பிரிவினைப் பிரச்னை
83
னத்தை இழுத்தன. சிரியா, ஈராக், எகிப்து முதலிய நாடுகளிலுள்ள அராபியர்கள், பாலஸ்தீனத்தில் நடைபெறும் அடக்கு முறைகளைக் கண்டித்துக் கிளர்ச்சி செய்தனர். எகிப்திலுள்ள தேசியக் கட்சியினராகிய ‘வாய்த்’ (Waid) கட்சியினர், பாலஸ்தீனப் போராட்டத்தில் துன்புற்று அவதிப்படுவோருக்கு, ‘கஷ்ட நிவாரண நிதி’யொன்று ஏற்படுத்தி, ஏராளமான நன்கொடைகளை வசூலித்து அனுப்பித் தங்கள் ஆதரவைக் காட்டினர். தவிர, இவர்கள், கெய்ரோ நகரத்தில், 1938ம் வருஷம் அக்டோபர் மாதம் 10ந் தேதி சர்வ அராபிய மகாநாடு ஒன்று கூட்டுவித்து, பாலஸ்தீனம் சுதந்திர அராபிய நாடாக்கப்பட வேண்டுமென்றும், அந்நாட்டில் யூதர்கள் குடி புகுவதை உடனே நிறுத்த வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றி வைத்தனர்.
பாலஸ்தீன அராபியர்கள், இங்ஙனம் சுற்றுப்புறமுள்ள இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு பெற்றதோடு, சர்வதேசப் பிரச்னைகளில், பாலஸ்தீனத்தையும் கொண்டு புகுத்தும் நிலையை உண்டு பண்ணினர். ஹிட்லரும், நாஜி கட்சியினரும், பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷார் அநுஷ்டிக்கிற கொள்கைகளைப் பரிகசித்துப் பேசி வந்தனர். மற்றும், ஐரோப்பாவின் தென்கிழக்குப் பக்கம், தனது ஏகாதிபத்தியத்தை விரிக்க வேண்டுமென்ற கொள்கையை முன்னிட்டு, நாஜி ஜெர்மனியானது, அராபியர்களுக்கு ஆதரவு காட்ட வேண்டியது அவசியமாயிருந்தது. 1938ம் வருஷம் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நியுரென்-