வளர்ப்பித்தார்; பாதைகளில் அங்கங்கே அன்ன சத்திரங்களை உண்டாக்கினார். இவரது நாட்டுக் குடிகள் தங்கள் வீடுகளை மூடுவதே இல்லை. திருடர் பயம் இருந்தால் அல்லவோ வீடுகளை மூட வேண்டும்?
இவரது சமஸ்தானத்தில் இரு பெருங்கவிஞர் இருந்தனர். அவர்களுள் ஒருவர் வைணவ மதத்தினர். அவர் பெயர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பது. மற்றொருவர், சைவ சமயத்தினர். அவர் பெயர் குமரகுருபரர் என்பது.
நாயகர் பல கவிவாணர்களை ஆதரித்து வந்தார்; ஏழைகளையும், பணக்காரர்களையும் சமமாகப் பாவித்து வந்தார்; நியாய பரிபாலனம் செய்யப் பல பஞ்சாயத்துக்காரரை நியமித்தார். இவர், தமது எழுபத்தைந்தாவது வயதில் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.
கேள்விகள்:
1. திருமலை நாயகர் எப்படிப்பட்ட குணமுடையவர்?
2. திருமலை நாயகர் குடிமக்களை எவ்வாறு ஆண்டார்?
3. திருமலை நாயகர் கட்டடப் பிரியர் என்பதை எவ்வாறு அறியலாம்?
4. திருமலை நாயகர் மஹாலைப் பற்றிச் சிறிது கூறு.
5. திருமலை நாயகரது உருவச் சிலைகளை எங்கெங்குக் காணலாம்?
6. திருமலை நாயகரது சம்ஸ்தானத்தில் இருந்த இரு-பெரும் கவிஞர் யாவர்?
46