்குக் கொடுத்து ஆசீர்வாதம் செய்தனன்.

கேள்விகள்:

1. வியாபாரி தன் திரண்ட செல்வத்தை எவ்வாறு பகிர்ந்து கொடுத்தான்?

2. வியாபாரி தன்னிடம் இருந்த இரத்தினத்தை என்ன செய்தான்?

3. மூன்று பிள்ளைகள் செய்த செயல்கள் யாவை?

4. மூன்று பிள்ளைகள் செய்த செயல்களில் அரிய செயல் எது? எப்படி?

5. மற்ற இரு பிள்ளைகள் செய்த செயல்களைப் பற்றித் தந்தையார் கூறியவற்றை எழுது.

6. மூன்றாம் தனயன் செய்த செயலை தந்தை எப்படிப் பாராட்டினார்?

20