84
பாலஸ்தீனம்
பெர்க்கில் நடைபெற்ற நாஜி காங்கிரஸுக்கு, பாலஸ்தீனத்திலிருந்து, நூறு அராபியர்கள் வரவழைக்கப்பட்டு கௌரவமாக உபசரிக்கப் பட்டார்கள். தவிர, பாலஸ்தீனத்தில் கலகம் நடைபெறத் தொடங்கிய காலத்திலிருந்து, சிரியா, லெபனோன் முதலிய நாடுகளில், இத்தலியின் பிரதிநிதிகளும், ஜெர்மனியின் பிரதிநிதிகளும் அதிக சுறுசுறுப்பாயிருந்தார்கள் என்றும், இதன் பயனாகவே, பாலஸ்தீனத்தின் சில பாகங்களில், யூதர்களின் மீதிருந்த துவேஷம் வளர்ந்து ஸ்திரீகளும், குழந்தைகளுங் கூடக் கொல்லப்பட்டார்களென்றும் சொல்லப்படுகின்றன.
பிரிட்டன், இனி என்ன செய்வதென்று யோசித்தது. கீழைப் பிரதேசங்களில் அது செலுத்தி வந்த அதிகாரத்திற்கும், அநுபவித்து வந்த கௌரவத்திற்குமல்லவோ குழி தோண்டப் படுகிறது. ஆகவே, இன்னும், கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லையென்று தீர்மானித்தது. 1938ம் வருஷம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் குடியேற்ற நாட்டு மந்திரியாகிய ஸ்ரீ மால்கோம் மாக்டோனால்ட் பாலஸ்தீனத்திற்கும், இதற்குப் பிரதி மரியாதை செலுத்துவது போல், பாலஸ்தீன ஹை கமிஷனரான ஸர் ஹாரோல்ட் மக் மைக்கேல் லண்டனுக்கும் விஜயஞ் செய்தார்கள். புதிய ராணுவப் படைகள் பல பாலஸ்தீனத்திற்கு வந்து சேர்ந்தன. அடக்கு முறைகள், முன்னிலும் வேகமாகப் பிரயோகிக்கப்பட்டன. ஹை கமிஷனருக்கு விசேஷ அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, அவை