உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உண்மையா என்பதை அறிய அந்த மன்னன் ஆசைப்பட்டான்.

அவன், ஒரு நாள் தன் அரண்மனையில் நடக்கும் விருந்திற்கு இராபர்ட்டை வரவழைத்தான். எல்லாக் கனவான்களும் சென்றிருந்தார்கள். அரசன் வேண்டுகோளின் மேல், விருந்திற்கு வந்த யாவரும் ஆசனங்களில் அமர்ந்தார்கள். ஆனால், இராபர்ட்டுத் துரைக்கு ஓர் ஆசனமும் இல்லை. மேலும், இராபர்ட்டும், அவர் வீரர்களும் வந்தால், அங்குள்ளவர் எல்லாரும் அவர்களைக் கவனியாதவர் போல இருந்து விட வேண்டும் என்றும் கிரேக்க அரசன் கூறியிருந்தான்.

விருந்து ஆரம்பமாகும் நேரத்தில், இராபர்ட்டும் அவர் மெய்காப்பாளரும் அரண்மனையில் நுழைந்தனர். அங்கே ஓர் ஆசனமாவது காலி இல்லாதிருப்பதை இராபர்ட்டுக் கண்டார். தவிர, அவரை ஒருவரும் அங்கே கவனிக்கவில்லை; அவருக்கு ஓர் ஆசனம் கொடுப்பாரும் இல்லை. உடனே அவர் ஒன்றும் பேசாது, நேராக அந்த அறையின் மூலைக்குச் சென்று, தாம் அணிந்து வந்த விலையுயர்ந்த மேலங்கியைக் கழற்றி, நன்றாகச் சுற்றி, அதைக் கீழே வைத்து, அதன் மேல் உட்கார்ந்து கொண்டார். அவர் மெய்காப்பாளரும், தம் அரசர் செய்தவாறே செய்தனர்.

இவ்விதமாய் ஒருவித ஆடம்பரமுமில்லாமல் அவர்கள் அமைதியுடன இருந்து, விருந்து உண்டார்கள். உண்ணும் போது, அவர்கள்

4

37