உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பாலஸ்தீனம்

வற்றைச் சுற்றி அநேக யூத நகரங்கள் நவீன நாகரிக முறையில் தோன்றி யிருக்கின்றன.[1]

ஜாபா நகரத்திற்கு வெளியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வெறும் மணற்காடாக இருந்த இடம் இப்பொழுது டெல்—அவீவ் (Tel—Aviv) என்ற சிறந்த யூத நகரமாக விளங்குகிறது. இதில் சுமார் 1½ லட்சம் யூதர்கள் வசிக்கிறார்கள். இவை தவிர, யூத முதலாளிகள் பிரிட்டிஷ், அமெரிக்க முதலாளிகளின் துணை கொண்டு


  1. இந்தப் பொதுவுடமை விவசாய ஸ்தாபனங்கள் யூதர்களின் ஒழுங்கிற்கும், கட்டுப்பாட்டிற்கும் சிறந்த உதாரணங்களாய் விளங்குகின்றன. இவைகளுக்கு ‘க்வூஸோ’ (Kvutzot) என்று பெயர். இங்ஙனம் சுமார் 230 ‘க்வூஸோ’க்கள் இருக்கின்றன. ஒரு குடும்பத்தினரைப் போலவே, இங்குள்ளவர்கள் வசிக்கிறார்கள். எல்லோருக்கும் பொதுவான சமையல், பொதுவான கடை, பள்ளிக்கூடம், புஸ்தகசாலை முதலியன இருக்கின்றன. எல்லாரும் சேர்ந்துதான் இங்கு வேலை செய்கிறார்கள். கூலிக்கு ஆட்களை அமர்த்துவது கிடையாது. அவரவர் திறமைக்கும், தேவைக்கும் தகுந்தபடி வேலை செய்ய வேண்டும் என்ற நியதி அநுஷ்டானத்தில் இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய உழைப்பை சமுதாயத்திற்குக் கொடுத்து, அதற்குப் பதில் தங்களுடைய தேவைகளை அந்தச் சமுதாயத்திலிருந்தே பெறுகிறார்கள். சமுதாய அந்தஸ்து விஷயத்திலோ, பொருளாதார நிலைமை காரணமாகவோ எவ்வித வேற்றுமையும் இங்குக் காண்பிக்கப்படுவதில்லை. ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் சம அந்தஸ்தும், சம சுதந்திரமும் உண்டு. ஒவ்வொரு ‘க்வூஸோ’விலும் சராசரி 100 பேருக்கு மேல் 700 பேர் வரையில் வசிக்கிறார்கள். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்று பணமாக்க, ‘மத்திய கூட்டுறவு ஸ்தாபனம்’ ஒன்றிருக்கிறது. ‘யூத தேசீய நிதி’யிலிருந்து இந்த ‘க்வூஸோ’க்களுக்குப் பணவுதவி கிடைக்கிறதென்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/50&oldid=1672012" இலிருந்து மீள்விக்கப்பட்டது