உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யூதர்கள்‌ சாதித்ததென்ன?

39

1932
ம் வருஷம்
9,553
யூதர்கள்
1933
"
30,327
"
1934
"
42,359
"
1935
"
61,854
"

பாலஸ்தீனத்தில் குடிபுகுந்திருக்கிறார்கள். இங்ஙனமே, வருஷந்தோறும் சராசரி 50,000 யூதர்கள் விகிதம் குடி புகுவார்களானால், 1950ம் வருஷத்தில் அராபியர்களை விட, யூதர்களே பெரும்பான்மையோரான சமூகத்தினராகி விடுவரென்று ஓர் அறிஞன் கருதுகிறான்.

குடி புகுந்த யூதர்கள், மேனாட்டு சமுதாய அமைப்பை அப்படியே கொண்டு வந்து புகுத்தினார்கள். அதனோடு, தங்கள் உழைப்பினாலும், திறமையினாலும், எந்தத் தொழிலில் பிரவேசித்தாலும், அதனை அபிவிருத்தி செய்தார்கள். ஆயிரம் பவுன் மூலதனமுள்ள எந்த யூதனும், தாராளமாகக் குடியேறலாம் என்ற விதி அநேக சிறிய பணக்காரர்களை, பாலஸ்தீனத்தில் கொண்டு நிரப்பியது. இவர்கள் தனிப்பட்ட முறையில் வியாபாரம், விவசாயம் முதலியன செய்து வந்ததோடு கூட, பொதுவுடமை முறையிலும் விவசாயம், வியாபாரம் முதலியன செய்து வந்தார்கள். சமுதாயத்திற்குப் பொதுவான விவசாய நிலங்கள், தொழில் ஸ்தாபனங்கள் முதலிய-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/49&oldid=1672004" இலிருந்து மீள்விக்கப்பட்டது