உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V
யூதர்கள் சாதித்ததென்ன?

பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறியதைப் பற்றியும், அவர்கள் அந்த நாட்டில் என்னென்ன காரியங்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் சிறிது கூறுவோம். பாலஸ்தீனத்தின் நிருவாகத்தைப் பிரிட்டன் ஏற்றுக் கொண்ட பிறகு, இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் உள்ள யூத முதலாளிகள், தங்களுடைய மூலதனத்தை பாலஸ்தீனத்தில் அதிகமாகக் கொண்டு போட்டார்கள். தங்களுடைய பூர்விக நாடான பாலஸ்தீனம், மீண்டும் தங்களுடைய உரிமை நாடாக்கப் பட்டதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து, பாலஸ்தீனத்திலேயே நிரந்தர வாசம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு, உலகத்தின் பல பாகங்களிலிருந்தும், அநேக யூதர்கள் வந்து குடியேறினார்கள். மத்திய ஐரோப்பிய நாடுகளில் யூத துவேஷம் வளர, வளர பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றமும் அதிகமாகிக் கொண்டு வந்தது. சிறப்பாக, ஹிட்லர் 1933ம் வருஷம் மார்ச் மாதம் ஜெர்மனியின் சர்வாதிகாரியான பிறகு, பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடிப் பெருக்கம் அதிகம். உதாரணமாக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/48&oldid=1671989" இலிருந்து மீள்விக்கப்பட்டது