யூதர்கள் சாதித்ததென்ன?
41
பாலஸ்தீனத்தின் இயற்கைப் பொருள்கள் பலவற்றைச் சுரண்டி வியாபாரப் பொருள்களாக விநியோகிக்கக் கூடிய வண்ணம் அநேக தொழில் ஸ்தாபனங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ‘டெட் ஸீ பொடாஷ் கம்பெனி’[1] ‘பாலஸ்தீன் எலெக்ட்ரிக் கார்ப்பொரேஷன்’[2] ‘நெஷர் சிமெண்ட் கம்பெனி’[3] ஆகிய இந்த மூன்றும் பாலஸ்தீனத்தின் பெரிய தொழில் ஸ்தாபனங்கள். இந்த மூன்றிலும், யூத, பிரிட்டிஷ், அமெரிக்க மூலதனம் சேர்ந்திருக்கிறது.
இந்தப் புதிய நகரங்களையும், தொழில் ஸ்தாபனங்களையும் எடுத்துக் காட்டி ‘எங்களுடைய குடியேற்றத்தினால் பாலஸ்தீனத்தில் என்னென்ன சாதகங்கள் ஏற்பட்டிருக்கின்றன பார்த்தீர்களா’ என்று யூதர்கள் பெருமையாகப் பேசுகிறார்கள். இவர்கள் கூறும் வாதங்களில் சில வருமாறு:-
1 உலகனைத்தும் பொருளாதார மந்தத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், பாலஸ்தீனம் ஒன்றுதான் அதனால் பாதிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் எங்களுடைய வியாபாரத் திறமைதான்.
2 எங்கள் குடிப் பெருக்கத்தினால், தேசத்தின் செல்வ நிலை உயர்ந்திருக்கிறது.