உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவர்கள் விஜயநகர வமிசத்து அரசர்கள். மதுரையில் ஆண்ட நாயகர்களுள் மிகவும் பிரபலமானவர் திருமலை நாயகர் என்பவர். இவர் வைணவர்.

திருமலை நாயகர் எம்மதத்தினரையும் பகைக்கவில்லை. இவர் காலத்தில் கிறிஸ்தவப் பாதிரிகள் இந்தியாவில் தங்கள் மதத்தைப் போதித்துப் பரவச் செய்தார்கள். கட்டடங்களைக் கட்டினார்கள். இவர் காலத்தில் குடிகள் சமாதானத்துடனும், சந்தோஷத்துடனும் பயமின்றி வாழ்ந்து வந்தார்கள்.

திருமலை நாயகர் முத்துக்கிருஷ்ண நாயகரின் புதல்வர். ‘முத்து வீரப்ப நாயகர்’ என்பவர் திருமலை நாயகருக்குத் தமையனார். அவர் அரசாண்ட பின்னரே, இவர் அரசாண்டார். இவர் திருச்சிராப்பள்ளியைத் தலை நகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார்; சில காலம் கழிந்த பின்னர், மதுரையில் பெரிய அரண்மனையைக் கட்டிக் கொண்டு, அதில் வசித்து வந்தார்; அப்போது மதுரை தலைநகரம் ஆயிற்று. இவர் மதுரையில் வசித்து வந்த அரண்மனைக்குத்தான் திருமலை நாயகர் மஹால் என்பது பெயர். இது மிக்க அழகிய வேலைப்பாடு அமைந்த கட்டடம். இதில் இப்பொழுது பல கச்சேரிகள் இருக்கின்றன.

இவர் திரண்ட பொருளைச் செலவிட்டு அழகிய பல கட்டடங்களைக் கட்டினர்; மதுரையில் பெரிய தெப்பக்குளம் ஒன்றை வெட்டுவித்துப்

44