உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

III
அராபியர்களின் தேசீய இயக்கம்

ரோப்பிய யுத்தத்திற்கு முன்னர் அராபியா, பாலஸ்தீனம், சிரியா முதலிய நாடுகள் துருக்கிய ஏகாதிபத்தியத்துக்குட் பட்டிருந்தனவல்லவா? இந்தப் பிரதேசங்களிலுள்ள அராபியர்கள், துருக்கிய சாம்ராஜ்யத்தினின்று விடுதலையடைய வேண்டுமென்று கிளர்ச்சி செய்து வந்தார்கள். இவர்களிடையே தேசீய உணர்ச்சியானது வலுத்து வந்தது. இந்த உணர்ச்சியின் வெளித் தோற்றந்தான் 1911ம் வருஷம் பாரிஸில் கூடிய அராபிய காங்கிரஸ். ஆனால் இந்தத் தேசீய இயக்கமானது, அராபியர்களில், படித்த வகுப்பாரிடையே மட்டுந்தான் பரவியிருந்தது. பாமர ஜனங்கள், இந்த இயக்கத்தில் தங்களைச் சம்பந்தப் படுத்திக் கொள்ளவில்லை. படித்த வகுப்பாரும், இதற்கான முயற்சிகளை எடுத்துக் கொள்ளவில்லை. இங்ஙனம் ஒரு சிறு கூட்டத்தாரிடையே தேசீய உணர்ச்சி பரவியிருந்ததைக் கூட அப்பொழுதைய துருக்கிய அரசாங்கம் விரும்பவில்லை. சில அடக்குமுறைகளைக் கையாண்டது. இந்த நிலையில் ஐரோப்பிய யுத்தம் ஏற்பட்டது. துருக்கியின் நிருவாகத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு, இந்த யுத்தத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/30&oldid=1671385" இலிருந்து மீள்விக்கப்பட்டது