உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவினைப் பிரச்னை

81

பெயர்க்கப்பட்டன; 7 தடவைகளில், பெட்ரோல் எண்ணெய்க் குழாய்களுக்குச் சேதம் உண்டு பண்ணப்பட்டது. ஜெருசலேம் நகரத்திற்குத் தண்ணீர் ‘சப்ளை’ நடவாதபடியும் முயற்சிகள் செய்யப்பட்டன. மேற்படி ஆகஸ்ட் மாதம் 24ந் தேதி, வட ஜில்லாவின் கமிஷனர், ஜெனின் என்ற ஊரில், ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு மேலே முகாம் செய்திருந்த போது சுட்டுக் கொல்லப் பட்டான்.

1938ம் வருஷம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், பாலஸ்தீனக் கலகமானது, ஒரு சிலர் சேர்ந்து கொண்டு, அங்குமிங்குமாகச் சில சேதங்களை உண்டு பண்ணுவதென்ற நிலைமையிலிருந்து மாறி, நாடு முழுவதிலும் அரசாங்க அதிகாரத்திற்கு மதிப்பு இல்லாதபடி செய்து விட்ட ஒரு நிலைமைக்குப் பிரவேசித்தது. அரசாங்க ஆதிக்கம் இங்ஙனம் மதிப்பிழந்து நின்றதைத் தாங்கள் இதுவரை பாலஸ்தீனத்திலோ, மற்றக் கீழைப் பிரதேசங்களிலோ பார்த்ததில்லையென்று, பிரிட்டிஷ் பத்திரிகைகளின் நிருபர்கள், தங்கள், தங்கள் பத்திரிகைகளுக்குச் செய்திகள் அனுப்பிக் கொண்டு வந்தார்கள். பிரிட்டிஷ் துருப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடங்களாகிய ஜெருசலேம், டெல் அவீவ், ஹைபா முதலிய நகரங்களைத் தவிர, மற்ற எல்லா இடங்களும், வாரங்கள் கணக்காகக் கலகக்காரர்களின் வசமே இருந்தன. நல்ல பட்டப்பகலில்தான் பெத்ல்ஹெம் நகரம் கலகக்காரர்கள் வசம் சிக்கியது. ஜெருசலேத்தின் புதிய துருப்புகள் இருந்து கொண்டிருக்கையில்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/91&oldid=1672439" இலிருந்து மீள்விக்கப்பட்டது