உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரிவினைப் பிரச்னை

79

விட்டமையாலும், நாஷா ஷீபி குடும்பத்தினர், பகிரங்கமாகவே, இனித் தம்மை ஆதரிக்கக் கூடுமென்று அரசாங்கத்தார் எதிர்பார்த்தனர். அதற்கு மாறாக, ‘அராபிய பெரிய கமிட்டி’ கலைக்கப்பட்டவுடனேயே, மேற்படி நாஷா ஷீபி குடும்பத்தினர், பிரிவினையை எதிர்த்து ஓர் அறிக்கை வெளியிட்டனர். பொதுவாகவே இந்தக் காலத்தில், பிரிட்டனுடன் ஒத்துழைக்க வேண்டுமென்ற அபிப்பிராயங் கொண்டவர்கள் கூட, தங்கள் அபிப்பிராயத்கைப் பகிரங்கமாகச் சொல்ல அஞ்சினர். இதற்கு ஒரு சிறிய உதாரணம். 1936ம் வருஷக் கலகத்தின் போது, அராபியத் தலைவர்கள் பலர் காப்பில் வைக்கப்பட்டனரல்லவா? அவருள் ஒருவரான ஹாஸன் சித்தி தாஜானி, டக்ளஸ் டப் என்ற ஒரு போலீஸ் உத்தியோகஸ்தரிடம் பின் வருமாறு கூறியதாகத் தெரிகிறது:-

இந்தக் கலகத்தில் தலைவர்களாகிய எங்களுக்கு, பாலஸ்தீன அரசாங்கத்தோடு சமரஸம் பேசக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்காது. இதற்கு முன்னர் நாங்கள் சமரஸம் செய்து வைத்தோம் என்பது உண்மைதான். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. இளைஞர்கள், பிரிட்டனைத் தங்கள் பரம சத்துருவாகக் கருதுகிறார்கள். தலைவர்களாகிய நாங்கள், எங்கள் பிராணனுக்குப் பயந்து, அரசாங்கத்துடன் எவ்வித சமரஸமும் செய்து கொள்ள மறுக்கிறோம். இளைஞர்களுக்குப் பிரதிநிதிகளாயிருந்து, நாங்கள் எந்த யாதாஸ்தில்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/89&oldid=1672437" இலிருந்து மீள்விக்கப்பட்டது