யூதர் குடியேற்றத்தின் விளைவு
37
னால், பாலஸ்தீனத்தில் ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு அராபிய முதலாளி இனம் ஒன்று தோன்றி விட்டது. சிறப்பாகக் கடலோரப் பிரதேசங்களில், யூதர்களுக்குப் போட்டியாக, அராபியர்களும் பெரிய, பெரிய பழத்தோட்டங்கள் வைத்து, அதில் வியாபாரம் செய்கிறார்கள். 1931ம் வருஷத்தில், அராபியர்களுக்குச் சொந்தமாக 14,740 ஏக்கரா விஸ்தீரணமுள்ள ஆரஞ்சு, திராட்சை முதலியன விளையும் பழத் தோட்டங்கள் இருந்தன. 1935ம் வருஷத்தில் இவை 34,000 ஏக்கராவுக்குப் பெருகின. 1914ம் வருஷத் தொடக்கத்தில் அராபியர்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் 1,235. 1936ம் வருஷத்தில் இவை 2,290க்குப் பெருகின. இங்ஙனம், பெருகி வரும் அராபிய முதலாளி இனமானது, தன்னை விட தொழில் திறமையிலும், பணத்திலும் முற்போக்கடைந்துள்ள யூத முதலாளி இனத்தோடு அடிக்கடி போட்டி போட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதனால், முன்னது தேசிய மனப்பான்மை கொண்டதாயிருப்பதில் ஆச்சரிய மில்லையல்லவா? தேசீய விடுதலை ஏற்பட்டால்தானே, அந்நியர்களின் பொருளாதார ஆதிக்கம் குறையும்.