உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படித் துறைகளை அழகாக அமைத்துள்ளார்; அக்குளத்தைச் சுற்றிலும் கைப்பிடிச் சுவர்களை எழுப்பியுள்ளார். இத்திருமலை நாயகர் கோடை காலத்தில் வசிப்பதற்காக வைகையாற்றின் வடகரையில் ஒரு சிங்கார மாளிகை நிருமித்துள்ளார்; ஸ்ரீரங்கம், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முதலான இடங்களில் அழகான பல கட்டடங்களை அமைத்தார். இவர் கட்டுவித்த கட்டடங்களில், இவர் உருவச் சிலைகள் காணப்படுகின்றன ; மதுரைச் சொக்கேசர் ஆலயத்திற்கு ஏராளமான பொருள் தந்துள்ளார். அக்கோவிலில், திருமலை நாயகரின் உருவச் சிலையும், இவர் பட்டமகிஷியின் உருவச் சிலையும் இருக்கின்றன.

இவர் குடிகளது நன்மையிலேயே கண்ணுங் கருத்துமாய் இருந்தார்; குடிகளுக்குத் தம்மாலும், தம் பரிசனத்தாலும், வேற்றரசராலும், கள்வராலும், விலங்குகளாலும் உண்டாகக் கூடிய துன்பங்களைப் போக்கினார். இவர் அடக்கம், பொறுமை, உண்மை முதலிய சகல நற்குணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவர். இவரது நாட்டில், ஒவ்வொரு மூலை முடுக்கும் இவருக்குத் தெரியும். இவர் இரவில் மாறு வேடம் பூண்டு, நகரி சோதனை செய்து வந்தார். குடிகளுக்கு ஏதேனும் துன்பம் நேரிட்டால், எந்த நேரத்திலும் தம்மிடம் வந்து தெரிவிக்கலாம் என்று பறையறைவித்தார்; பிரயாணிகளுக்கும், மிருகங்களுக்கும் நிழல் தரும் மரங்களைப் பாதைகளில் வைத்து

45