உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பாலஸ்தீனம்

கையெழுத்திட்டாலும் அதை அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.

இங்ஙனம் பயந்து கூறிய ஹாஸன் சித்தி தாஜானி, 1938ம் வருஷம் அக்டோபர் மாதம் 13ந்தேதி கொலை செய்யப்பட்டு விட்டானென்றால், அராபியப் பொது ஜனங்களின் ஆத்திரம் எவ்வளவு உச்ச நிலையிலிருந்ததென்பதை நாம் விவரித்துக் கூற வேண்டிய தில்லையல்லவர?

இது காறும் கூறியவாற்றான், பிரிவினைக்குச் சாதகமாக, அராபியரிலே ஒரு சாரார் கூட இல்லையென்பது தெரிந்து விட்டது. தலைவர்களை அடக்கி விட்டால், இயக்கமும் அடங்கி விடுமென்று அரசாங்கத்தார் கருதியதும் தவறு என்று இப்பொழுது நிச்சயிக்கலாமல்லலா? இதற்குப் பதிலாக, 1938ம் வருஷ இடைக் காலத்திலிருந்து, பாலஸ்தீனக் கலகமானது, அதி தீவிரமாகவும், முன்னை விட அதிக கட்டுப் பாட்டுடனும் நடைபெற்று வரத் தொடங்கியது.

1938ம் வருஷம் ஜூலை மாதம், வெடி குண்டெறிதல், போக்கு வரவு சாதனங்களைத் தடை செய்தல் முதலிய பலாத்காரச் செயல்கள் நடைபெறத் தொடங்கின. ஹைபா என்ற நகரத்தில், இரண்டு முறை வெடிகுண்டுகள் வெடித்துச் சுமார் நூறு பேருக்குச் சேதம் உண்டாயிற்று. 1938ம் வருஷம் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 250 பேர் கொல்லப்பட்டனர்; 300 பேர் காயமடைந்தனர்; 40 கொள்ளைகள் நடை பெற்றன; 20 இடங்களில் ரெயில்வே தண்டவாளங்களுக்குச் சேதம் உண்டாக்கப் பட்டது; 11 இடங்களில் மரங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/90&oldid=1672438" இலிருந்து மீள்விக்கப்பட்டது