82
பாலஸ்தீனம்
பழைய நகரம் கலகக்காரர்களின் சுவாதீனமாகியது. ரெயில்வே போக்குவரத்துக்களைக் கூட அரசாங்கத்தார் உபயோகிக்க முடியவில்லை. அரசாங்க நீதி ஸ்தலங்கள் சரியானபடி வேலை செய்யவில்லை. ஆனால், அராபிய கலகக்காரர்களோ, ஜில்லாக்கள் தோறும் நீதி ஸ்தலங்கள் ஏற்படுத்தி, அரசாங்கக் கோர்ட்டுகளிலிருந்து வரும் அப்பீல் வழக்குகளை யெல்லாம் விசாரணை செய்து தீர்ப்புக் கூறி வந்தனர். அராபியர்கள் இதுகாறும், சாதாரணமாகக் குல்லாய் (தார்புஷ்) அணிந்து வந்தனர். அதற்குப் பதில் அராபியர்களின் தேசீய தலையணியாகிய சிறு துண்டும், அதன் மீது கயிறும் தரித்துக் கொள்ள வேண்டுமென்று கட்டளை பிறந்தது. இதன்படியே, எல்லா ஜனங்களும் தங்கள் தலையணியை மாற்றிக் கொண்டு விட்டார்கள். கிராமாதிகாரிகள், கலகக்காரர்களுடைய உத்திரவுகளுக்குத்தான் கீழ்ப் படிந்தார்களே தவிர, அரசாங்கத்தாருக்குக் கீழ்ப் படிய மறுத்து விட்டார்கள். விஸ்தரித்துக் கொண்டு போவானேன்? கலகக்காரர்கள் போட்டி அரசாங்கம் ஏற்படுத்தி, உத்திரவுகள் பிறப்பித்து வந்தனர்; வரிகள் வசூல் செய்தனர்; அவசரக் கோர்ட்டுகள் ஏற்படுத்தி, தேசத் துரோகிகளுக்கு மரண தண்டனை விதித்து வந்தனர். இந்த அரசாங்க நிருவாக காரியங்களையெல்லாம் சூத்திரதாரியாயிருந்து நடத்தி வைப்பது, பெய்ரத் நகரத்தில் அஞ்ஞாதவாசம் செய்யும் ‘மப்டி’யே என்று சொல்லப்பட்டது.
தவிர, பாலஸ்தீனத்தில் நடைபெறும் இந்தச் சம்பவங்கள், சுற்றுப்புறமுள்ள நாடுகளின் கவ-